Published:Updated:

உலகக் கோப்பை வரலாறு... அன்று முதல் இன்று வரை...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உலகக் கோப்பை வரலாறு... அன்று முதல் இன்று வரை...
உலகக் கோப்பை வரலாறு... அன்று முதல் இன்று வரை...

உலகக் கோப்பை வரலாறு... அன்று முதல் இன்று வரை...

பிரீமியம் ஸ்டோரி
உலகக் கோப்பை வரலாறு... அன்று முதல் இன்று வரை...

துவரை 11 உலகக் கோப்பைத் தொடர்கள் நடந்துள்ளன. ஒவ்வொரு தொடரிலும் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்துள்ளன. அதைப் பற்றிப் பார்ப்போமா?

உலகக் கோப்பை வரலாறு... அன்று முதல் இன்று வரை...

லகக் கோப்பையின் முதல் போட்டியே இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையேதான் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 334 ரன்கள் குவித்தது. அப்போது 334 ரன்கள் என்பது, இமயமலை போன்ற பெரிய ஸ்கோர். அடுத்து சேஸிங் ஆரம்பித்தது இந்தியா. முதல் ஓவரில் தொடங்கி  கடைசி வரை களத்தில் நின்ற சுனில் கவாஸ்கர் எடுத்த ரன்கள் 36 மட்டுமே. சந்தித்த பந்துகளோ 174. கவாஸ்கரின் மிக மெதுவான இன்னிங்ஸ் அதுதான். ஒரே ஒரு பவுண்டரிதான்.

இந்திய ரசிகர்கள், அணியின் மற்ற வீரர்கள், நிர்வாகிகள் என அனைவரும் கவாஸ்கர் மீது கோபப்பட்ட தருணம் அது.

உலகக் கோப்பை வரலாறு... அன்று முதல் இன்று வரை...

ருநாள் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமே, போட்டிகள் சீக்கிரம் முடிவை எட்ட வேண்டும் என்றுதான். ஒருநாளில் முடிவதால்தான், ‘ஒன் டே இன்டர்நேஷனல்’ என்றும் அழைத்தார்கள்.

ஆனால், 1979 உலகக் கோப்பையின் பல போட்டிகள் இரண்டு நாள்கள் நடந்தன. அந்த ஆண்டு உலகக் கோப்பை நடந்த சமயம், பல இடங்களில் போதுமான வெளிச்சம் இல்லை. அதனால் போட்டிகள் சீக்கிரமே தொடங்கின. வெளிச்சம் முற்றிலுமாகக் குறைந்தபோது, ஆட்டம் நிறுத்தப்பட்டு, அடுத்த நாளும் தொடர்ந்தது.

உலகக் கோப்பை வரலாறு... அன்று முதல் இன்று வரை...

றுதிப் போட்டியில் இந்தியாவும் மேற்கிந்திய தீவுகளும் மோதின. 183 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்திருந்தது. மேற்கிந்தியத் தீவுகள் எளிதாக வென்றுவிடும் நிலை. ஐந்து ரன்களில் முதல் விக்கெட் விழ, விவியன் ரிச்சர்ட்ஸ் வந்தார். 7 பவுண்டரிகளை விளாசினார். ஸ்ட்ரைக் ரேட் 122.

கேப்டன் கபில் தேவிடம் சென்ற மதன் லால், விவியன் ரிச்சர்ட்ஸ் விக்கெட்டை நான் வீழ்த்துகிறேன் எனப் பந்தை பிடுங்கி வீசினார். அந்தப் பந்தை தூக்கி அடித்து, கபில் தேவ் கைகளுக்கே ரிச்சர்ட்ஸ் அனுப்பினார். இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்தது. மதன் லாலும் மொஹிந்தர் அமர்நாத்தும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்த, இந்தியா கோப்பை வென்று வரலாறு படைத்தது.

உலகக் கோப்பை வரலாறு... அன்று முதல் இன்று வரை...

தொடரின் முதல் போட்டி சென்னையில் நடைபெற்றது. இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதின. ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் டீன் ஜோன்ஸ் விளாசிய பந்து சிக்ஸரா, பவுண்டரியா எனக் குழப்பம் ஏற்படுகிறது. அங்கே ஃபீல்டிங் செய்த ரவி சாஸ்திரியிடம் அம்பயர்ஆலோசித்து 4 ரன்களை வழங்கினார்.

பேட்ஸ்மேன் டீன் ஜோன்ஸ், அது சிக்ஸர் என முறையிட்டார். இன்னிங்ஸ் பிரேக்கில் ஆஸ்திரேலிய அணியின் மேனேஜர், அம்பயரிடம் முறையிட்டார். இந்திய கேப்டன் கபில் தேவ் அதை சிக்ஸராக மாற்றிக்கொள்ளச் சம்மதித்தார். போட்டியின் முடிவு என்ன தெரியுமா? ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. முதல் போட்டியில் வென்ற அதே உற்சாகத்தோடு ஆஸ்திரேலியா உலகக் கோப்பையை  வென்றது.

உலகக் கோப்பை வரலாறு... அன்று முதல் இன்று வரை...

த்தொடரின் ஒரு லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் மோதின. பாகிஸ்தான் அணியின் இன்சமாம் உல் ஹக், இம்ரான் கான் களத்தில் இருந்தனர். பிரயன் மெக்மில்லன் வீசிய ஒரு பந்தை, இன்சமாம் அடிக்க, பந்து பேட்டில் படாமல், காலில் பட்டுச் சென்றுவிட்டது. உடனே, ரன் எடுப்பதற்காக இன்சமாம் ஓடினார்.

இம்ரான் கான், வேண்டாம் என்று நின்றுவிட்டார். பந்து ஜான்டி ரோட்ஸ் கைகளில் கிடைக்கும். இன்சமாம், திரும்பி கிரீஸ் நோக்கி ஓடினார். எல்லோருமே ரோட்ஸ் ஸ்டம்பை நோக்கி அடிப்பார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், ஸ்டம்புக்கு அருகே தென்னாப்பிரிக்க வீரர்கள் இல்லாததால், மின்னல் வேகத்தில் ஓடினார் ரோட்ஸ். இன்சமாம் கிரீசுக்குள் நுழைவதற்கு முன்பே, ஸ்டம்புகள் மீது பாய்ந்து அவரை ரன் அவுட் செய்தார். இன்றுவரை கிரிக்கெட் வரலாற்றின் மிகச் சிறந்த ரன் அவுட்டாக இதுதான் பேசப்படுகிறது.

உலகக் கோப்பை வரலாறு... அன்று முதல் இன்று வரை...

ந்தியா, இலங்கை அணிகள் மோதிய அரையிறுதி ஆட்டம், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய இலங்கை அணி 251 ரன்கள் எடுத்தது. இந்திய அணியும் ஓரளவு சிறப்பாகவே ஆட்டத்தைத் தொடங்கியது. சச்சின் டெண்டுல்கர் அட்டகாசமாக ஆடி அரைசதம் கடந்தார்.

ஆனால், சச்சினின் விக்கெட் போட்டியை அப்படியே மாற்றிவிட்டது. இந்திய அணி 98 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானார் சச்சின். அவர் வெளியேறியவுடன், இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட்டானார்கள்.

அடுத்த 22 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இந்தியா இழந்தது. கோபமடைந்த இந்திய ரசிகர்கள், இருக்கைகளுக்கு தீ மூட்டினர். ஆட்டம், பாதியில் நிறுத்தப்பட்டு, இலங்கை வென்றதாக அறிவிக்கப்பட்டது.

உலகக் கோப்பை வரலாறு... அன்று முதல் இன்று வரை...

1999 தொடரில் ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டிதான், இன்றும் உலகக் கோப்பையின் மிகச் சிறந்த போட்டியாகக் கருதப்படுகிறது. அரையிறுதியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 213 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க அணிக்குக் கடைசி 31 பந்துகளுக்கு 39 ரன்கள் தேவை. கையில் இருப்பது 4 விக்கெட்டுகள்தான்.

ஆஸ்திரேலியா வென்றுவிடும் என எல்லோரும் நினைத்தனர். தென்னாப்பிரிக்க வீரர் லான்ஸ் குளூஸ்னர் சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். இன்னொரு பக்கம் விக்கெட்டுகள் சரிய, 3 பந்துகளில் 1 ரன் எடுத்தால் வெற்றி. கடைசி விக்கெட் இருந்தபோது, ஆலன் டொனால்டு ரன் அவுட். இரு அணிகளும் 213 ரன்கள். அப்போதெல்லாம் சூப்பர் ஓவர் இல்லை. எனவே, முந்தைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியிருந்ததால், அவர்களே இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

2003 தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அணி கென்யா. குரூப் சுற்றையே தாண்டாது என நினைத்த அணி,  அரையிறுதிக்கு முன்னேறியது. குரூப் சுற்றில் இலங்கையையே வீழ்த்தியது. சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. டெஸ்ட் அந்தஸ்து பெறாத ஓர் அணி, உலகக் கோப்பை அரையிறுதிக்குள் நுழைந்தது. அரையிறுதியில் கென்யா இந்தியாவிடம் தோற்றது.

தொடர்ந்து மூன்று உலகக் கோப்பைகள் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தது ஆஸ்திரேலிய அணி. 2007 தொடரில், பான்டிங் தலைமையில் ஒரு போட்டியில்கூட தோற்கவில்லை. 11 போட்டிகளிலும் வென்று, சாம்பியன் பட்டம் பெற்றது. இந்திய ரசிகர்களுக்கோ பெரும் ஏமாற்றம். குரூப் சுற்றில் வங்கதேசம், இலங்கை அணிகளிடம் தோல்வியடைந்து, அடுத்த சுற்றுக்கே முன்னேறாமல் வெளியேறியது இந்தியா.

உலகக் கோப்பை வரலாறு... அன்று முதல் இன்று வரை...

28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை வென்று சரித்திரம் படைத்தது இந்திய அணி. இந்தத் தொடரில் அணியின் ஹீரோவாக இருந்தவர், ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங். 362 ரன்கள் எடுத்து பேட்டிங்கில் கலக்கியவர், 15 விக்கெட்டுகளும் எடுத்தார்.

4 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்றதோடு, தொடர் நாயகன் விருதையும் வென்றார். ஆனால், முக்கியமான இறுதிப் போட்டியில் சூப்பர் ஹீரோவாக வந்து இந்திய அணியைக் காப்பாற்றியவர், கேப்டன் மகேந்திர சிங் தோனி. ஃபைனலில் அதிரடியாக ஆடி, 91 ரன்கள் எடுக்க, இலங்கையை வீழ்த்தி சாம்பியன் ஆனது இந்திய அணி.

உலகக் கோப்பை வரலாறு... அன்று முதல் இன்று வரை...

ந்தாவது முறையாக உலகக் கோப்பையை வென்று, ஆதிக்கம் பெற்றது ஆஸ்திரேலியா.அதன்மூலம், சொந்த மண்ணில் கோப்பை வென்ற இரண்டாவது அணி என்ற பெருமையையும் பெற்றது. இந்தத் தொடரில்தான் முதன்முறையாக, உலகக் கோப்பையில் இரட்டைச் சதங்கள் அடிக்கப்பட்டன.

ஜிம்பாப்வே அணிக்கெதிரான லீக் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் வீரர், கிறிஸ் கெய்ல் 215 ரன்கள் குவித்தார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான காலிறுதியில், நியூசிலாந்து பேட்ஸ்மேன் மார்டின் குப்தில் 237 ரன்கள் விளாசினார். மிகச் சிறிய மைதானங்களில் நிறைய போட்டிகள் நடந்ததால், பல சதங்கள் இத்தொடரில் அடிக்கப்பட்டன.

- சுப.தமிழினியன், மு.பிரதீப் கிருஷ்ணா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு