Published:Updated:

ஹஸ்ஸி, ரெய்னா, ஜடேஜா அசத்தல்: மும்பையை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது சென்னை!

ஹஸ்ஸி, ரெய்னா, ஜடேஜா அசத்தல்: மும்பையை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது சென்னை!
ஹஸ்ஸி, ரெய்னா, ஜடேஜா அசத்தல்: மும்பையை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது சென்னை!
ஹஸ்ஸி, ரெய்னா, ஜடேஜா அசத்தல்: மும்பையை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது சென்னை!

மைக்கேல் ஹஸ்ஸி, சுரேஷ் ரெய்னா ஆகியோரின் அதிரடி ஆட்டம் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் அசத்தல் பந்துவீச்சு ஆகியவற்றின் துணையுடன், ஐபிஎல் சீஸன் 6-ன் ப்ளே ஆஃப் முதல் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

டெல்லியில் நடந்த இப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் 193 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்கள் எடுத்துத் தோல்வியைத் தழுவியது.

அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் டுவைன் ஸ்மித் 28 பந்துகளில் 68 ரன்களை விளாசி, சென்னைக்கு அதிர்ச்சி அளித்தார். அவர், ஜடேஜாவின் பந்துவீச்சில் ஆட்டமிந்ததும் மீண்டும் வெற்றி வாய்ப்பு சென்னைக்குத் திரும்பியது.

பொல்லார்டு 24 ரன்களையும், ராயிடு 15 ரன்களையும், தினேஷ் கார்த்திக் 11 ரன்களையும் எடுத்தனர். ஏனையோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஜடேஜா அசத்தல்...

ஆரம்பத்தில் பின்னடைவாக இருந்தாலும், சென்னை அணியின் பந்துவீச்சு மும்பை அணியின் ரன் குவிப்பை வெகுவாகக் கட்டுப்படுத்தியது.

ஸ்மித், பொல்லார்டு, தினேஷ் கார்த்திக் ஆகிய முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் ரவீந்திர ஜடேஜா.

பிராவோ 3 விக்கெட்டுகளையும், ஷர்மா 2 விக்கெட்டுகளையும், மோர்கெல் மற்றும் மோரிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

நேரடியாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறும். தோற்கும் அணி 2-வது தகுதிச்சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெறும். அதில் ராஜஸ்தான் அல்லது சன்ரைஸர்ஸ் அணியுடன் மோதும்.

இருவர் அதிரடி...

முன்னதாக, டாஸ் வென்று முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ், 20 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 192 ரன்களைக் குவித்தது.

மும்பை அணியினரின் பந்துவீச்சை துவம்சம் செய்த மைக்கேல் ஹஸ்ஸி 58 பந்துகளில் 86 ரன்களையும், சுரேஷ் ரெய்னா 42 பந்துகளில் 82 ரன்களையும் விளாசி, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். முரளி விஜய் 23 ரன்கள் சேர்த்தார்.

இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. தோல்வியுற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, 2-வது தகுதிச் சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெறுகிறது. அதில், ராஜஸ்தான் அல்லது சன்ரைஸர்ஸ் அணியுடன் மோதும்.

முன்னதாக, லீக் சுற்றில் மும்பைக்கு எதிரான இரு ஆட்டங்களிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி கண்டது. அதற்குப் பழிதீர்க்கும் வகையில் சென்னை அணிக்கு முதல் தகுதிச் சுற்று ஆட்டம் அமைந்துள்ளது கவனத்துக்குரியது.

ஐபிஎல் வரலாற்றில் ஐந்தாவது முறையாக இறுதிப் போட்டிக்கு சென்னை அணி முன்னேறியுள்ளது. இதுவரை இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்றதும் குறிப்பிடத்தக்கது.