Published:Updated:

`மீண்டும் மேக்ஸ்வெல் ஜாலம்!' - 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா #INDvAUS

`மீண்டும் மேக்ஸ்வெல் ஜாலம்!' - 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா #INDvAUS
`மீண்டும் மேக்ஸ்வெல் ஜாலம்!' - 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா #INDvAUS

இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி, தொடரையும் 2-0 என்ற கணக்கில் வென்றது.

`மீண்டும் மேக்ஸ்வெல் ஜாலம்!' - 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா #INDvAUS

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, இந்தியாவை பேட்டிங் செய்யப் பணிந்தது. இன்றைய போட்டியில் ரோஹித் ஷர்மா மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக தவான் களம் கண்டார். இதனால், தவான் - கே.எல்.ராகுல் இந்தியாவின் இன்னிங்ஸைத் தொடங்கினர். கே.எல்.ராகுல், விராட் கோலி, தோனி ஆகியோரின் அதிரடி உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி, 4 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்தது. குறிப்பாக, கடைசி 6 ஓவர்களில் 91 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலிய அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்தது. 

சவாலான இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு, ஷார்ட் - ஸ்டோனிஸ் இணை துவக்கம் தந்தது. இதில், ஸ்டோனிஸ் ஏமாற்றினாலும் ஷார்ட் அணிக்கு கைகொடுத்தார். அவர் 40 ரன்கள் சேர்த்து, விஜய் சங்கர் ஓவரில் வெளியேறினார். தொடர்ந்து வந்த ஆரோன் பின்ச் சொதப்பினாலும், மேக்ஸ்வெல் நிலைத்து நின்றார். இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் பவுண்டரிகளாகவும் சிக்ஸர்களாகவும் விளாசிய இவர், சதம் அடித்தார். டி20 போட்டிகளில் இவர் அடிக்கும் மூன்றாவது சதம் இதுவாகும். இவரின் சதத்தின் உதவியால், ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விரைவாக எட்டியது. 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றிபெற்றதுடன் டி20 தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்தது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 9 சிக்ஸ்ஸர், 7 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் எடுத்தார்.