Published:Updated:

புழுதி பறக்கும் பாரேய்...

புழுதி பறக்கும் பாரேய்...
பிரீமியம் ஸ்டோரி
புழுதி பறக்கும் பாரேய்...

புழுதி பறக்கும் பாரேய்...

புழுதி பறக்கும் பாரேய்...

புழுதி பறக்கும் பாரேய்...

Published:Updated:
புழுதி பறக்கும் பாரேய்...
பிரீமியம் ஸ்டோரி
புழுதி பறக்கும் பாரேய்...
புழுதி பறக்கும் பாரேய்...

கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் கேம் மட்டுமல்ல; யார்க்கர், பௌன்ஸர், ஸ்விங் எனப் பந்துவீச்சிலும் ரசிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. இந்த உலகக்கோப்பைத் தொடரில் நம்மை அப்படி ஈர்க்கக்கூடிய பௌலர்கள் யார் யார்?

இந்தியா - முகமது ஷமி
பு
ம்ரா, குல்தீப், சஹால் போன்றோர் இருக்கும்போது ஷமியா? ஆம், இந்த உலகக்கோப்பையில் ஷமியின் தாக்கம் கண்டிப்பாக எல்லோரும் எதிர்பார்ப்பதைவிட அதிகமாகவே இருக்கும். பேட்டிங்குக்குச் சாதகமான இங்கிலாந்து ஆடுகளங்களில் விக்கெட் வீழ்த்துவது ரொம்ப முக்கியம். முதல் பவர்பிளே, மிடில் ஓவர், டெத் என எல்லா இடங்களிலும் பந்து வீசி விக்கெட் வீழ்த்தக்கூடிய திறன்கொண்டவர் ஷமி. இந்த ஐ.பி.எல் தொடரில் 14 போட்டிகளில் 19 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார். கடந்த உலகக்கோப்பையில்கூட 17 விக்கெட்டுகள் (7 போட்டிகள்) கைப்பற்றியிருந்தார். பந்தை நன்றாக ஸ்விங் செய்யக்கூடிய அவரது திறனே இந்தியாவுக்கு மிக முக்கிய ஆயுதமாக விளங்கும்.

நியூசிலாந்து - டிரெண்ட் போல்ட்
மு
ன்பு இருந்த வேகம் இப்போது இல்லையென்றாலும், இன்னும் பந்தை லேட் ஸ்விங் செய்வதில் போல்ட் கில்லாடிதான். தன் அசத்தல் ஸ்விங்கால் ஒரே ஸ்பெல்லில் எதிரணியைச் சுருட்டி வீசிடுவார். அதற்கு உதாரணம், டிசம்பர் மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி. 15 பந்துகளில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி மிரட்டியிருந்தார் போல்ட். அதுவும், ஸ்விங்கின் சொர்க்க பூமியான இங்கிலாந்து ஆடுகளங்களில்... `போல்ட் ஜாக்கிரதை’ என்று போர்டு வைக்க வேண்டும். குறிப்பாக, ஆரம்பத்திலேயே அதிரடி காட்ட நினைக்கும் தொடக்க ஜோடிகள், இவரிடம் உஷாராக இருக்க வேண்டும். முதல் ஸ்பெல்லில் ரோஹித் போல் ஆடாமல், தவான் போல் ஆடினால், பேட்ஸ்மேன் காலி!

புழுதி பறக்கும் பாரேய்...

ஆப்கானிஸ்தான் - ரஷீத் கான்
ங்கிலாந்து ஆடுகளங்கள் சுழலுக்குச் சாதகமாக இல்லாமல் போகட்டும். ஆனால், ரஷீத் கான் பந்து வீசுவதைப் பார்ப்பது, நிச்சயம் அற்புதமான அனுபவம்தான். 20 வயதுடைய வீரனைப் பார்த்து, உலகின் முன்னணி வீரர்கள் மிரள்வதைப் பார்ப்பதே அலாதி இன்பம். அதுவும் உலகக்கோப்பை என்ற மிகப்பெரிய அரங்கில், இந்த இளம் வீரன், தன் கத்துக்குட்டி அணியை எங்கே அழைத்துச் செல்கிறான் என்பதை, கூர்ந்து கவனித்தே ஆகவேண்டும். வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்கதேசம் போன்ற அணிகளை ஆப்கானிஸ்தான் வீழ்த்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. ரஷீத்தின் செயல்பாடுதான், புள்ளிப்பட்டியலில் அந்த அணி எங்கே இருக்கப்போகிறது என்பதை முடிவுசெய்யப்போகிறது.

ஆஸ்திரேலியா - மிட்செல் ஸ்டார்க்
டோ
னி ஸ்டார்க், தானோசைக் கொன்று உலகத்தைக் காப்பாற்றிவிட்டார். ஆர்யா ஸ்டார்க், நைட் கிங்கைக் கொன்று வெஸ்டரோசைக் காப்பாற்றிவிட்டார். இது, மிட்செல் ஸ்டார்க் முறை. ஆஸ்திரேலியாவின் கோப்பையைத் தக்கவைத்து, கிரிக்கெட் உலகில் அவர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டவேண்டிய பொறுப்பு இவரிடம் இருக்கிறது. கடந்த உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்றவர், இங்கிலாந்திலும் தன் வேகத்தைக் காட்டி மிரட்டக்கூடும். காயத்திலிருந்து முழுமையாகக் குணமடைந்துவிட்டால், இவருடைய யார்க்கர்கள் இங்கிலாந்தில் பல சேதங்களை ஏற்படுத்தும்.

இலங்கை - லசித் மலிங்கா
ந்த இலங்கை அணியில் மலிங்காவின் நிலையை நினைத்தால், `ஊருக்குள்ள டபுள் பைக்ல ஸ்டேண்டிங்ல வந்தவன்டா’ டெம்ப்ளேட்தான் ஞாபகம் வருகிறது. தொடர்ந்து இரண்டு ஃபைனல், ஒரு காலிறுதி என உலகக்கோப்பையில் அசத்திய இலங்கை அணியில் ஆடியவர், இப்போது கத்துக்குட்டியாகப் பரிணாமம் அடைந்துகொண்டிருக்கும் அணிக்கு ஆடிக்கொண்டிருக்கிறார். இருந்தாலும் அவரது ஐ.பி.எல் செயல்பாடு, இன்னும் மேட்ச் வின்னிங் பர்ஃபாமன்ஸ்களைக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. முன்புபோல் வேகமில்லை என்றாலும், யார்க்கர், ஸ்லோ பால் போன்ற அவரது வேரியேஷன்கள் நிச்சயம் கைகொடுக்கும். இலங்கை அணியின் கொஞ்சநஞ்ச கௌரவத்தைக் காப்பாற்றவேண்டியிருப்பதால், மலிங்காவின் யார்க்கர்கள், இங்கிலாந்தில் கொஞ்சம் உக்கிரமாக இருக்கலாம்.

புழுதி பறக்கும் பாரேய்...

வங்கதேசம் - ஷகிப் அல் ஹசன்
ங்கதேச கிரிக்கெட் வரலாற்றின் நம்பர் ஒன் வீரர், தான் கற்ற மொத்த வித்தையையும் காட்டவேண்டிய தருணம் வந்திருக்கிறது. கடந்த இரண்டு ஐ.சி.சி தொடர்களிலும் காலிறுதி, அரையிறுதி என முன்னேறியிருப்பதால், வங்கதேசத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பேட்டிங் ஆர்டர் ஓரளவு பலமாக இருக்கும் நிலையில், வேகப்பந்து வீச்சாளர்களின் கன்சிஸ்டென்சி பெரும் பலவீனமாக இருக்கிறது. அதனால், மிடில் ஓவர்களில் எதிர் அணிகளை பார்ட்னர்ஷிப் அமைக்கவிடாமல் தடுப்பது, விக்கெட்டுகள் வீழ்த்துவது என ஷகிப், முழுவீச்சோடு செயல்பட்டாக வேண்டும். இவரது அனுபவச் சுழல், அந்த அணியின் தேவையை நிச்சயம் பூர்த்திசெய்யும். 2011-ல் யுவராஜ் ஆடியது போன்ற ஓர் ஆட்டத்தை ஷகிப் காட்டலாம்!

பாகிஸ்தான் - ஹசன் அலி
2017
சாம்பியன்ஸ் டிராபி கனவை நனவாக்கியதில் பெரும்பங்கு ஹசன் அலியையே சேரும். 5 போட்டிகளில் 13 விக்கெட்டுகள் வீழ்த்தி, தொடர் நாயகன் விருதை வென்றதோடு பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மீண்டும் ஒரு புது அடையாளத்தைப் பெற்றுத்தர உதவினார். கடந்த ஆண்டு 15 போட்டிகளில் 19 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படியான செயல்பாடு இல்லைதான். இருந்தாலும், ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் அதே வீரியம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், உலகக்கோப்பை நடக்கும் இடம், சாம்பியன்ஸ் டிராபி நடந்த அதே இடம்தான். அதனால் மிடில் ஓவர்களில் கடந்த தொடர்போல் விக்கெட் வேட்டை நிகழ்த்தலாம். ஐ.சி.சி தொடர் வந்தாலே முழுவீச்சில் செயல்படுபவர்களை நாம் பார்த்திருப்போம், அப்படி ஒரு சர்ப்ரைஸ் பேக்கேஜாக ஹசன் அலி இருக்க வாய்ப்புகள் அதிகம்.

புழுதி பறக்கும் பாரேய்...

தென்னாப்பிரிக்கா - ககிசோ ரபாடா
கொ
ல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் சூப்பர் ஓவரில் ஆண்ட்ரே ரஸலுக்கு ரபாடா வீசிய யார்க்கர்தான் இந்த ஐ.பி.எல் சீஸனின் மிகச்சிறந்த பந்து. அந்த ஒரு ஓவர், ரபாடாவின் திறனுக்குச் சிறு உதாரணம். ஆறு பந்து… ஆறுமே யார்க்கர்... அதுவும் 145+ கி.மீ வேகத்தில்... கடந்த சில வருடங்களாகவே தன் அசுரவேகம் மூலம் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறார். வேகம் மட்டுமல்ல, அதோடு பந்தைத் தான் நினைத்த லைன் அண்டு லென்த்தில் பிட்ச் செய்யும் அக்யூரசிதான் மற்ற வேகப்பந்து வீச்சாளர்களிடமிருந்து ரபாடாவைத் தனித்துக் காட்டுகிறது. பவர்ப்ளே, டெத் ஓவர் என எந்த நேரத்திலும் விக்கெட் வேட்டை நடத்தக்கூடியவர். இந்த உலகக்கோப்பையில் நிச்சயம் ரபாடாவின் யார்க்கரில் பல மிடில் ஸ்டம்புகள் சிதறுவதை நாம் பார்க்கலாம்.

இங்கிலாந்து - அடில் ரஷீத்
ங்கிலாந்து அணியின் பெளலிங்கில் முக்கியப் புள்ளியாக இருக்கப்போகிறார் அடில் ரஷீத். இவரின் தற்போதைய ஃபார்ம் வலுவான இங்கிலாந்து அணியை மேலும் வலுவாக்குகிறது. கடந்த ஆண்டு இங்கிலாந்து அணியின் அதிக விக்கெட் வீழ்த்தியவர் இவர்தான். 24 போட்டிகளில் 42 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். பொதுவாக, டெத் ஓவர்களில் ஸ்பின்னர்களைப் பயன்படுத்துவது அபூர்வம். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சமீபத்திய போட்டியில் இவர் வீசிய 48-வது ஓவர்தான் ஆட்டத்தை இங்கிலாந்துப்பக்கம் திருப்பியது. 5 பந்துகளில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அமர்க்களப்படுத்தினார் ரஷீத். இப்படியான சில மேஜிக் ஸ்பெல்களை இவரிடம் எதிர்பார்க்கலாம்.

புழுதி பறக்கும் பாரேய்...

வெஸ்ட் இண்டீஸ் - ஷெல்டன் காட்ரல்
வி
க்கெட் வேட்டை நடத்துவாரா தெரியாது. மேட்ச் வின்னராக இருப்பாரா தெரியாது. எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்துவாரா தெரியாது. பிறகு, உலகக்கோப்பையில் இவரிடம் என்ன எதிர்பார்ப்பது? போட்டிக்கு ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினாலும் பரவாயில்லை. அதன் பிறகு அவர் செய்யும் அந்த செலிபிரேஷனைப் பார்க்கவேண்டியாவது அவரை கவனிக்க வேண்டும். மார்ச் பாஸ்ட் செய்து, சல்யூட் அடித்து, இன்னொரு டிரேடு மார்க் கரீபியக் கொண்டாட்டத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் காட்ரல். பராசக்தி எக்ஸ்பிரஸ் தாஹிருக்குச் சவால்விடும் அந்த செலிபிரேஷனை அடிக்கடி பார்க்க யாருக்குத்தான் ஆசை இருக்காது?!

- மு.பிரதீப்கிருஷ்ணா, கி.ர.ராம் கார்த்திகேயன்