Published:Updated:

கிரிக்கெட் சூதாட்டம்: ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல்!

கிரிக்கெட் சூதாட்டம்:  ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல்!
கிரிக்கெட் சூதாட்டம்: ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல்!
கிரிக்கெட் சூதாட்டம்:  ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல்!

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக மும்பையில் மேலும் ஒரு புக்கியை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் நடைபெற்ற ஸ்பாட் ஃபிக்சிங் சூதாட்டம் தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்கள் மற்றும் புக்கிகள் என 15 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்புடைய ரமேஷ் வியாஸ் என்ற புக்கியை மும்பை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.அவரிடமிருந்து 92 மொபைல் போன்கள் மற்றும் 18 சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீசாந்த் லேட்டாப் பறிமுதல்


##~~##
இதனிடையே மும்பை ஓட்டலில் ஶ்ரீசாந்த்  கைதாகும்போது தங்கியிருந்த அறையில். இன்று சோதனையிட்ட போலீஸ் அதிகாரிகள் அவரது லேப்டாப்பை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் ஒரு ஐ பேட், மொபைல்போன், ஒரு டேட்டா கார்டு, ஒரு டைரி மற்றும் ரொக்கப்பணம் ரூ. 72,000 ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் கைப்பற்றப்பட்ட ஸ்ரீசாந்தின் லேடாப் மற்றும் மொபைல்போனில் இடம்பெற்றுள்ள தகவல்களை திரட்டும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.இதில் மேலும் பல ஆதாரங்கள் கிடைக்கலாம் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஸ்பாட் ஃபிக்சிங்: அஜித் சந்திலா ஒப்புதல்

இதனிடையே ஐபிஎல் 6 ஆவது போட்டியில் ஸ்பாட் ஃபிக்சிங் சூதாட்டம் நடைபெற்றது உண்மைதான் என கைது செய்யப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்களில் ஒருவரான அஜித் சந்திலா, விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.