சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

அடிச்சா சிக்சர்... எடுத்தா செஞ்சுரி!

அடிச்சா சிக்சர்... எடுத்தா செஞ்சுரி!
பிரீமியம் ஸ்டோரி
News
அடிச்சா சிக்சர்... எடுத்தா செஞ்சுரி!

அடிச்சா சிக்சர்... எடுத்தா செஞ்சுரி!

அடிச்சா சிக்சர்... எடுத்தா செஞ்சுரி!

ந்தமுறை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் வாணவேடிக்கைக்குப் பஞ்சமிருக்காது. பெவிலியன்கள் சிக்ஸர் மழையில் நிச்சயம் நனையும்... பேட்டிங்குக்குச் சாதகமான, இங்கிலாந்தின்  குட்டி மைதானங்களில் சதங்களுக்கும் சாதனைகளுக்கும் குறைவிருக்காது. இந்த உலகக்கோப்பையில், ஒவ்வோர் அணியிலிருந்தும் இப்படித் தெறிக்க விடப்போகிற நட்சத்திர பேட்ஸ்மேன்கள் யார் யார்?

இந்தியா

அடிச்சா சிக்சர்... எடுத்தா செஞ்சுரி!

`என்ன, கோலி இல்லையா?’ கோலி, நிச்சயமாக இந்திய அணியின் மிக முக்கிய வீரர்தான். ஆனால், அவரைவிட இந்த உலகக்கோப்பையில் தவானிடம் நிறைய எதிர்பார்க்கலாம். ஏனெனில், ஐ.சி.சி தொடர் என்றாலே சின்ராசைக் கையில் பிடிக்க முடியாது! 2013, 2017 சாம்பியன்ஸ் டிராபி, 2015 உலகக்கோப்பை என அனைத்திலும் இந்தியாவின் டாப் ஸ்கோரர் ‘கப்பர்’தான். அதனால், இந்த முறையும் தொடையைத் தட்டி, மீசையை முறுக்கி சதங்கள் குவிப்பார் என எதிர்பார்க்கலாம். ஐ.பி.எல் தொடரில் அவர் காட்டும் ஆட்டம், அவர்மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. இத்தனை ஆண்டுகள் தடுமாறிக்கொண்டிருந்த டெல்லி அணிக்கு, தவானின் அனுபவம் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. அவரும் மிகப் பொறுப்பாக விளையாடிப் பல போட்டிகளை வென்று காட்டியிருக்கிறார். நிச்சயம், உலகக் கோப்பையிலும் அந்தப் பொறுப்பான தவானைப் பார்க்கலாம்.

இங்கிலாந்து

அடிச்சா சிக்சர்... எடுத்தா செஞ்சுரி!

ங்கிலாந்து அணியில் எல்லோருமே அதிரடியர்கள்தான். பேர்ஸ்டோ, பட்லர் ஆகியோரின் விஸ்வரூபத்தை ஐ.பி.எல் தொடரில் பார்த்திருக்கலாம். ஜேசன் ராய், கேப்டன் இயான் மோர்கன் ஆகியோரும் மிரட்டல் ஃபார்மில் இருக்கிறார்கள். எல்லோருமே கடந்த சில மாதங்களாக ரன் வேட்டை நடத்திக் கொண்டே இருக்கிறார்கள். இருந்தாலும், அவர்களுள் ஜோ ரூட் ஆடப்போகும் ஆட்டம் மரண மாஸாக இருக்கப்போகிறது. கடினமான பிட்ச்களில் எதிர் அணி பௌலர்கள் எதிர் பாராமல் மிரட்டினால்கூட ரூட்தான் `வேர்’ போல் நின்று அணியைக் காப்பாற்ற வேண்டியிருக்கும். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் ரூட், தன் ஒருநாள் போட்டித் திறனை நிரூபிக்க இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைத்திடாது. உலகக் கோப்பையின் ரூட்டுதலயாக நிச்சயம் ஜோரூட் இருப்பார்!

ஆஸ்திரேலியா

அடிச்சா சிக்சர்... எடுத்தா செஞ்சுரி!

ல வருடங்கள் சிறையில் இருந்தாலும் சினம் குறையாமல் திரும்பி வந்த கபாலியைப்போல், வெளுத்துக்கட்டிக்கொண்டிருக்கிறார் டேவிட் வார்னர். `நிஜமாலுமே ஒரு வருஷம் நீ சும்மாதான் இருந்தியா?’ என்று வாய்பிளக்கும் அளவுக்கு ஐ.பி.எல் தொடரில் ரன் குவித்திருக்கிறார் இந்த ஆஸ்திரேலியர். அதுவும் 12 போட்டிகளில் 692 ரன் (சராசரி : 69.2). 1 சதம், 8 அரை சதம் என ஒரு பௌலரையும் விட்டுவைக்கவில்லை இந்த லிட்டில் டைனமோ. சொல்லப்போனால் இது வார்னர் 2.0! கடந்த சில மாதங்களாகத் துவண்டு கிடந்த ஆஸ்திரேலிய அணி, மீண்டு கொண்டிருக்கும் நிலையில், இவரது ஃபார்ம் அணிக்குப் பலமடங்கு பலம் சேர்க்கிறது. உலகக்கோப்பையின் டாப் ஸ்கோரர் இவர்தான் என்று மெல்போர்ன் கங்காருக்கள் ஆரூடம் சொல்லியிருக்கின்றன... இதுதான் வரவேண்டிய நேரத்துக்கு சரியா வர்றது!

வங்கதேசம்

அடிச்சா சிக்சர்... எடுத்தா செஞ்சுரி!

ங்கதேச அணியின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார் ரஹீம். எப்படிப்பட்ட ஆட்டமாக இருந்தாலும், கடைசி வரை விடாமல் போராடக்கூடிய அவரது குணம்தான் வங்கதேசத்தின் மிகப்பெரிய பலம். கடந்த ஆண்டு நடந்த ஆசியக் கோப்பைத் தொடரில், இலங்கைக்கு எதிராக இவர் போராடி அடித்த அந்த சதம், ஒரு சோற்றுப் பதம். டாப் ஆர்டரில் தமீம் இக்பால், மிடில் ஆர்டரில் மஹ்மதுல்லா, ஷகிப் அல் ஹசன் தவிர்த்து, சீராக ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் இல்லை. அதுமட்டுமல்லாமல், நிதானமாக நின்று பார்ட்னர்ஷிப் அமைக்கக்கூடிய பேட்ஸ் மேன்களும் அங்கு குறைவு. அந்த இடங்களில் இவரது தேவை அதிகமாகிறது. ரஹீமின் அனுபவமும், நிதானமான ஆட்டமும்தான் வங்கதேசம் எத்தனை முறை நாகினி ஆட்டம் ஆடப்போகிறது என்பதைத் தீர்மானிக்கும்!

நியூஸிலாந்து

அடிச்சா சிக்சர்... எடுத்தா செஞ்சுரி!

ஸ்பின்னுக்குச் சாதகமான பிட்ச், ஸ்விங்குக்குச் சாதகமான பிட்ச், பௌன்ஸி பிட்ச், ஃப்ளாட் பிட்ச்... எதுவாக இருந்தாலும் இவருக்குக் கவலையில்லை. எதிர் அணியின் வியூகம் எதுவாக இருந்தாலும் பிரச்னையில்லை. வில்லியம்சனின் அரணுக்கு முன் எதுவும் பலிக்காது. ராஸ் டெய்லர், லாதம் என மற்ற பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்மில் இருந்தாலும், இவரது கன்சிஸ்டென்சிதான் நியூசிலாந்து அணியின் பிரதான நம்பிக்கை. ரன்ரேட் அதிகமாக வேண்டுமா, ரிஸ்கே இல்லாமல் பவுண்டரிகளால் பட்டையைக் கிளப்புவார்... விக்கெட் போகுதா, பிட்சிலேயே குத்தவைத்து உட்கார்ந்துவிடுவார். இந்த ஐ.பி.எல் தொடரில் பெரிதாக ஏதும் சோபிக்கவில்லை என்றாலும், அது எந்த வகையிலும் இங்கிலாந்தில் பிரதிபலிக்காது. ஏனெனில், இது தரமான கிவி!

பாகிஸ்தான்

அடிச்சா சிக்சர்... எடுத்தா செஞ்சுரி!

பாகிஸ்தான் அணியில் யாரையுமே நம்ப முடிவதில்லை. `நான் போன மேட்ச் அடிச்சிட்டேன். என் கோட்டா ஓவர்’ என்பதுபோல்தான் மொத்தமாக இருக்கிறார்கள். அந்த குரூப்புக்குள் டூப்பாக, ஓரளவு ஆறுதல் அளிப்பது ஆஸம் மட்டும்தான்! ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக் போன்றோர் தொடர்ந்து நல்ல தொடக்கம் கொடுத்தாலும், அவ்வப்போதுதான் பெரிய இன்னிங்ஸ் ஆடுகிறார்கள். ஆனால், பாபர் ஆஸம் பாகிஸ்தான் ரசிகர்கள் நம்பக்கூடிய ஒரு பேட்ஸ் மேனாக உருவெடுத்துள்ளார்.  51.29 என்ற அவரது சராசரியும், 84.66 என்ற ஸ்ட்ரைக் ரேட்டும் சொல்லிவிடும் இவரால் என்ன முடியும் என்பதை. சாம்பியன்ஸ் டிராபியில் நிகழ்த்திய அற்புதத்தை மீண்டும் பாகிஸ்தான் அணி நிகழ்த்த வேண்டுமென்றால், இவர் `ஆஸமா’க ஆடவேண்டும்!

வெஸ்ட் இண்டீஸ்

அடிச்சா சிக்சர்... எடுத்தா செஞ்சுரி!

கிறிஸ் கெய்ல், ஈவின் லூயிஸ், ஷிம்ரான் ஹிட்மேயர், ஆண்ட்ரே ரஸல் என ஹிட்டர்களாக நிறைந்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் உயிர்நாடி ஷாய் ஹோப்! அணியின் அதிரடி அணுகுமுறையால், ஒன்று 400 அடிக்கலாம், இல்லையேல் 140 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகலாம். கடந்த சில மாதங் களாக, அதை மிக அற்புதமாக பேலன்ஸ் செய்து, அணிக்கு மிகப்பெரிய `ஹோப்’ கொடுத்துக்கொண்டிருக்கிறார் இந்த ஷாய். ரன் சேஸ்களைத் துல்லியமாகக் கணக்கிட்டுக் கடைசி வரை போராடுவதில் கில்லாடி. கடந்த சில ஆண்டு களில் எந்த வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேனிடமும் பார்க்காத சில குணங்களை க்கொண்டி ருக்கிறார். அதனாலேயே, அந்த அணியின் வெற்றி வாய்ப்பு அவரைச் சுற்றியே அமையும்.

 தென்னாப்பிரிக்கா

அடிச்சா சிக்சர்... எடுத்தா செஞ்சுரி!

ந்த உலகக்கோப்பையில் ஆடும் எல்லா பேட்ஸ் மேன்களையும்விட அதிக நெருக்கடியைச் சுமக்கப் போவது டுப்ளெஸ்ஸிதான். `சோக்கர்ஸ்’ என்று விமர்சிக்கப் படும் அணியை வழிநடத்த வேண்டும், ஃபார்மில் இல்லாத பேட்டிங் ஆர்டரை (டி காக் தவிர்த்து) நிலைநிறுத்த வேண்டும், அதையும் தாண்டி டி வில்லியர்ஸ் என்ற மகத்தான வீரரின் இடத்தை நிரப்பவேண்டும். டுப்ளெஸ்ஸி தோள்களில் மிகப்பெரிய பாரம் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை பாகுபலியைப் போல் அசால்ட்டாக டீல் செய்யும் திறன்கொண்டவர் இவர். டிவில்லியர் ஓய்வுக்குப் பிறகு, ஒவ்வொரு முறை களத்தில் இறங்கும்போதும் அவர் ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டே இருக்கிறார் ஃபாஃப்... சந்திரமுகி கோவாலு போல் தனியாகவே!

இலங்கை

அடிச்சா சிக்சர்... எடுத்தா செஞ்சுரி!

ற்ற அணிகளிலெல்லாம், நான்கைந்து பேட்ஸ்மேன்களை அலசி ஒருவரைத் தேர்வு செய்யவேண்டியிருந்தது. இலங்கை அறிவித்த அணியில், மாத்யூஸை மட்டுமே பேட்ஸ்மேன் என அடையாளம் காண முடிந்ததால், அவரே போட்டிகளின்றி இந்த மரியாதைக்குரிய இடத்தைப் பிடிக்கிறார். இப்போது இருக்கும் அணியில் இவரையும் திசாரா பெரேராவையும் தவிர்த்து, சீராக பேட்டிங் செய்யக்கூடியவர் என்று எவரும் இல்லை என்பதாலும், பெரேராவின் அதிரடியையும் எல்லாப் போட்டிகளிலும் நம்ப முடியாது என்பதாலும் மொத்தப் பொறுப்பையும் மாத்யூஸ் சுமக்கவேண்டும். நியூசிலாந்து டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து தண்டால் எடுத்தவர், இங்கிலாந்திலும் அப்படிச் சில இன்னிங்ஸ் ஆடினால் மட்டுமே இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றைக் காப்பாற்ற முடியும்.

ஆப்கானிஸ்தான்

அடிச்சா சிக்சர்... எடுத்தா செஞ்சுரி!

திரடி ஓப்பனர் முகமது செஷாத், இளம் ரஹ்மத் ஷா போன்றோரைத்தான் பெரும் பாலானவர்கள் எதிர்பார்ப் பார்கள். ஆனால், இம்முறை அஸ்கர் ஆஃப்கனுக்கு இது மானப்பிரச்னை. உலகக் கோப்பைக்கு இரண்டு மாதம் முன், கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் அஸ்கர். அவரது அனுபவத்துக்கு மரியாதை கொடுத்திருக்க வேண்டும் என்று  ஆப்கானிஸ் தானே கொதித்தெழுந்த போதும், இவர் அமைதியாகவே இருந்தார். தன் ஆதங்கத்தை களத்தில் நிச்சயம் காட்டக் கூடும். அதிரடியான ஆட்டக் காரர்கள் இருந்தாலும், இவரது நிதானம் ஆப்கனுக்கு அவசியம் தேவை. சமீபத்திய தொடரில், தொடர்ந்து மூன்று அரை சதம் அடித்த அஸ்கர், இந்த உலகக்கோப்பையில் தன் முக்கியத்துவத்தை நிரூபிக்க நிச்சயம் போராடுவார்.

-மு.பிரதீப் கிருஷ்ணா