உலகக் கோப்பை 2019 ஒரு பார்வை

மே 30-ம் தேதி தொடங்கவுள்ள ஐ.சி.சி உலகக் கோப்பையில், 10 அணிகள் கலந்துகொள்ளப்போகின்றன. 6 வாரங்களுக்கு மேல் நடக்கும் இந்தத் தொடரில், ஒவ்வோர் அணியின் பலம், பலவீனம் என்னென்ன? அந்த அணிகளின் நட்சத்திர வீரர்கள் யார் யார்?

இந்தியா

உலகக் கோப்பையை வெல்வதற்கான அனைத்து தகுதிகளையும் பெற்றிருக்கிறது இந்திய அணி. ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், விராட் கோலி அடங்கிய டாப் 3, இந்தியாவின் மிகப்பெரிய பிளஸ். தோனி, ஹர்திக் பாண்டியா ஆகியோரின் ஃபார்ம், மிடில் ஆர்டரை இன்னும் பலமாக்குகிறது. சஹால், குல்தீப் யாதவ் இருவரின் மாயச் சுழலும் விக்கெட் வேட்டை நடத்தலாம். பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோரின் வேகப்பந்து வீச்சு எந்த எதிரணிக்குமே மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

இந்திய அணி சந்திக்கும் பெரிய சவால், வீரர்களுக்குக் காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதுதான். ஹர்திக் பாண்டியா, பும்ரா போன்ற வீரர்களுக்கு நிகரான மாற்று இல்லாததால், அவர்களுக்குச் சரியான ஓய்வு கொடுப்பது முக்கியம். தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் என இரண்டு தமிழக வீரர்கள் ஆடுவதால், நாம் எதிர்பார்ப்பதற்கு நிறையவே இருக்கிறது. கேப்டன் கோலியின் முடிவுகள், இந்தியாவின் வெற்றியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இங்கிலாந்து

உலகின் நம்பர் 1 அணியான இங்கிலாந்துக்கே, இந்தக் கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ளது. சொந்த மண் நம்பிக்கை. அந்த அணியின் பலமே பேட்டிங்தான். பட்லர், ரூட், பேர்ஸ்டோ, ஜேசன் ரோய், மோர்கன் என உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழியலாம். பென் ஸ்டோக்ஸ் மொயீன் அலி போன்ற ஆல்ரவுண்டர்கள் கூடுதல் போனஸ்.

ஆஸ்திரேலியா

கடந்த சில மாதங்களாக மோசமாக விளையாடி வந்த ஆஸ்திரேலியா, மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோரின் கம் பேக் அந்த அணிக்குப் பலம். இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல் தொடரில் வார்னர்தான் அதிக ரன்கள் அடித்தார். அவர் ஃபார்மைத் தொடர்ந்தால், எதிரணி பௌலர்கள் காலி. 2015 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற மிட்சல் ஸ்டார்க், ஆஸ்திரேலியாவின் முக்கிய பந்துவீச்சாளர்.

வங்கதேசம்

ஒவ்வொரு பெரிய தொடரிலும், பெரிய அணிகளைத் தோற்கடிப்பதுதான் வங்கதேசத்தின் வேலை. 2007-ல் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளைத் தோற்கடித்தவர்கள், 2015-ல் இங்கிலாந்தை வெளியேற்றினார்கள். 2016 சாம்பியன்ஸ் டிராபியில் அரையிறுதிக்கு முன்னேறினர். இந்தத் தொடரிலும் அதிர்ச்சி வெற்றிகள் பெறலாம். ஷகிப் அல் ஹசன், முஸ்ஃபிகுர் ரஹிம், தமீம் இக்பால் ஆகியோர் அந்த அணியின் ஸ்டார் பிளேயர்கள்.

நியூசிலாந்து

கடந்த உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தோற்ற நியூசிலாந்து, இந்த முறை கோப்பை வெல்ல கடுமையாகப் போராடும். கேப்டன் வில்லியம்சன் அந்த அணியின் தூண். ராஸ் டெய்லர், டாம் லாதம் ஆகியோரும் முக்கிய பேட்ஸ்மேன்கள். பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளம் சாதகமாக ஆடுகளங்களில் ‘மின்னல்’ போல்ட் மிரட்டிவிடுவார். தரமான ஸ்பின்னர்கள் இல்லாதது அணியின் பலவீனம்.

பாகிஸ்தான்

இங்கிலாந்தில் நடந்த கடைசி ஐ.சி.சி தொடரை (சாம்பியன்ஸ் டிராபி) வென்று ஆச்சர்யப்படுத்தியது பாகிஸ்தான். ஆனால், இந்த முறை அப்படி ஆச்சர்யம் அளிப்பது சந்தேகமே. அந்த அணியின் வீரர்கள் யாரும் சீராக விளையாடுவதில்லை. பேட்ஸ்மேன் பாபர் ஆஸம்தான் முக்கியத் துருப்புச்சீட்டு. ஷோயப் மாலிக், முகமது ஹஃபீஸ் ஆகியோரின் அனுபவம் கைகொடுத்தால் நல்லது.

வெஸ்ட் இண்டீஸ்

கிறிஸ் கெய்ல், ஈவின் லூயிஸ், ஷிம்ரான் ஹிட்மேயர், ஆண்ட்ரே ரஸல் என எண்ணற்ற ஹிட்மேன்கள் இருந்தாலும், ஷாய் ஜோப் அந்த அணியின் முக்கிய வீரர். அதிரடி பேட்ஸ்மேன்கள் சீக்கிரம் அவுட்டாகும்போதெல்லாம் அணியைக் காப்பாற்றுவது அவர்தான். பேட்டிங் ஓரளவு பலமாக இருந்தாலும், பந்துவீச்சு மிகப்பெரிய பிரச்னை. உலகத்தரம் வாய்ந்த பௌலர்கள் இல்லாதது, அரையிறுதி வாய்ப்பை பாதிக்கும்.

ஆப்கானிஸ்தான்

இந்த உலகக் கோப்பையின் ‘சர்ப்ரைஸ்’ அணியாக இருக்கப்போவது ஆப்கானிஸ்தான். அவர்களின் கேம் பிளான் மிகவும் சிம்பிளாகவே இருக்கும். முதலில் பேட்டிங் செய்து, 250 ரன்கள் எடுக்கவேண்டும். அதன்பின், தங்களின் சுழல் ஆயுதத்தைப் பயன்படுத்தி, எதிரணியைக் கட்டுப்படுத்தவேண்டும். இந்தத் திட்டத்தின் மையப்புள்ளி - முகமது நபி, ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான் அடங்கிய சுழல் கூட்டணிதான். ரஷீத் கானின் திறமையை, ஐ.பி.எல் தொடரில் பார்த்திருப்போம், இப்போது உலகக் கோப்பையிலும் பார்க்கப் போகிறோம்.

தென்னாப்பிரிக்கா

அரையிறுதி வரை முன்னேறி, வெளியேறுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கு இந்தத் தொடரும் கஷ்டமாகவே இருக்கும். கேப்டன் ஃபாஃப் டுப்ளெஸ்ஸி, விக்கெட் கீப்பர் டி காக் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் ஃபார்மில் இல்லாதது மிகப்பெரிய பலவீனம். அதேசமயம், பந்துவீச்சு மற்ற அணிகளைவிட பலமாக இருக்கிறது. ஸ்டெய்ன், ரபாடா, எங்கிடி, தாஹிர் ஆகியோரை சமாளிப்பது எந்த அணிக்குமே கடினமான விஷயம்.

இலங்கை

மற்ற எல்லா அணிகளையும்விட மோசமான நிலையில் இருப்பது இலங்கை அணிதான். டிக்வெல்லா, சந்திமல், அகிலா தனஞ்சயா போன்ற முன்னணி வீரர்கள் பலரையும் தேர்வு செய்யாததால், அந்த அணி மிகவும் பலவீனமாக இருக்கிறது. வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளிடம் தோற்றாலும் ஆச்சர்யமில்லை. ஏஞ்சலோ மேத்யூஸ், திசாரா பெரேரா, லசித் மலிங்கா ஆகியோரின் அனுபவமே இலங்கையைக் காப்பாற்றவேண்டும்.

பார்ப்போம்... கோப்பை யாருக்கு என்று!

-மு.பிரதீப் கிருஷ்ணா