Published:Updated:

ஐபிஎல் 2019 அப்டேட்ஸ் - தொடக்கப் போட்டியில் சி.எஸ்.கேவுடன் மோதும் ஆர்.சி.பி

ஐபிஎல் 2019 அப்டேட்ஸ் - தொடக்கப் போட்டியில் சி.எஸ்.கேவுடன் மோதும் ஆர்.சி.பி
ஐபிஎல் 2019 அப்டேட்ஸ் - தொடக்கப் போட்டியில் சி.எஸ்.கேவுடன் மோதும் ஆர்.சி.பி

2019-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் முதல் 17 போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

11-வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டிகளின் முதல் இரண்டு வாரங்கள் நடைபெறும் போட்டிகளில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் ஐ.பி.எல் அட்டவணை வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது முன்கூட்டியே போட்டி நடைபெறும் இடங்கள் மற்றும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 23-ம் தேதி ஐ.பி.எல் திருவிழா கோலாகலமாகத் தொடங்குகின்றது.

ஏப்ரல் 5-ம் தேதிவரை நடைபெறும் இந்தப் போட்டிகளில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகளும் தங்கள் சொந்த ஊர்களில் விளையாட உள்ளன. தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி மார்ச் 23-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டி சென்னையில் ஆரம்பமாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி மார்ச் 31-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.