Published:Updated:

டைம் அவுட்

டைம் அவுட்
பிரீமியம் ஸ்டோரி
டைம் அவுட்

டைம் அவுட்

டைம் அவுட்

டைம் அவுட்

Published:Updated:
டைம் அவுட்
பிரீமியம் ஸ்டோரி
டைம் அவுட்
டைம் அவுட்

ஜோஸ் மொரினியோ மான்செஸ்டர் யுனைடெட் மேனேஜர் பொறுப்பில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, இடைக்கால மேனேஜராக நியமிக்கப்பட்டார் ஓலே கன்னர் சோல்ஸ்கர். மொரினியோ தலைமையில் படு சொதப்பல் ஆட்டம் ஆடிய சீனியர் வீரர்கள், சோல்ஸகர் மேற்பார்வையில் டாப் கியரில் வேகமெடுத்தனர். பிரிமியர் லீக்கில் அடுத்தடுத்து வெற்றிகள், சாம்பியன்ஸ் லீக் தொடரில் பி.எஸ்.ஜி-யை வீட்டுக்கு அனுப்பியது என, கெத்து காட்டியது `தி ரெட் டெவில்ஸ்.’ வீரர்களுக்கும் -பயிற்சியாளருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி வொர்க் அவுட்டானதைப் புரிந்து, சோல்ஸ்கரை நிரந்தர மேனேஜராக நியமித்துள்ளது நிர்வாகம். அவர் இந்தக் கிளப்பின் முன்னாள் வீரர் என்பது கூடுதல் ப்ளஸ். ஒவ்வொரு புதிய பயிற்சியாளர் நியமனத்தின்போதும் `இவர் சர் அலெக்ஸ் ஃபெர்குசன் இடத்தை நிரப்புவாரா?’ என்ற கேள்வி எழும். டேவிட் மோயஸ், லூயிஸ் வேன் கால், மொரினியோ ஆகியோரால் அதற்கு பதில் சொல்லமுடியவில்லை. சோல்ஸ்கர் தாக்குப்பிடிப்பாரா?!

டைம் அவுட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டைம் அவுட்

மீபத்தில் முடிந்து இரண்டு F1 போட்டியிலும் அசத்தலாக வென்று தன்னிடம் இருந்து சாம்பியன் பட்டத்தை வாங்குவது அவ்வளவு சுலபமில்லை என்பதை நிரூபித்துள்ளார் லூயில் ஹாமில்ட்டன். பஹ்ரைனில் 3-ம் இடத்தில் ரேஸை தொடங்கி டிராக்கிலேயே வேகமான இரண்டு ஃபெராரி கார்களையும் முந்தி முதலிடம் பிடித்துவிட்டார். பஹ்ரைன் ரேஸ் முடிந்தபிறகு ஃபெராரி அணியின் தலைவர் டோட்டோ உல்ஃப் “எங்களிடம் இருக்கும் அளவு சிறப்பான கார் இல்லாமலேயே ஹாமில்ட்டன் எங்களுக்குச் சவாலாக இருக்கிறார். 4-வது திருப்பத்தில் வெட்டலை முந்தியது சாம்பியன்ஷிப்பை மாற்றியமைக்கும் மூவ்” எனப் பாராட்டியுள்ளார். வேகமான ஃபெராரி கார்களுக்கும், விவேகமான மெர்சிடிஸ் டீமுக்கும் இடையே ஹாமில்டனின் அனுபவம் தனித்துத் தெரிவது ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். ஹாமில்ட்டன் ராக்ஸ்!

டைம் அவுட்

ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக மீண்டும் பதவியேற்றிருக்கிறார் ஜினடன் ஜிடேன். இந்த சீசன் தொடங்கும் முன்பு, யாரும் எதிர்பாராத வகையில் ராஜினாமா செய்தார் ஜிடேன். அவர் தலைமையில் தொடர்ந்து 3 சாம்பியன்ஸ் லீக் கோப்பை வென்ற மாட்ரிட், கடுமையாக சொதப்பியது. லா லிகாவில் இரண்டாம் இடத்தை இழந்து, சாம்பியன்ஸ் லீக் தொடரில் காலிறுதியோடு வெளியேறி பரிதாபமான சூழலில் இருக்க, அணியைக் கரைசேர்க்க, மீண்டும் கைகொடுத்திருக்கிறார் ஜீஜோ. வெல்கம் பேக்!

டைம் அவுட்

வ்வொருமுறை ஃபைனலில் தோற்கும்போதும் `ரோஜர் ஃபெடரர் ஏன் ஓய்வுபெறக் கூடாது’ என்ற விமர்சனம் எழும். கொஞ்சம் கேப் விட்டு ஒரு பட்டம் வென்று விமர்சகர்களின் வாயை அடைப்பது ஃபெடரர் ஸ்டைல். இண்டியன் வெல்ஸ் தொடரில் செக் குடியரசின் டொமினிச் தீமிடம் தோற்றபோதும், `ஃபெடரருக்கு வயசாகிடுச்சு’ என்ற கமென்ட் வந்தது. இதோ, மியாமி ஓப்பனில் ஜான் ஐஸ்னரை தோற்கடித்து, 37-வது வயதில் 101-வது டைட்டில் வென்றிருக்கிறார் ரோஜர்.  `ஆரோக்கியமாக இருக்கிறேன். அதனால்தான் கடந்த நான்கு வாரங்களாக தினமும் என்னால் விளையாட முடிகிறது. கடந்த சில ஆண்டுகளில் இதுதான் மிஸ்ஸிங்’ என பேட்டி கொடுக்கும் ஃபெடரர், ஃபிரெஞ்ச் ஓப்பனை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார். களிமண் கலாட்டா!

டைம் அவுட்
டைம் அவுட்

`பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவரான செளரவ் கங்குலி, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஆலோசகராக இருப்பது `கான்ஃப்ளிக்ட் ஆஃப் இன்ட்ரஸ்ட் (ஆதாயம் தரும் பதவி)’ வகையில் சேராதா? அவர் எப்படி உள்ளூர் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்குப் பதிலாக வேறொரு அணிக்கு ஆலோசகராக இருக்கலாம்’ என பி.சி.சி.ஐ-க்கு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இருவர் மெயில் அனுப்பியுள்ளனர். `பி.சி.சி.ஐ மற்றும் ஐ.பி.எல் தொழில்நுட்பக் குழுவில் இருந்து நான் விலகிவிட்டேன். பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக ஐ.பி.எல்-க்கு பின்னடைவு ஏற்படுத்தும் எந்தச் செயலிலும் நான் ஈடுபடவில்லை. விதிமுறைகளைப் பின்பற்றுகிறேன். தவிர, ரிக்கி பாண்டிங்தான் தலைமை பயிற்சியாளர். நான் வகிப்பது கெளரவ பதவிதான்’ என விளக்கம் அளித்துள்ளா கங்குலி. கொல்கத்தா கொம்பன்!

டைம் அவுட்
டைம் அவுட்
டைம் அவுட்

டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பட்டத்தைத் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகக் கைப்பற்றி அசத்தியிருக்கிறது இந்தியா. ஒவ்வொரு கிரிக்கெட் சீசனின் முடிவிலும், டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் பெறும். அந்தவகையில் இந்த முறையும் இந்தியாவே சாம்பியன். டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்தியா பெறுவது இது ஐந்தாவது முறை. வாழ்த்துகள் டீம் இந்தியா!