Published:Updated:

முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு ஹம்மர் கார் பரிசு; ஸ்ரீசாந்த் பகீர் தகவல்

புதுடெல்லி: கிரிக்கெட் சூதாட்ட புயலில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்திடம் போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு, கிரிக்கெட் புக்கிகள் ஹம்மர் காரை பரிசாக கொடுத்திருப்பதாக பகீர் தகவலை சொல்லி இருக்கிறார்.

கிரிக்கெட் சூதாட்டம் குறித்து ஸ்ரீசாந்த் உள்ளிட்டவர்களிடம் நடந்து வரும்  விசாரணையில், பணம், நடிகைகள் தொடர்பு, தாவூத் இப்ராஹிம் பின்னணி என பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அதேபோல் முன் எப்போதும் இல்லாத வகையில் சென்னை மற்றும் கோவையில் கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் சிக்கி வருகிறார்கள்.

இந்த நிலையில், முன்னணி கிரிக்கெட் வீரர்கள் சிலருக்கு விலை உயர்ந்த ஹம்மார் காரை கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் பரிசாக கொடுத்திருப்பதாக பரபரப்பு வாக்குமூலம் தந்திருக்கிறார் ஸ்ரீசாந்த். மதுவிருந்து, அழகிகள் சப்ளை செய்தும் முன்னணி வீரர்களை சூதாட்டத் தரகர்கள் தங்களது வலையில் வீழ்த்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

##~~##
ஸ்ரீசாந்தும் மாடல் அழகிகளுடன் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்ததற்கான ஆதாரங்களும் தற்போது போலீஸ் கையில் சிக்கி இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியில் டோனி, ஹர்பஜன் சிங்கும் ஹம்மர் கார் வைத்திருப்பதால் தற்போது குழம்பிக் கிடக்கிறது கிரிக்கெட் உலகம்.