Published:Updated:

‘கே.எல்.ராகுல் ஆறுதல்; பந்துவீச்சில் ஆஸ்திரேலியா ஆதிக்கம்!’- 127 ரன்கள் இலக்கு!

‘கே.எல்.ராகுல் ஆறுதல்; பந்துவீச்சில் ஆஸ்திரேலியா ஆதிக்கம்!’- 127 ரன்கள் இலக்கு!
‘கே.எல்.ராகுல் ஆறுதல்; பந்துவீச்சில் ஆஸ்திரேலியா ஆதிக்கம்!’- 127 ரன்கள் இலக்கு!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி-20 கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி இந்தியாவை பேட்டிங் செய்யப் பணிந்தது. அதன்படி ரோஹித் ஷர்மா - கே.எல் ராகுல் இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்கினர்.

ஹிட்மேன் ரோஹித் இந்தப் போட்டியில் 5 ரன்களில் விக்கெட்டைப் பறிக்கொடுத்து ஏமாற்றம் அளித்தார். இதன்பின்னர் விராட் கோலி - கே.எல்.ராகுலுடன் இணைந்தார். இருவரும் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்தனர். இவர்களது ஆடிய விதத்தை பார்க்கும்போது இந்திய அணி நல்ல ஸ்கோரை எட்டும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கோலி சுழற்பந்துவீச்சாளர் சம்பா பந்துவீச்சில் இறக்கி சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு கேட்ச் ஆகி வெளியேறினார். கோலி 17 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்தார்.


அப்போது இந்திய அணி 8.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் களமிறங்கிய ரிஷப் பண்ட் அவசரப்பட்டு விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் அடித்த பந்து ஃபீல்டரிடம் தஞ்சம் அடைந்த நிலையில், ஒரு ரன் எடுக்க ஆசைப்பட்டு விக்கெட்டை இழந்தார். ராகுலுடன் தோனி கைக்கோத்தார். நிதானமாக விளையாடி வந்த கே.எல்.ராகுல் அரைசதத்தை பூர்த்தி செய்தார். சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு ராகுல் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் பின்னர் இந்தியாவுக்கு இறங்கு முகம்தான். வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். தோனி மட்டும் விக்கெட்டை இழக்காமல் ஆடிக்கொண்டிருந்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது. தோனி 37 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒரு சிக்ஸரும் விளாசினார். ஆஸ்திரேலியா அணி எக்ஸ்ட்ராஸ் வகையில் 11 ரன்களை வாரி வழங்கியது. ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆஸ்திரேலியா வெற்றிக்கு 127 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.