Published:Updated:

கிரிக்கெட் சூதாட்டம்: டோனி மனைவியிடம் விசாரணை?

கிரிக்கெட் சூதாட்டம்: டோனி மனைவியிடம் விசாரணை?
கிரிக்கெட் சூதாட்டம்: டோனி மனைவியிடம் விசாரணை?
கிரிக்கெட் சூதாட்டம்: டோனி மனைவியிடம் விசாரணை?

புதுடெல்லி: கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி மனைவியை போலீஸ் விசாரிக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கி இருக்கும் ஸ்ரீசாந்த் துப்பி வரும் உண்மைகளை வைத்து தினம் ஒரு முக்கிய புள்ளியை வளைத்து வருகிறது போலீஸ்.

சூதாட்ட புக்கிகள் மட்டுமில்லாமல் சினிமா நடிகைகள், மாடலிங் பெண்கள் உள்ளிட்டவர்களிடமும் தொடர்பில் இருந்த ஸ்ரீசாந்த், மாடலிங் அழகி ஒருவருடன் நெருக்கமாக இருந்ததாக சொல்கிறார்கள்.

அந்த மாடலிங் அழகிக்கு அண்மையில், விலை உயர்ந்த பிளாக் பெரி மொபைல் ஒன்றை அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார் ஸ்ரீசாந்த்.

இது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வரும் போலீஸார், டோனியின் மனைவி சாக் ஷியிடமும் விசாரணை நடத்தவிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஸ்ரீசாந்திற்கு மிகவும் பிரியமான அந்த மாடல் அழகியும், சாக் ஷியும் கல்லூரி தோழிகளாம். இதனடிப்படையில், கிரிக்கெட் சூதாட்டம் குறித்து மாடல் அழகி மூலமாக ஏதாவது தகவல் தெரியுமா என்ற கோணத்திலேயே சாக் ஷியிடம் விசாரணை நடத்த முடிவு செய்திருக்கிறதாம் போலீஸ்!

##~~##
கிரிக்கெட் சூதாட்டாம் இன்னும் யார் யாரை கிறுக்குப் பிடித்து அலையவிடப் போகிறதோ!?
-ஷஃபி முன்னா