Published:Updated:

கிரிக்கெட் சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் செயல் அதிகாரி குருநாத்துக்கு சம்மன்

கிரிக்கெட் சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் செயல் அதிகாரி குருநாத்துக்கு சம்மன்
கிரிக்கெட் சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் செயல் அதிகாரி குருநாத்துக்கு சம்மன்
கிரிக்கெட் சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் செயல் அதிகாரி குருநாத்துக்கு சம்மன்

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட்  சூதாட்டம் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி குருநாத்திடம் மும்பை போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர்.

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள விண்டூ தாரா சிங்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய புள்ளியுடன் அடிக்கடி தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அந்த முக்கிய புள்ளி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசனின் மருமகனும்,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதன்மை மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான குருநாத் மெய்யப்பன் தான் என்று போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி குருநாத் மெய்யப்பனிடம் விசாரணை நடத்த மும்பை போலீசார் இன்று சென்னை வந்தனர்.

முதலில், சென்னை போர்ட் கிளப்பில் உள்ள பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன் வீட்டிற்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர். காலை 10 மணிக்கு சென்ற போலீசார் சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.

##~~##
இதைத் தொடர்ந்து, சென்னை செனடாப் சாலையில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி குருநாத் வீட்டிற்கு மும்பை போலீசார் சென்றனர்.
அப்போது, குருநாத் இல்லாததால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி வீட்டில் உள்ளவர்களிடம் போலீசார் சம்மனை கொடுத்து சென்றனர்.