Published:Updated:

உலகக்கோப்பையின் பர்ஃபாமர்ஸ்!

உலகக்கோப்பையின் பர்ஃபாமர்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
உலகக்கோப்பையின் பர்ஃபாமர்ஸ்!

உலகக்கோப்பையின் பர்ஃபாமர்ஸ்!

உலகக்கோப்பையின் பர்ஃபாமர்ஸ்!

உலகக்கோப்பையின் பர்ஃபாமர்ஸ்!

Published:Updated:
உலகக்கோப்பையின் பர்ஃபாமர்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
உலகக்கோப்பையின் பர்ஃபாமர்ஸ்!

மே 30-ம் தேதி தொடங்கவுள்ள உலகக் கோப்பை தொடருக்காக  10 அணிகளும், தங்களின் 15 பேர் கொண்ட ஸ்குவாடை அறிவித்துள்ளன. ஒவ்வொரு அணியிலும் சில அதிர்ச்சிகள், சில ஆச்சர்யங்கள் ஒளிந்திருக்கின்றன. ஒவ்வொரு அணியும் எப்படி தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அவர்களின் பலம், பலவீனம் என்னென்ன... அலசுவோம்.

முதல் கோப்பை?!

மு
தல் முறையாக, மற்ற அனைத்து அணிகளைவிடவும் பலமான அணியாய் உலகக் கோப்பைக்குள் நுழைகிறது இங்கிலாந்து. சொந்த ஊரில் ஆடுவது ஒரு வகையில் சாதகம் என்றால், எந்த ஊர் மைதானத்திலும் ரன்வேட்டை நடத்தும் பேட்ஸ்மேன்கள் இருப்பது அவர்களின் மிகப்பெரிய பலம். கடந்த ஆண்டு, கிட்டத்தட்ட 500 ரன்களையே நெருங்கியவர்கள், இந்த உலக்க கோப்பையில் சிலபல 400-களை அடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

கடந்த சில மாதங்களாக பெரும் பேசு பொருளாக இருந்துவந்த ‘ஜோஃப்ரா ஆர்ச்சர்’ அறிமுகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம். அவரை பாகிஸ்தான் தொடருக்குத் தேர்வு செய்திருந்தாலும், உலகக் கோப்பை அணியில் எடுக்கவில்லை. அணியின் சில வீரர்களே, ஆர்ச்சரின் சேர்க்கையில் உடன்பாடு இல்லாததுபோல் பேட்டி கொடுத்தது, இந்த முடிவுக்குக் காரணமாக இருந்திருக்கலாம். ஆர்ச்சரின் பந்துவீச்சை, இங்கிலாந்து அணி இழக்கும் என்றாலும், அந்த அணிக்காகவே ஆடிவந்த வீரர்களைப் பற்றி யோசித்தால் இது சரியான முடிவுதான். பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில், மிகச் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தால், இந்த முடிவு மாறுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது.

10 வருடங்களுக்கு முன், இங்கிலாந்துக்காக ஒருநாள் போட்டியில் ஆடிய ஜோ டென்லி, இந்த அணியில் இடம்பிடித்திருப்பது மட்டும் சின்ன ஆச்சர்யம். மற்றபடி, இங்கிலாந்தின் தேர்வில் எந்த பிரச்னைகளும் இல்லை. பெரிய அனுபவம் இல்லாத அவர்களின் பந்துவீச்சும், பென் ஸ்டோக்ஸின் சமீபத்திய மோசமான ஃபார்மும் மட்டும் இந்த அணியின் பலவீனங்கள்.

முக்கிய வீரர்கள் : ஜாஸ் பட்லர், ஜோ ரூட், அடில் ரஷீத்

உலகக்கோப்பையின் பர்ஃபாமர்ஸ்!
உலகக்கோப்பையின் பர்ஃபாமர்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கங்காரு இஸ் பேக்!

பீ
ட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் வைத்திருக்கும் சராசரி - 43.55. ஆனால், அவருக்கே இந்த அணியில் இடமில்லை. அந்த அளவுக்கு பலமான அணியாக இருக்கிறது ஆஸ்திரேலியா. கடந்த ஓராண்டாக தடுமாறிக்கொண்டிருந்தவர்கள், ஃபார்முக்கு வந்த நேரத்தில், வார்னர், ஸ்மித் இருவரும் அணிக்குத் திரும்பியது அவர்களைப் பலமடங்கு பலப்படுத்தியுள்ளது. ஐ.பி.எல் தொடரில் வார்னர் அடிக்கும் அடியையைப் பார்த்தால், உலகக் கோப்பையில் எந்த அணியும் தப்பாது என்றே தோன்றுகிறது.

ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஆனபிறகு ஸ்டீவ் ஸ்மித்தும் அசத்திக்கொண்டிருக்கிறார். ஃபின்ச், வார்னர், கவாஜா, ஸ்மித், ஸ்டோய்னிஸ், மேக்ஸ்வெல், கேரி அடங்கிய பேட்டிங் ஆர்டர் ஃபுல் ஃபார்மில் இருக்கிறது. ஹேசில்வுட் இன்னும் காயத்திலிருந்து முழுமையாகக் குணமடையாவிட்டாலும், மிட்சல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், நாதன் கூல்டர்நைல், ஜேசன் பெரண்டார்ஃப் அடங்கிய பௌலிங் யூனிட் மிரட்டலாகவே இருக்கிறது. ஸ்டார்க் சமீபத்திய போட்டிகளில் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்தது மட்டுமே ஆஸ்திரேலியாவின் கவலை.

ஷான் மார்ஷ் - இந்த ஆஸ்திரேலிய அணியில் கொஞ்சம் கேள்விக்குட்படுத்தவேண்டிய தேர்வு. அனுபவத்தின் காரணமாக மார்ஷ் அணியில் இடம்பிடித்துவிட, சுழலை மிகச்சிறப்பாகக் கையாளக்கூடிய ஹேண்ட்ஸ்கோம்ப் வெளியே அமரவேண்டியதாகிவிட்டது. மேலும், பேக் அப் கீப்பரையும் ஆஸ்திரேலியா இழந்துள்ளது.

முக்கிய வீரர்கள் : டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித்

உலகக்கோப்பையின் பர்ஃபாமர்ஸ்!
உலகக்கோப்பையின் பர்ஃபாமர்ஸ்!

சுழல் வின்னர்ஸ்!

த்துக்குட்டி அணியாக இருந்தாலும், எதிர்பாராத நேரத்தில் எந்த அணியையும் தோற்கடிக்கக்கூடிய அணியாகவே இருக்கிறது ஆப்கானிஸ்தான். அவர்களது கேம் பிளான் ரொம்ப சிம்பிள். மற்ற அணிகளைப்போல் 300, 350 ரன்களுக்கெல்லாம் இவர்கள் ஆசைப்படுவதில்லை. முதலில் பேட்டிங் செய்து, 250 ரன்கள் எடுத்துவிட்டு, எதிரணியை பௌலிங்கால் திணறடிப்பதுதான் இவர்கள் ஃபார்முலா. கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை தொடரில் இலங்கை, வங்கதேச அணிகளை வீழ்த்தியதும், இந்தியாவுக்குத் தோல்விப் பயத்தைக் காட்டியதும் அப்படித்தான். இந்த உலகக் கோப்பையிலும் இவர்கள் இதே திட்டத்தோடுதான் களமிறங்குவார்கள்.

முகமது நபி, ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான் என சுழல் கூட்டணி அவர்களின் மிகப்பெரிய ஆயுதமாக இருக்கிறது. பவர் பிளே, மிடில் ஓவர், டெத் என அனைத்து சூழ்நிலைகளிலும் சுழலே அவர்களுக்குக் கைகொடுத்துக்கொண்டிருக்கிறது. தன் முதல் உலகக் கோப்பை தொடரில், ரஷீத் நிச்சயம் பல மாயங்கள் நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கலாம். அணியின் டாப் ஆர்டர் ஒருசில போட்டிகளில் நல்ல தொடக்கம் கொடுத்தாலும், சீராக பங்களிப்பதில்லை. அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவருக்குமே அதுதான் பிரச்னை. சேஸ் செய்யும் ஆட்டங்களில் அது அவர்களுக்குப் பாதகமாக அமையும்.

இந்த அணியில் இப்போது இருக்கும் இன்னொரு பிரச்னை, உலகக் கோப்பைக்கு இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில், கேப்டனை மாற்றியது. அஸ்கர் ஆஃப்கனுக்குப் பதில் குலாபுதீன் நைப், அணியை வழிநடத்தவுள்ளார். முகமது நபி, ரஷீத் கான் போன்ற முன்னணி வீரர்களே இந்த முடிவை எதிர்த்தனர். இது அணிக்குள் எவ்வகையான சலசலப்பையும் ஏற்படுத்தாமல் இருந்தால் நல்லது!

முக்கிய வீரர்கள் : ரஷீத் கான், முகமது நபி, நூர் அலி சத்ரான்

உலகக்கோப்பையின் பர்ஃபாமர்ஸ்!
உலகக்கோப்பையின் பர்ஃபாமர்ஸ்!

பெளலிங் ஸ்ட்ராங்...  ஆனா பேட்டிங்?

வ்வொருமுறையும் அரையிறுதி வரை சென்று வெளியேறுவதே வாடிக்கையாகிவிட்ட நிலையில், இம்முறை ‘சோக்கர்ஸ்’ என்ற அவப்பெயரைத் துடைக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது தென்னாப்பிரிக்க அணி. அணியின் தூண் டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், இந்த முறை அரையிறுதிக்கே முன்னேறுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மிஸ்டர் 360 டிகிரியின் ஓய்வுக்குப் பிறகு, அவர்களின் பேட்டிங் ஆர்டர் கவலையளிப்பதாகவே இருக்கிறது. டுப்ளெஸ்ஸி, டி காக் தவிர்த்து பெரிதாக யாரும் கைகொடுப்பதில்லை. டுமினி, மில்லர், மார்க்ரம் என யாரிடமும் கன்சிஸ்டென்சி இல்லை. ஆம்லா சுத்தமாக ஃபார்மில் இல்லை. அனுபவ வீரர் என்பதால் மட்டுமே அவரை உலகக் கோப்பை அணியில் சேர்த்திருக்கிறார்கள். பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பதும் சந்தேகம்தான்.

குளூஸ்னர், காலிஸ் போன்ற ஆல்ரவுண்டர்களோடு களமிறங்கியவர்களுக்கு இப்போது எஞ்சியிருப்பது ஃபெலுக்வாயோ, பிரடோரியஸ் ஆகியோர்தான். மோரிஸ், ஃபார்ம் காரணமாக சேர்க்கப்படவில்லை. ஒரு கேம் சேஞ்சரை தென்னாப்பிரிக்க இழந்துவிட்டது. அந்த அணியின் ஒரே நம்பிக்கை அவர்களின் பௌலிங் யூனிட்தான். ககிசோ ரபாடா, லுங்கி எங்கிடி, டேல் ஸ்டெய்ன், ஏன்ரிச் நார்டே அடங்கிய வேகப்பந்துக் கூட்டணி எதிரணிகளை மிரட்டும். நார்டே, எங்கிடி ஆகியோர் காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், சீக்கிரம் மீண்டுவரவேண்டும். இல்லையேல், தென்னாப்பிரிக்காவின் நிலை இன்னும் மோசமாகிவிடும். டுமினி, தாஹிர் ஆகியோர் இந்த உலகக் கோப்பையோடு ஓய்வு பெறவுள்ளதால், அவர்களிடம் பெரிய பங்களிப்பை எதிர்பார்க்கலாம்.

முக்கிய வீரர்கள் : ஃபாஃப் டுப்ளெஸ்ஸி, ககிசோ ரபாடா, குவின்டன் டி காக்

உலகக்கோப்பையின் பர்ஃபாமர்ஸ்!
உலகக்கோப்பையின் பர்ஃபாமர்ஸ்!

இன்னொரு அரையிறுதி?

டந்த முறை கடைசி வாய்ப்பில் விட்டதை, இப்போது பிடித்துவிடும் மும்முரத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது நியூசிலாந்து. கடந்த சில ஆண்டுகளாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திவருவதால், அரையிறுதிக்கு முன்னேறக்கூடிய அணிகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. கேப்டன் கேன் வில்லியம்சன், மார்டின் கப்ஷில், ராஸ் டெய்லர், காலின் மன்றோ, டாம் லாதம், ஹென்றி நிகோல்ஸ் என பேட்டிங் ஆர்டர் பலமாக இருக்கிறது. கப்ஷில் சமீபத்தில் பெரிய பங்காளிப்பைக் கொடுக்கவில்லை என்றாலும், அவர் எப்போதும் சிறிய ஆடுகளங்களில் பட்டையைக் கிளப்புவார் என்பதால், நிச்சயம் அவரிடம் நிறைய எதிர்பார்க்கலாம்.

ஜிம்மி நீஷம், கிராந்தோம், சேன்ட்னர் என அதிரடி ஆல் ரவுண்டர்கள் இருப்பதும் அவர்களுக்குப் பெரிய பலம். எப்போதுமே உலகக் கோப்பைகளில் இடது கை வேகப்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பதால், ட்ரென்ட் போல்ட் செய்யும் மின்னல் தாக்குதல்கள் எதிரணிகளை நிலைகுலையச் செய்யும். போல்டுக்கு சரியான கம்பெனி கிடைத்தால், அரையிறுதியைத் தாண்டிச் செல்ல வாய்ப்பிருக்கிறது. டிம் சௌத்தி, லாகி ஃபெர்குசன் இருவருமே ஐ.பி.எல் தொடரில் ஏமாற்றமே அளித்தனர். அதை மறந்து ஒரு நல்ல பெர்ஃபாமன்ஸ் கொடுக்கவேண்டிய அவசியம் அவர்களிடத்தில் இருக்கிறது. அறிமுக கீப்பர் டாம் பிளெண்டல் அணியில் சேர்க்கப்பட்டிருப்பது ஆச்சர்யம்.

முக்கிய வீரர்கள் : கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், ட்ரென்ட் போல்ட்

உலகக்கோப்பையின் பர்ஃபாமர்ஸ்!
உலகக்கோப்பையின் பர்ஃபாமர்ஸ்!

பலம் காட்டுமா?

2017
சாம்பியன்ஸ் டிராபி வென்ற பிறகு, கிரிக்கெட் அரங்கில் பாகிஸ்தான் மீண்டும் எழுச்சி காணும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அன்று இருந்ததைவிட இன்னும் சுமாரான அணியாகவே இருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு விளையாடிய 7 ஒருநாள் தொடர்களில் இரண்டில் மட்டுமே வென்றுள்ளது. அவையும்கூட இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராகப் பெற்ற வெற்றிகள்தான். பேட்டிங், பௌலிங் இரண்டுமே நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்துவதால், பாகிஸ்தான் அரையிறுதிக்குள் நுழைவது மிகவும் கடினமே.

அந்த அணிக்கு எப்போதுமே கைகொடுக்கும் பௌலிங் யூனிட்டும் கடந்த சில மாதங்களாக பல மாற்றங்களைக் கண்டுகொண்டிருக்கிறது. பல வீரர்களைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டது அந்த அணி. சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு, கிட்டத்தட்ட 100 ஓவர்கள் பந்துவீசி, 5 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியிருந்த அந்த அணியின் முன்னணி பௌலர் முகமது அமீருக்கு அணியில் வாய்ப்பு தரப்படவில்லை. நல்ல கம்பேக் கொடுத்த ஜுனைத் கான், அணியில் இடம்பிடித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடர் நாயகன் ஹசன் அலியும் கடந்த சில மாதங்களாக விக்கெட் வீழ்த்தத் தடுமாறுகிறார். அதுவும் அந்த அணிக்குப் பலவீனமே.

ஒரு போட்டியில் சதமடித்துவிட்டால், அடுத்த 5 போட்டிகளில் தடுமாறுகிறார் ஓப்பனர் ஃபகர் ஸமான். கடந்த 2 ஆண்டுகளில் 2 அரைசதங்களே அடித்திருக்கிறார் கேப்டன் சர்ஃபராஸ் அஹமது. இப்படி முழு அணியுமே ‘கன்சிஸ்டென்சி’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடிக்கொண்டிருக்கிறது. பாபர் ஆஸம், முகமது ஹஃபீஸ், இமாம் உல் ஹக், ஷதாப் கான், சஹீன் அஃப்ரிடி ஆகியோரின் ஆட்டமே, அவர்கள் எதுவரை செல்கிறார்கள் என்பதை உறுதிபடுத்தும்.

முக்கிய வீரர்கள் : பாபர் ஆஸம், இமாம் உல் ஹக், ஷஹீன் அஃப்ரிடி

உலகக்கோப்பையின் பர்ஃபாமர்ஸ்!
உலகக்கோப்பையின் பர்ஃபாமர்ஸ்!

ஆச்சர்ய லெவன்!

ந்த உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் செயல்பாடு எப்படி இருக்கும்? யாரும் எதிர்பாராத விதமாக அரையிறுதிக்கும் நுழையலாம்... 9 லீக் போட்டிகளிலும் தோற்று கடைசி இடமும் பிடிக்கலாம். மற்ற அணிகளைப் போல் கொஞ்சம்கூட இந்த அணியை கணித்திட முடியாது. எல்லாம், போட்டி நாளன்று என்ன நடக்கிறதோ அதைப் பொறுத்துத்தான்.

கிறிஸ் கெய்லின் கடைசி சர்வதேசத் தொடர், எப்படியான ஆச்சர்யங்களையும் வழங்கக்கூடும். யுனிவர்சல் பாஸ் ஆடும் வெறித்தன ஆட்டங்கள் இந்தத் தொடருக்கான மிகப்பெரிய அட்ராக்ஷனாக இருக்கும். காயம் பற்றிய சந்தேகங்கள் இருந்தாலும், ஆண்ட்ரூ ரஸல் அணியில் சேர்க்கப்பட்டிருப்பது மிகப்பெரிய பூஸ்ட். ஆனால், 50 ஓவர் போட்டிகளில் அவரால் எப்படியான தாக்கம் ஏற்படுத்த முடியும் என்ற கேள்வி இருக்கிறது. அதேபோல், கெய்ல், ரஸல் இருவருமே, 9 போட்டிகளிலும் ஆடமுடியுமா என்பதும் சந்தேகம்தான். அதை அணி நிர்வாகம் எப்படிக் கையாள்கிறது என்பது முக்கியம்.

கெய்ல், லூயிஸ், ரஸல், ஹிட்மேயர், பூரன் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு மத்தியில், அணியின் மீட்பராகப் பணிபுரிந்துகொண்டிருக்கிறார் ஷாய் ஹோப். வெஸ்ட் இண்டீஸின் அரையிறுதி வாய்ப்பு, அவர் கையில்தான் என்றே சொல்லலாம். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர், அவரது திறமையை நன்கு உணர்த்தியது. வங்கதேசம், இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டிகளில் 500 ரன்களை நெருங்கினாலும் ஆச்சர்யம் இல்லை. இளம் பௌலிங் படையின் உத்வேகமும், கேப்டன் ஜேசன் ஹோல்டரின் அனுபவமும் ஒன்று சேர்ந்தால், நிச்சயம் எந்த அணியையும் இவர்களால் வீழ்த்த முடியும்.

முக்கிய வீரர்கள் : ஷாய் ஹோப், ஜேசன் ஹோல்டர், கிறிஸ் கெய்ல்

உலகக்கோப்பையின் பர்ஃபாமர்ஸ்!
உலகக்கோப்பையின் பர்ஃபாமர்ஸ்!

பாம்பு டான்ஸ் பரபர!

னுபவ வீரர்கள் நிறைந்த அணியாகக் காணப்படுகிறது வங்கதேசம். 2015 உலகக் கோப்பையில் ஆடிய 8 வீரர்கள், இங்கிலாந்துக்குப் பயணப்படவிருக்கின்றனர். அதனால், அந்த அணி நம்பிக்கையோடு இந்தத் தொடரில் களம் காணும். 2007-ல் இந்தியா, 2015-ல் இங்கிலாந்து அணிகளின் அடுத்த சுற்று வாய்ப்பைக் கெடுத்தவர்கள், இந்த முறையும் பெரிய தலைகளை உருட்டலாம்! ஆனால், முக்கியமான வீரர்கள் கடந்த சில மாதங்களாக காயத்தால் அவதிப்பட்டிருப்பது அந்த அணிக்குப் பின்னடைவாக அமையக்கூடும்.

விரலில் ஏற்பட்ட காயத்துக்குப் பிறகு, ஷகிப் அல் ஹசன் இன்னும் முழு திறனையும் காட்டவில்லை. ஐ.பி.எல் தொடரில் சுமாராகவே பந்துவீசினார். அதேபோல், முஸ்தாஃபிசுர் ரஹ்மானும் தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார். வங்கதேச அணியின் அடுத்த சுற்று வாய்ப்புக்கு, இவர்கள் இருவரின் பங்களிப்பும் மிகவும் அவசியம்.

மெஹதி ஹசன் மிராஜ், முகமது சைஃபுதீன் போன்ற ஆல்ரவுண்டர்கள் அணியில் இருப்பது, ஷகிப் மீதான நெருக்கடியைக் குறைக்கும். அதுமட்டுமல்லாமல் பிளேயிங் லெவனில், 9-வது வீரர் வரை ஓரளவு பேட்டிங் செய்யக்கூடியவர்கள் இருப்பதும், 7 பௌலிங் ஆப்ஷன்கள் இருப்பதும், அவர்களுக்கு மிகப்பெரிய பலம். இப்படியான பிளஸ் இந்திய அணியில் கூட இல்லை. அதை வங்கதேசம் சரியாகப் பயன்படுத்தினால், நாகினி ஆட்டத்தை நிச்சயம் பார்க்கலாம்!

முக்கிய வீரர்கள்: ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹீம், முஸ்தாஃபிசுர் ரஹ்மான்

உலகக்கோப்பையின் பர்ஃபாமர்ஸ்!
உலகக்கோப்பையின் பர்ஃபாமர்ஸ்!

ஓ மை லங்கா!

லங்கையைப் பற்றிப் பேசுவதற்குப் பெரிதாக ஒன்றும் இல்லை. 10 அணிகள் கலந்துகொள்ளும் இந்த உலகக் கோப்பையில், பத்தாவது இடம் பெறுவதற்கான 10 பொருத்தங்களும் பக்காவாக இருக்கிறது. 2015 உலகக் கோப்பைக்குப் பிறகு, 20 ஒருநாள் தொடர்களில் விளையாடியுள்ள அந்த அணி, 3 தொடர்களை மட்டுமே வென்றுள்ளது. அவையும் பெரிய அணிகளுக்கு எதிராகப் பெற்றதெல்லாம் இல்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடர், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகளோடு மோதிய முத்தரப்புத் தொடர் மற்றும் வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகளோடு மோதிய முத்தரப்புத் தொடர். இந்த அட்டகாச ரெக்கார்டுகள் ஒருபுறமிருக்க, அவர்களின் டீம் செலக்ஷன் இன்னும் ஒரு படி மேலே சென்றிருக்கிறது.

சந்திமல், டிக்வெல்லா, தரங்கா, அகிலா தனஞ்செயா என முன்னணி வீரர்களையெல்லாம் கழட்டி விட்டதோடு, கடைசியாக 2015 உலகக் கோப்பையின்போது ஒருநாள் கிரிக்கெட் விளையாடிய கருணரத்னேவை கேப்டனாக்கியிருக்கிறார்கள். கேட்டால், ‘ஃபார்ம்’ என்பதைக் காரணமாகச் சொல்கிறது தேர்வுக் குழு. அதாவது 5 போட்டியில் 1 நல்ல இன்னிங்ஸ் ஆடுவதுதான் அவர்களுக்கு ‘ஃபார்ம்’. இந்தத் தொடரில் ஆடும் 15 இலங்கை வீரர்களின் பெயர்களை உங்களால் நினைவுகூற முடிந்தால், நிச்சயம் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு நீங்கள் முயற்சி செய்யலாம். அப்படி ஒரு அணியைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.

வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக இலங்கை எப்படி ஆடப்போகிறது என்பதுதான், அந்த அணியின் அடுத்த 2 வருட எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகிறது. ஏஞ்சலோ மாத்யூஸ், திசாரா பெரேரா, லசித் மலிங்கா போன்ற சீனியர்கள் ‘ஒன் மேன் ஷோ’க்கள் நடத்தினால் மட்டுமே இலங்கையைக் கரைசேர்க்க முடியும்.

முக்கிய வீரர்கள் : ஏஞ்சலோ மாத்யூஸ், திசாரா பெரேரா, லசித் மலிங்கா

உலகக்கோப்பையின் பர்ஃபாமர்ஸ்!
உலகக்கோப்பையின் பர்ஃபாமர்ஸ்!

மீண்டும் லார்ட்ஸ் பால்கனி?

ல கட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, சிலபல சோதனை முயற்சிகளுக்குப் பிறகு, பலமான ஒரு அணியைத் தேர்வு செய்திருக்கிறார்கள். வழக்கம்போல் இந்திய பேட்டிங் ‘டாப் 3’ வீரர்களைச் சுற்றியே சுழலும் என்றாலும், தோனி, ஹர்திக் பாண்டியா ஆகியோரின் ஃபார்ம் அணிக்கு கூடுதல் நம்பிக்கை. ஐ.சி.சி தொடர் என்றாலே ஷிகர் தவானைக் கையில் பிடிக்க முடியாது. வெறிகொண்டு ஆடத் தொடங்கிவிடுவார். இந்த உலகக் கோப்பையிலும் அவரது அதிரடி தொடக்கங்களை எதிர்பார்க்கலாம்.

சிலபல மாதங்களாக நீடித்துவரும் நம்பர் 4 சிக்கலுக்கு விஜய் சங்கர் பதில் அளித்தால் நல்லது. அம்பாதி ராயுடுவின் இடத்தில் அவரைத் தேர்வு செய்தது நல்லது என்றே தோன்றுகிறது. பேட்டிங் மட்டுமல்லாமல், பௌலிங், ஃபீல்டிங்கிலும் கைகொடுப்பார். 3-டி தான்..! அதைவிட முக்கியம், ராயுடுவை எடுக்காததன் மூலம், பல ரன் அவுட்களை இப்போதே தவிர்த்திருக்கிறது இந்திய அணியின் நிர்வாகம்.

இந்திய அணி கோப்பை வெல்வதெல்லாம் முழுக்க முழுக்க கோலி - சாஸ்திரி கூட்டணியின் டீம் செலக்ஷனைப் பொருத்துத்தான். எந்தப் போட்டியில் 3 வேகப்பந்துவீச்சாளர்களோடு களமிறங்குவது, எந்தப் போட்டியில் குல்தீப்புக்குப் பதில் ஜடேஜாவை இறக்குவது போன்றவற்றைச் சரியாகக் கையாளவேண்டும். அதேபோல், ஹர்திக், பும்ரா, ஜாதவ் போன்றவர்களுக்கு சரியான ஓய்வு கொடுப்பதும் அவசியம். இந்த ‘மேன் மேனேஜ்மென்ட்’ சரியாக இருந்தால் லார்ட்ஸ் பால்கனியில், இந்திய கேப்டனின் இன்னொரு ஐகானிக் தருணம் தயாராகும்!

உலகக்கோப்பையின் பர்ஃபாமர்ஸ்!

முக்கிய வீரர்கள் : விராட் கோலி, ஜஸ்ப்ரீத் பும்ரா, ஷிகர் தவான்

மு.பிரதீப் கிருஷ்ணா