Published:Updated:

ஒரு பந்து... 542 ஃபீல்டர்கள்...

ஒரு பந்து... 542 ஃபீல்டர்கள்...
பிரீமியம் ஸ்டோரி
ஒரு பந்து... 542 ஃபீல்டர்கள்...

ஒரு பந்து... 542 ஃபீல்டர்கள்...

ஒரு பந்து... 542 ஃபீல்டர்கள்...

ஒரு பந்து... 542 ஃபீல்டர்கள்...

Published:Updated:
ஒரு பந்து... 542 ஃபீல்டர்கள்...
பிரீமியம் ஸ்டோரி
ஒரு பந்து... 542 ஃபீல்டர்கள்...

2019 கிரிக்கெட் உலகக் கோப்பை ஜோராக ஆரம்பித்திருக்கிறது. 10 அணிகளும் கோப்பைக்காக மல்லுக்கட்டத் தொடங்கிவிட்டன. முதல் வார சுவாரஸ்யங்கள் இங்கே...

• உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்குவதற்கு முன், 10 அணிகளின் கேப்டன்களும் இங்கிலாந்து ராணியையும், இளவரசர் ஹேரியையும் சந்தித்தனர். 9 கேப்டன்களும் கோட் சூட்டில் இருக்க, பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அஹமது மட்டும் நீண்ட குர்தா அணிந்திருந்தார். “எங்கள் நாட்டின் கலாசாரத்தைப் பறைசாற்றும் விதமாக அந்த உடையை அணிந்திருந்தேன். மற்ற கேப்டன்கள் சூட் அணிந்திருக்கையில், நான் அந்த உடையில் இருந்ததை நினைத்துப் பெருமைப்படுகிறேன்” என்று எமோஷனலாகக் கூறினார் சர்ஃபராஸ்.

ஒரு பந்து... 542 ஃபீல்டர்கள்...

• இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் போட்டியில், ஸ்பைடர் மேன் போல் பாய்ந்து பென் ஸ்டோக்ஸ் பிடித்த கேட்ச் ‘கிரிக்கெட்டின் சிறந்த கேட்ச்’ என்ற அளவுக்குப் பாராட்டப்பட்டது. ரசிகர்கள், வீரர்கள், வல்லுநர்கள் என அனைவரும் புகழ்ந்து தள்ள, இப்போது அனலிஸ்ட்கள் அவர்கள் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். தென்னாப்பிரிக்க வீரர் ஃபெலுக்வாயா பேட்டில் பட்ட பந்து, ஸ்டோக்ஸ் கையை அடைய எடுத்துக்கொண்ட நேரம் 2.55 விநாடிகள், அந்த ஷாட் அடிக்கப்பட்டது மணிக்கு 65.8 மைல் வேகத்தில். அதேசமயம், அந்த கேட்சைப் பிடித்தபோது, ஸ்டோக்ஸின் கை இருந்த உயரம், 8 அடி 8 அங்குலம்! அம்மாடியோவ்... நிஜமாலுமே கிரிக்கெட் வரலாற்றின் மிகச் சிறந்த கேட்ச்களுள் ஒன்றுதான்!

• வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நடனம் ஆடுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால், இந்த முறை யாரும் எதிர்பார்க்காத இடத்தில் ஆடியிருக்கிறார்கள். ‘விக்கெட் எடுத்துட்டு பிட்சுல ஆடிப் பார்த்திருப்ப, மேட்ச் ஜெயிச்சிட்டு பௌண்டரி லைன்ல ஆடிப் பார்த்திருப்ப, ஏன், கப் ஜெயிச்சிட்டு டிரெஸ்ஸிங் ரூம்ல ஆடிக்கூட பார்த்திருப்ப... ஆனா, பிரஸ் மீட்ல வெறித்தனமா ஆடிப் பார்த்திருக்கியா’ என்ற ரேஞ்சுக்கு, பாகிஸ்தானை வீழ்த்தியதும் பிரஸ் மீட்டில் மாஸ் ஆட்டம் ஆடி வைரல் ஆகியிருக்கிறார்கள்.

• இங்கிலாந்து கிரிக்கெட், இங்கிலாந்தை மட்டும் உள்ளடக்கியதல்ல. வேல்ஸ் நாடும் அதில் ஓர் அங்கம். இங்கிலாந்து அண்டு வேல்ஸ் கிரிக்கெட் போர்டு என்பதுதான் ECB-ன் விரிவாக்கமே! அதனால், எப்போதும் உலகக் கோப்பையின் சில போட்டிகள் வேல்ஸ் தலைநகர் கார்டிஃப் நகரிலும் நடக்கும். இந்த முறை, நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதிய போட்டிதான் அங்கு நடந்த முதல் ஆட்டம். அதைப் பிரபலப்படுத்த இவர்கள் விழாவெல்லாம் எடுக்கவில்லை. அந்தப் போட்டியில் பயன்படுத்தப்போகும் மேட்ச் பாலை, 542 ஃபீல்டர்கள் மைதானத்துக்கு எடுத்துவந்தனர். கார்டிஃப் நகரின் முக்கியமான இடங்களினூடே, ஒவ்வொருவரும் கேட்ச் பிடித்து, த்ரோ செய்து பந்தை பாஸ் செய்ய, 8,851 மீட்டர் பயணம் செய்து, 1,835 கேட்ச்களுக்குப் பிறகு மைதானம் வந்து சேர்ந்தது அந்தப் பந்து.

ஒரு பந்து... 542 ஃபீல்டர்கள்...

• வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் போட்டி மொத்தமே 35.2 ஓவர்களில் முடிவுக்கு வந்துவிட்டது. “என்னயா டி-20 மேட்ச் மாதிரி ஆடியிருக்கீங்க” என்று ஒரு ரசிகர் வட்டம் புலம்ப, “தொடர்ந்து 11 மேட்ச்ல தோத்திருக்கீங்க” என்று பாகிஸ்தானைக் கலாய்க்கத் தொடங்கினர். இதற்கெல்லாம் பாகிஸ்தான் ரசிகர்கள் கொஞ்சம்கூட அசரவில்லை. உடனே வரலாற்றைத் தோண்டி எடுத்தவர்கள், “1992 உலகக் கோப்பையில், முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்கூட 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றோம். அடுத்து இங்கிலாந்துகூட 74 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனோம். ஆனால், அந்த உலகக் கோப்பையில் நாங்கதான் சாம்பியன்” என, கொஞ்சமும் கெத்து குறையாமல் வாதாடுகிறார்கள்.

• பயிற்சிப் போட்டிகளெல்லாம் முடிந்ததும், ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு விதமாக ஓய்வைக் கழித்தது. இங்கிலாந்து வீரர்கள் கோல்ஃப் கோர்ஸில் முகாமிட, இந்திய வீரர்கள் பெயின்ட்பால் விளையாடினர். பும்ரா, கோலி போன்றவர்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்துகொண்டிருக்க, சஹாலின் வீடியோ அவர்களை ஓவர்டேக் செய்து மாஸ் காட்டியது. பெயின்ட் பாலுக்கு நடுவே, நியூசிலாந்தின் புகழ்பெற்ற ஹக்கா நடனம் ஆடி, அதைப் பதிவிட்டு அல்லு கிளப்பினார்.