Published:Updated:

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்: ரவி சவானி தலைமையில் விசாரணை குழு

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்: ரவி சவானி தலைமையில் விசாரணை குழு
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்: ரவி சவானி தலைமையில் விசாரணை குழு
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்: ரவி சவானி தலைமையில் விசாரணை குழு

சென்னை: ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தை விசாரிக்க ரவி சவானி தலைமையில் குழு அமைக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சீனிவாசன் கூறியுள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நடந்த ஊழல் குறித்து ஆலோசனை செய்வதற்காக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. இதன் பிறகு அதன் தலைவர் சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

போட்டிக்குத் தேர்வான வீரரின் பேராசையே இந்த ஊழலுக்கு காரணம். விளையாட்டின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் வகுக்கப்பட உள்ளது. அந்த விதிமுறைகளை மீறும் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க பி.சி.சி.ஐ. தயங்காது. அதேபோன்று ஒவ்வொரு அணிக்கும் கண்காணிப்பு குழு அமைக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் போட்டியின் போது ஒவ்வொரு வீரர்களுக்கும் வழங்கப்படும் சலுகைகள் குறைக்கப்படும்.

##~~##
போலீஸ் போன்று நடவடிக்கை எடுக்க பி.சி.சி.ஐ.க்கு அதிகாரம் கிடையாது. சி.பி.பி.ஐ. வழக்கு தொடரவும் முடியாது. விளையாட்டு அணியின் நிர்வாகமே நடவடிக்கை எடுக்கும். சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள வீரர்கள் மீதான நடவடிக்கை விஷயங்களில் பி.சி.சி.ஐ. எதையும் மூடி மறைக்கவில்லை. விதிமுறைகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.
கிரிக்கெட் சூதாட்டம் குறித்து ரவி சவானி தலைமையில் குழு அமைக்கப்படும். அந்த குழு தாக்கல் செய்யும் அறிக்கைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கைது செய்யப்பட்ட 3 வீரர்கள் மீதும் குற்றவழக்கு பதிவு செய்ய ராஜஸ்தான் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

போட்டியின் போது வீரர்களை சந்திக்க கட்டுப்பாடு கொண்டு வரப்படும். அதேபோன்று அங்கீகாரம் பெற்றவர்தான் வீரர்களின் எஜெண்டுளாக இருக்க முடியும். 3 வீரர்கள் தவறு செய்ததால் ஒட்டுமொத்த தொடருமே மோசம் என்று கூறிவிட முடியாது. சூதாட்டப் புகாருக்கு பிறகும் ஐ.பி.எல். போட்டியை அரங்கு நிறைந்து ரசித்த ரசிகர்களுக்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.