Published:Updated:

கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன், குருநாத்திடம் மும்பை போலீஸ் விசாரணை

கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன்,  குருநாத்திடம் மும்பை போலீஸ் விசாரணை
கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன், குருநாத்திடம் மும்பை போலீஸ் விசாரணை

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஸ்ரீனிவாசன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான குருநாத் மெய்யப்பன் ஆகியோரிடம் மும்பை போலீசார் இன்று நேரில் விசாரணை நடத்தினர்.

கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன்,  குருநாத்திடம் மும்பை போலீஸ் விசாரணை

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக வீரர்கள் மற்றும் தரகர்கள் கைதாகி வரும் நிலையில், இந்தி்ய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் (பிசிசிஐ) ஸ்ரீனிவாசனின் உறவினரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான குருநாத் மெய்யப்பன் இதில் தொடர்பு கொண்டிருப்பதாக மும்பை போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

சூதாட்டத் தரகர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாக கைது செய்யப்பட்ட நடிகர் விண்டு தாராசிங்கின் செல்போனை மும்பை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, சென்னை அணியின் தலைவர் குருநாத்துடன் விண்டு தாராசிங் பேசிய அடுத்த நிமிடம் அவர், சூதாட்டத் தரகர்களுடனும் பேசியிருப்பதைக் கண்டறிந்தனர்.

##~~##
எனவே, இந்த சூதாட்டத்தில் குருநாத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்று மும்பை போலீசார் சந்தேகப்பட்டனர். அதன் அடிப்படையில் இன்று காலை சென்னை வந்த மும்பை போலீசார் குருநாத்திடமும், ஸ்ரீனிவாசனிடமும் விசாரணை நடத்தினர். சென்னை போட் கிளப்பில் உள்ள ஸ்ரீனிவாசன் வீட்டில் இந்த விசாரணை நடந்தது.
ஸ்ரீனிவாசன் சூதாட்ட தொடர்பில் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்று தெரிவித்த போலீசார், அவரது உறவினர் சிக்கியிருப்பதால் ஸ்ரீனிவாசனிடம் இதுகுறித்து விசாரணை நடத்தியதாக தெரிவித்தனர்.
இதனிடையே, சென்னை செனடாப் சாலையில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி வீட்டிற்கு மும்பை போலீஸார் நான்கு பேர் சென்றனர்.
அப்போது, கிரிக்கெட் சூதாட்டப் புகாரில் செயல் அதிகாரி குருநாத்திடம் விசாரணை நடத்த அவர்கள் தி்ட்டமிட்டுள்ளனர்.
படம்: சொ.பாலசுப்ரமணியன்