Published:Updated:

சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளுடன் விண்டூ தாரா சிங்கிற்கு தொடர்பு?

சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளுடன் விண்டூ தாரா சிங்கிற்கு தொடர்பு?
சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளுடன் விண்டூ தாரா சிங்கிற்கு தொடர்பு?
சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளுடன் விண்டூ தாரா சிங்கிற்கு தொடர்பு?

மும்பை: கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட விண்டூ தாரா சிங்கின் மும்பை வீட்டில் போலீசார் இன்று சோதனை நடத்திய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளுடன் விண்டூ தாரா சிங்கிற்கு தொடர்பிருப்பதாக  போலீசார் தெரிவித்துள்ளனர்.

மும்பை வீட்டில் சோதனை


ஐபிஎல் சூதாட்டப் புகாரில் தொடர்பிருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்ட நடிகர் விண்டூ தாரா சிங்கின், மும்பை ஜூஹூ வீட்டில் இன்று மும்பை காவல்துறையினர் சோதனை நடத்தினர்.இன்று காலையில் நடைபெற்ற இந்த சோதனையில் ரொக்கப்பணம் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட தரகர்கள் மற்றும் வீரர்களுடன் விண்டூ தாரா சிங் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தொடர்புடைய சில மூத்த புள்ளிகளுடன் தொடர்பு வைத்திருப்பது தெரியவந்திருப்பது தெரியவந்துள்ளதாகவும், அதே சமயம் அவர் சூதாட்டம் தொடர்பாகத்தான் பேசினாரா என்பதற்கு வலுவான ஆதாரம் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதே சமயம் விசாரணையின்போது கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ள விண்டூ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் franchise உரிமையாளருடன் தொடர்பில் இருந்தது உண்மைதான் என்றும், அவர் தனது மூலமாக சூதாட்டத்தில் ஈடுபட்டார்  எனக் கூறியதாகவும் காவல்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகி உள்ளது.

##~~##

இதனிடையே ஆட்டத்தின்போது, சென்னை சூப்பர் கிங்ஸ்  அணியின் விஐபி பகுதிக்கு விண்டூவால் எப்படி எப்பொழுதும் செல்ல முடிந்தது என்பது குறித்து விசாரித்து வருவதாக மும்பை காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.