Published:Updated:

`தோனி உங்களை கூலாக இருக்க விடமாட்டேன்!’- ரிஷப் பன்ட் சவால்

`தோனி உங்களை கூலாக இருக்க விடமாட்டேன்!’- ரிஷப் பன்ட் சவால்
`தோனி உங்களை கூலாக இருக்க விடமாட்டேன்!’- ரிஷப் பன்ட் சவால்
`தோனி உங்களை கூலாக இருக்க விடமாட்டேன்!’- ரிஷப் பன்ட் சவால்

இந்தியாவில் ஐபிஎல் டி-20 சீசன் களைக்கட்டும் காலம் இது. இதுவரை ஒரே அணியில் விளையாடிய வீரர்கள் இந்தியாவில் பல்வேறு மாநில அணிகளுக்காகப் பங்கேற்பார்கள். சர்வதேசப் போட்டிகளில் முட்டிக்கொள்ளும் வீரர்கள் கூட கைகோர்த்துக்கொண்டு ஜாலியாக சுற்றுவதை பார்க்கலாம். தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்களை சென்னை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆதங்கப்படுவார்கள். இது வேறமாதிரியான மிக்ஸிங்காக இருக்கும். சர்வதேச கிரிக்கெட்டில் தோனி இந்தாண்டை தித்திப்பாகத் தொடங்கி இருக்கிறார். பேட்டிங்கில் பழைய தோனியை பார்க்க முடிகிறது. ஸ்டெம்பிங்கில் இன்னும் வேகமெடுக்கிறார். தோனி கீப்பிங் செய்யும் போது பேட்ஸ்மேன்கள் கவனம் என ஐசிசி ஒரு ட்வீட்டை தட்டிவிட்டது. அந்த அளவுக்கு விக்கெட் கீப்பிங்கில பின்னியெடுக்கிறார்.

`தோனி உங்களை கூலாக இருக்க விடமாட்டேன்!’- ரிஷப் பன்ட் சவால்

இந்நிலையில் இந்திய அணியின் இளம்வீரர் ரிஷப் பண்ட், தோனிக்கு சவால் விட்டுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் தோனி சென்னை அணிக்கு கேப்டனாக உள்ளார். ரிஷப் பண்ட் டெல்லி அணியில் விளையாடுகிறார். ரிஷப் பண்ட் பேசும் வீடியோ ஒன்றை டெல்லி அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதில், ரிஷப் பண்ட் ஒரு புத்தகத்தை கையில் வைத்திருக்கிறார். அதில் தோனியின் பெருமைகள் எல்லாம் இடம்பெற்றுள்ளது. அதனைப்பார்த்து விட்டு, “ மகி பாய் ஒரு ஆசான். அவர் இல்லை என்றால் நான் இங்கு இல்லை நான் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக வந்திருப்பேனா என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் இந்த ஐபிஎல் போட்டியில் அவரது அணிக்குக் கடுமையான சவால் அளிப்பேன். தோனியை கூலாக இருக்க விட மாட்டேன்”எனப் பேசுகிறார். இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் அதிகமாகப் பகிரப்பட்டுள்ளது,