விறுவிறு கட்டத்தை நெருங்கி வருகிறது 2019 ஐபிஎல். ‘கூல் கேப்டன்’ தோனியின் கோபம், பெங்களூர் அணியின் பெரிய சரிவு என்று பல விஷயங்கள்... அவற்றில் சில ஹைலைட்ஸ்...

●இந்த சீசனின் பெரிய வைரல், ‘மன்கடட்’ முறை. ராஜஸ்தான்-பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான நான்காவது லீக் போட்டியில், 13-வது ஓவரை பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் வீசினார். நான் ஸ்ட்ரைக்கர் பக்கம் இருந்த ஜோஸ் பட்லர், கிரீஸைவிட்டு வெளியே வந்துவிட, அவரை `மன்கடட்’ முறையில் அவுட்செய்தார் அஷ்வின். மன்கடட் முறையில் அவுட் செய்வதற்கு முன்பு, பேட்ஸ்மேனுக்கு அஷ்வின் வார்னிங் கொடுத்திருக்க வேண்டும். பெளலிங் ஆக்ஷனை செய்த பிறகே அவுட் செய்திருக்க வேண்டும் என்று சர்ச்சை கிளம்பியது. இந்த `மன்கடட்’ விஷயத்தில் ஐசிசி விதி சொல்வது என்ன?

பௌலர் தனது பந்து வீசும் ஆக்ஷனைச் செய்யும்போது, நான் ஸ்ட்ரைக்கர் பேட்ஸ்மேன் கிரீஸைவிட்டு வெளியில் இருந்தால், பௌலர் அவரை அவுட் செய்யலாம். அப்படி பௌலர் சரியாக அவுட் செய்துவிட்டால், இந்தப் பந்து அந்த ஓவரின் ஒரு பந்தாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. மாறாக, பௌலர் அவுட் செய்யவில்லை என்றால், இந்தப் பந்து டெட் பாலாக அறிவிக்கப்படும்.

●டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த கொல்கத்தா - டெல்லி போட்டியில், 185 ரன்களுடன் சமனானது. இதனால், சூப்பர் ஓவர் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. இந்த ஐபிஎல் தொடரின் முதல் சூப்பர் ஓவர் இதுவே.

● சென்னை - மும்பை அணிகளுக்கிடையேயான முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸை 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது மும்பை. ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் 100-வது வெற்றி இது.

●அறிமுகப் போட்டியிலேயே 12 ஆண்டு ஐபிஎல் சாதனையை முறியடித்துள்ளார் 22 வயது இளம் வீரர், ஜோஸப் அல்ஸாரி. வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த அல்ஸாரி, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார். ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் அல்ஸாரியின் பெளலிங் ஃபிகர், 12-6.

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... அடுத்தடுத்த பக்கங்களில் 2019 ஐபிஎல் கேப்டன்களின் அசத்தலான கார்டு அணிவகுப்பு உள்ளது. முன்பக்கம் கேப்டன்களின் படங்களும் பின்பக்கம் இதுவரையிலான (12.04.19) அவர்களின் ஐபிஎல் அப்டேட்ஸ் இடம்பெற்றுள்ளன. அவற்றைக் கத்தரித்து எடுத்து, உங்கள் கலெக்ஷனில் சேர்த்துக்கொள்ளுங்கள். நண்பர்களிடம் காண்பித்து ‘கெத்து’ காட்டுங்கள்.

- கார்த்திகா ராஜேந்திரன்