Published:Updated:

ஐபிஎல் அரையிறுதி, இறுதி போட்டிக்கு தடை விதிக்க கோரி வழக்கு!

ஐபிஎல் அரையிறுதி, இறுதி போட்டிக்கு தடை விதிக்க கோரி வழக்கு!
ஐபிஎல் அரையிறுதி, இறுதி போட்டிக்கு தடை விதிக்க கோரி வழக்கு!
ஐபிஎல் அரையிறுதி, இறுதி போட்டிக்கு தடை விதிக்க கோரி வழக்கு!

புதுடெல்லி: தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் 6 ஆவது கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற ஸ்பாட் ஃபிக்சிங் எனப்படும் சூதாட்டம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான வழக்கின் விசாரணை முடிவடையும் வரை,  தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 6 ஆவது கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிக்கு தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் ஸ்பாட் ஃபிக்சிங் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அஜித் சண்டிலா உறவினர் வீட்டில் ரெய்டு

இதனிடையே சூதாட்டப் புகாரில் கைதான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 3 வீரர்களில் ஒருவரான அஜித் சண்டிலாவின் உறவினர் ஒருவரின் ஃபரிதாபாத் வீட்டில் இன்று நடைபெற்ற சோதனையில் 20 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.