Published:Updated:

லார்ட்ஸ் மேஜிக்!

லார்ட்ஸ் மேஜிக்!
பிரீமியம் ஸ்டோரி
லார்ட்ஸ் மேஜிக்!

லார்ட்ஸ் மேஜிக்!

லார்ட்ஸ் மேஜிக்!

லார்ட்ஸ் மேஜிக்!

Published:Updated:
லார்ட்ஸ் மேஜிக்!
பிரீமியம் ஸ்டோரி
லார்ட்ஸ் மேஜிக்!
லார்ட்ஸ் மேஜிக்!
லார்ட்ஸ் மேஜிக்!

குட்டிச் சுட்டி முதல் தாத்தா பாட்டி வரை எல்லோருக்கும் பிடித்த விளையாட்டு, கிரிக்கெட். மொத்த இந்தியாவும் கொண்டாடும் விளையாட்டு. இன்றைக்கு தோனி, கோலி என நாம் கொண்டாடும் இந்த கிரிக்கெட் இவ்வளவு  பிரபலமாயிருக்கிறது என்றால், அதற்குக் காரணம், ஒரு உலகக் கோப்பை வெற்றிதான்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லார்ட்ஸ் மேஜிக்!

*1983... மூன்றாவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் தொடங்கியது. அதில் இந்திய அணியும் கலந்துகொண்டது.

லார்ட்ஸ் மேஜிக்!

*அப்போதெல்லாம் இந்தியா, கிரிக்கெட்டில் கத்துக்குட்டிதான். வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள்தான் எப்போதும் வென்றுகொண்டே இருக்கும். அவர்களை எப்போதாவது ஒருமுறைதான் இந்தியா வெல்லும். இப்போது இருக்கும் பங்களாதேஷ் அணி மாதிரிதான் அப்போது இந்தியா.

லார்ட்ஸ் மேஜிக்!

*முதல் இரண்டு உலகக் கோப்பைகளிலும், முதல் சுற்றிலேயே வெளியேறியிருந்தது இந்திய அணி. மூன்றாம் முறையும் அதுதான் நடக்கும் என்று எல்லோரும் நினைத்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கத் தொடங்கின.

லார்ட்ஸ் மேஜிக்!

*அந்த இந்திய அணியின் கேப்டனாக இருந்தார், ‘ஹரியானா ஹரிகேன்’ என்று அழைக்கப்பட்ட கபில் தேவ். அவர்தான் இந்திய கிரிக்கெட்டின் தலையெழுத்தையே மாற்றியவர். பெரிதாக ஆர்வமின்றி விளையாடும் இந்திய வீரர்களை, ‘நம்மாலும் வெற்றிபெற முடியும்’ என்று நம்பவைத்து, போராடத் தூண்டினார் கபில். 

லார்ட்ஸ் மேஜிக்!

*முதல் போட்டியிலேயே, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது இந்திய அணி. அந்த வெற்றியை யாருமே எதிர்பார்க்கவில்லை.

லார்ட்ஸ் மேஜிக்!

*அது ஏதோ அதிர்ஷ்டத்தால் கிடைத்த வெற்றி என்று விமர்ச்சிக்கப்பட்டது. ஆனால், ‘அது திறமைக்குக் கிடைத்த வெற்றி’ என்று நிரூபித்துக்கொண்டே இருந்தது கபில் அண்ட் கோ. 

லார்ட்ஸ் மேஜிக்!

*ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும்? மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும். கபில்தேவ் தன் வீரர்களுக்கு முன்மாதிரியாக விளங்கினார்.

லார்ட்ஸ் மேஜிக்!

*ஜிம்பாப்வே அணியுடனான போட்டியில், இந்தியா மிகமோசமான நிலையில் இருந்தது. தோற்றால், அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது கடினம். அப்படி இருக்கையில் 9 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. அப்போது களமிறங்கிய கபில்தேவ், தனி ஆளாக இந்தியாவை மீட்டெடுத்தார்.

லார்ட்ஸ் மேஜிக்!

*அதிரடியாக பேட்டிங் செய்த அவர், கடைசி வரை அவுட்டாகாமல் 175 ரன்கள் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார். அப்போது டி.வி நிறுவனங்கள் ஸ்டிரைக்கில் இருந்ததால், அந்தப் போட்டியை யாரும் ஆவணப்படுத்தவில்லை. அந்த ஆட்டம், இன்றைய வீரர்கள் 200 அடிப்பதற்குச் சமம். அப்படிச் சூறாவளியாகச் சுழன்றது அந்த ஹரியானா ஹரிகேன்.

லார்ட்ஸ் மேஜிக்!

*புகழ்பெற்ற வெஸ்ட் இண்டீஸ் பௌலர்களைவிட, ரோஜர் பின்னி, மதன்லால் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். யஷ்பால் ஷர்மா, மொஹிந்தர் அமர்நாத் ஆகியோர் பேட்டிங்கில் கலக்கினார்கள். இந்தியா சரித்திரம் படைத்துக்கொண்டிருந்தது.

லார்ட்ஸ் மேஜிக்!

*இறுதிப் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. ஹாட்ரிக் கோப்பை வெல்ல தயாராக இருந்தது வெஸ்ட் இண்டீஸ். முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 183 ரன்களில் ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணி மிக எளிதாக வென்றுவிடும் என்றுதான் உலகம் நம்பியது. ஆனால்...

லார்ட்ஸ் மேஜிக்!

*இந்திய பௌலர்கள் பட்டையைக் கிளப்பினார்கள். பேட்டிங், பௌலிங் இரண்டிலும் கலக்கிய கபில் தேவ், இறுதிப் போட்டியில் ஃபீல்டிங்கில் அசத்தினார். நட்சத்திர பேட்ஸ்மேன் விவியன் ரிச்சர்ட்ஸ் அடித்த பந்தை, சுமார் 20 மீட்டர் தூரம் பின்புறம் பார்த்தபடியே ஓடி கேட்ச் பிடித்தார் கபில். அந்த அற்புத கேட்ச், பல ஆண்டுகளுக்குக் கொண்டாடப்பட்டது. இன்னமும் கொண்டாடப்படுகிறது. 

லார்ட்ஸ் மேஜிக்!

*இறுதியில, 140 ரன்களுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ் அணி. இந்தியா உலகக் கோப்பையை வென்று அசத்தியது. லார்ட்ஸ் பால்கனியில் கபில் தேவ் கோப்பையோடு நிற்கும் புகைப்படம் எல்லா செய்தித்தாள்களையும் அலங்கரித்தது.

லார்ட்ஸ் மேஜிக்!

*மொத்த தேசமும் அந்த வெற்றியைக் கொண்டாடியது. இந்திய வீரர்கள் ஹீரோக்கள் ஆனார்கள். அதுவரை கிரிக்கெட் பார்க்காதவர்களையும் அந்த வெற்றி ஈர்த்தது. தெருவெங்கும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார்கள். 

லார்ட்ஸ் மேஜிக்!

*இந்த வெற்றியால், அதுவரை இங்கிலாந்தில் மட்டுமே நடந்துவந்த உலகக் கோப்பை தொடரை, 1987-ல் இந்தியாவில் நடத்த முடிந்தது. அது இன்னும் ஆயிரக்கணக்கான இந்தியர்களை கிரிக்கெட் பேட்டோடு சுற்றவைத்தது. அதன் பிறகு, இந்திய கிரிக்கெட் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருந்தது.

லார்ட்ஸ் மேஜிக்!

*ஆனால், அதன்பிறகு இந்தியாவால் பல ஆண்டுகள் உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை. 2003-ல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி தோற்றது மென் இன் புளூ. ஆனாலும், சச்சின், டிராவிட், கங்குலி போன்றவர்கள் பலருக்கும் ரோல் மாடல்களாக இருந்தனர்.

லார்ட்ஸ் மேஜிக்!

*28 ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது தோனியின் படை. சொந்த ஊரில் கோப்பையை வென்று, அடுத்த தலைமுறைக்கு கிரிக்கெட் ஆசை விதைத்தனர் இந்திய வீரர்கள்.

லார்ட்ஸ் மேஜிக்!

*இன்று நாமெல்லாம் சச்சின், தோனி, கோலி ஆகியோரைப் பார்த்து கிரிக்கெட் விளையாடத் தொடங்குகிறோம். ஆனால், உண்மையில் அவர்களை கிரிக்கெட் பக்கம் ஈர்த்ததே 1983 உலகக் கோப்பை வெற்றிதான்.

* லார்ட்ஸ் மைதான பால்கனியில், உலகக் கோப்பையோடு கபில்தேவ் நிற்கும் அந்தத் தருணம்தான், இந்திய கிரிக்கெட்டை மாற்றிய ‘டர்னிங் பாயின்ட்’. இந்திய கிரிக்கெட்டின் வரலாறு தொடங்கும் இடம் அதுதான்!

 -மு.பிரதீப் கிருஷ்ணா