Published:Updated:

ஸ்ரீசாந்த் லேப்டாப்பில் பாலிவுட் டைரக்டர் அனுப்பிய மாடல் அழகிகளின் படங்கள்!

ஸ்ரீசாந்த் லேப்டாப்பில் பாலிவுட் டைரக்டர் அனுப்பிய மாடல் அழகிகளின் படங்கள்!
ஸ்ரீசாந்த் லேப்டாப்பில் பாலிவுட் டைரக்டர் அனுப்பிய மாடல் அழகிகளின் படங்கள்!
ஸ்ரீசாந்த் லேப்டாப்பில் பாலிவுட் டைரக்டர் அனுப்பிய மாடல் அழகிகளின் படங்கள்!

புதுடெல்லி: சூதாட்டப் புகாரில் சிக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் 3 பேரிகளில் ஒருவரான ஸ்ரீசாந்த் கடந்த வாரம் கைது செய்யப்பட்டபோது, மது அருந்தி இருந்ததாக கூறப்படும்  நிலையில், அவரது லேப்டாப்பில் பாலிவுட் டைரக்டர் ஒருவர் அனுப்பிய மாடல் அழகிகளின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஸ்ரீசாந்தின் லேப்டாப்பை, கடந்த சனிக்கிழமையன்று அவர் தங்கியிருந்த மும்பை ஓட்டல் அறை ஒன்றிலிருந்து கைப்பற்றிய போலீசார், அதில் இடம்பெற்றுள்ள தகவல்களை ஆராய்ந்து வருகின்றனர்.

அதில் புக்கிகளுடன் அவர் தொடர்பில் இருந்ததை நிரூபிக்கும் செல்போன் எண்கள் மற்றும் இ-மெயில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. சில இ-மெயில்கள் அழிக்கப்பட்டுள்ளன. இவை தனது நண்பரும்,  புக்கியுமான ஜிஜுவுடன் ஸ்ரீசாந்த் நடத்திய உரையாடல்களாக இருக்கலாம் என்று போலீசார் கருதுவதால், அழிக்கப்பட்ட அந்த தகவல்களை மீண்டும் பெறுவதற்காக நிபுணர்களின் உதவியை நாட முடிவு செய்துள்ளனர்.

##~~##
பாலிவுட் டைரக்டர், மாடல் அழகிகள்
இதனிடையே ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டபோது அவர் மாடல் அழகிகள் மற்றும் முன்னணி நடிகை ஒருவருடன் இருந்ததாக காவல்துறை வட்டார தகவல்கள் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், அவரது லேப்டாப்பில் பாலிவுட் இயக்குனர் ஒருவர் ஸ்ரீசாந்துக்கு அனுப்பிவைத்த மாடல் அழகிகளின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளதாக தற்போது காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.