Published:Updated:

சிஎஸ்கே வின் ‘அண்ணா’

சிஎஸ்கே வின் ‘அண்ணா’
பிரீமியம் ஸ்டோரி
சிஎஸ்கே வின் ‘அண்ணா’

சிஎஸ்கே வின் ‘அண்ணா’

சிஎஸ்கே வின் ‘அண்ணா’

சிஎஸ்கே வின் ‘அண்ணா’

Published:Updated:
சிஎஸ்கே வின் ‘அண்ணா’
பிரீமியம் ஸ்டோரி
சிஎஸ்கே வின் ‘அண்ணா’

.பி.எல் தொடரில் எந்த அணிக்கும் இல்லாத ரசிகர் பட்டாளம் இந்த அணிக்கு கொஞ்சம் அதிகம். சென்னையில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்துக்கு படையெடுத்தனர். கேப்டன் தோனி பேட்டிங் செய்ய களமிறங்கியபோது, ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் வைரல் வீடியோ ட்விட்டரில் ட்ரெண்டானது. அந்த வீடியோவில் தோனி மட்டுமல்ல, அவருடன் இன்னொருவரும் கிரவுண்டுக்குள் என்ட்ரி தருவார். அவர்தான் சி.எஸ்.கேவின் ‘ஆல் இன் ஆல் அண்ணா’ கோதண்டம்!

சிஎஸ்கே வின் ‘அண்ணா’

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகர்களுக்கு கோதண்டம் பரிச்சயமான முகமாகதான்  இருப்பார். சூப்பர் கிங்ஸ் ஆவணப்படத்தில், இன்ஸ்டாகிராம் வீடியோக்களில், பயிற்சி ஆட்டங்களில் இவரை பார்த்திருக்கலாம். சேப்பாக்கத்தில் நடைபெறும் பயிற்சி போட்டிகளில், தோனி களமிறங்கும்போது கோதண்டமும் கூடவே வருவார். காதைக் கிழிக்கும் ரசிகர்களின் ஆரவாரம் பதற்றத்தை ஏற்படுத்தினாலும், பேட்டிங் கிட்டை இறக்கி வைத்துவிட்டு, பயிற்சி ஆட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் சரியாக உள்ளதா என ஒரு ரவுண்டு பார்த்துவிட்டு பெவிலியன் திரும்புவார் கோதண்டம், இவர் சென்னை சூப்பர் கிங்ஸின் டிரெஸ்ஸிங் ரூம் இன்சார்ஜ்.

அணி வீரர்களுடனே அதிகம் பயணிக்கிறாரே, இவர் செய்யும் வேலை எப்படியானது, சி.எஸ்.கேவின் பயிற்சி ஆட்டங்களில் உள்ள சுவாரஸ்யங்கள் என்ன... சிஎஸ்கே பற்றியும் வீரர்கள் பற்றியும் தெரிந்துகொள்ள சேப்பாக்கம் கிளம்பினோம்.   

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிஎஸ்கே வின் ‘அண்ணா’

``சிஎஸ்கே டிரெஸ்ஸிங் ரூம் இன்சார்ஜாக 11 ஆண்டுகள்.. இந்த பயணம் எப்படி இருக்கிறது?’’

“1992-ல இந்தியா சிமென்ட்ஸ்ல வேலை கிடைச்சது. குருநானக் கிரிக்கெட் கிரவுண்ட் இன்சார்ஜா வேலையை தொடங்கினன். அண்டர் 23, ரஞ்சி டிராபி தொடர்கள்ல வருஷத்துக்கு குறைஞ்சது 175 போட்டிகளுக்கு கிரவுண்ட் இன்சார்ஜா வேலை பார்த்திருக்கேன். 26 வருஷமா இந்த துறையில இருக்கேன். ஆனா, ஐபிஎல் வந்தப்புறம் சில மாற்றங்கள். ஐபிஎல் முதல் சீசன்ல இருந்து சிஎஸ்கே ஹோம் கிரவுண்ட்  டிரெஸ்ஸிங் ரூம் இன்சார்ஜா இருக்கேன். 2008 ஏப்ரல் 23, சேப்பாக்கத்துல நடந்த முதல் ஐ.பி.எல் போட்டி சென்னை வெர்ஸஸ் மும்பை. சேப்பாக்கத்துல ஒரு அணி விளையாடுறது வழக்கமானதுதான்னு அதுக்கு தேவையான எல்லாத்தையும் தயாரா வச்சிருந்தோம். ஆனா, மொத சீசன்லயே சிஎஸ்கேவுக்கு ஃபேன்ஸ் அதிகம். மொதல்ல பேட்டிங் செஞ்ச சிஎஸ்கே 208 ரன்கள் வெளுத்துட்டாங்க.  “சிஎஸ்கே...சிஎஸ்கேனு...” ரசிகர்கள் கொண்டாடினத மறக்க முடியாது. தொடர்ந்து 11 வருஷமா நான் இந்த வேலைல இருக்கேன். அணி நிர்வாகம் எந்த மாற்றமும் சொல்லல. இந்த நம்பிக்கையை தக்க வெச்சிக்கணும்னு தோணுது.`

சிஎஸ்கே வின் ‘அண்ணா’

``டிரெஸ்ஸிங் ரூம் இன்சார்ஜ்... எப்படியான வேலை இது?``

“பயிற்சி நேரங்கள்லயும், போட்டி நடக்குற நாட்களிலும்தான் முக்கியமான வேலைகள் இருக்கும்.போட்டி நடக்கும் நேரத்துக்கு ஏத்த மாதிரி சிஎஸ்கே வீரர்கள் பயிற்சிக்கு வருவாங்க. 4 மணிக்கு போட்டினா, 3 மணியில இருந்து பயிற்சி தொடங்கும். 8 மணி போட்டியினா அதுக்கு ஏத்த நேரத்துல பயிற்சி நடக்கும். நான் பயிற்சி நேரத்துக்கு நாலு மணி நேரம் முன்னரே மைதானத்துக்கு வந்துருவன். ஒவ்வொரு ப்ளேயருக்குமான பேட்டிங் கிட், பால்ஸ், ட்ரிங்க்ஸ் பாக்ஸ், நெட் பிராக்டீஸ் அப்போ வெளில இருந்து வர வீரர்களுக்கான அரேஞ்மென்ட்ஸ்னு எல்லாத்தையும் தயாரா வெச்சிருக்கணும். பயிற்சில எந்த இடையூறும் வந்திடக் கூடாதுனு எப்பவுமே கவனமா இருப்பேன். மூணு முதல் நாலு மணி நேரம் பயிற்சி நடக்கும். பயிற்சி இடைவெளில டிரிங்ஸ் கரெக்டான நேரத்துக்கு தரணும். பயிற்சி முடிஞ்சதும் திரும்பவும் பேட்டிங், பெளலிங் கிட்டை சரிபார்த்து எடுத்துட்டு போகணும். பயிற்சி நேரத்துல இருக்குற வேலைதான் போட்டி நடக்குறப்பவும். ஒவ்வொரு ப்ளேயருடைய கிட்டையும் ரெடியா டிரெஸ்ஸிங் ரூம்ல வெச்சிருக்கணும். குறிப்பா, கிளவுஸஸ் செக் பண்ணணும். கண்ணுக்கு தெரியாத எறும்பு, பூச்சிங்க இல்லாம சுத்தமா இருக்கானு செக் பண்ணணும். கிட் பேக்ல இருக்க ஒவ்வொரு பொருளும் முக்கியமானது.”

``இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டபோது சி.எஸ்.கே விளையாடாதது பற்றி..``

“ரொம்பவும் டல்லா இருந்தது. வருஷா வருஷம் சம்மர் வந்துடுச்சுனா ஐ.பி.எல் தொடருக்கான தயாரிப்பு வேலைகள் ஆரம்பமாகிடும். அந்த இரண்டு வருஷம் எதுவும் நடக்கல. உண்மைய சொல்லனும்னா, சென்னை அணியைவிட சென்னை ரசிகர்களை ரொம்பவே மிஸ் செஞ்சேன். இரண்டு வருஷ இடைவெளிக்கு அப்புறம் சேப்பாக்கத்துக்கு திரும்ப விளையாட வந்தாங்க சிஎஸ்கே. ஸ்டேடியம் வெளில பிரச்னை போயிட்டிருந்தாலும், ரசிகர்களுக்கானதா இருந்துச்சு அந்த வெற்றி. மொத போட்டியில் கொல்கத்தாவை ஜெயிச்சிட்டு போறப்ப யாருமே எதிர்பார்க்கல திரும்ப சேப்பாகத்துல விளையாட மாட்டோம்னு. சில காரணங்களால சென்னையில தொடர முடியல. நானும் ரொம்ப வருத்தப்பட்டன். சேப்பாக்கத்துல மட்டும்தான் நான் டிரெஸ்ஸிங் ரூம் இன்சார்ஜ்னு நினைச்சுட்டு இருந்தப்ப, `ஹோம் கிரவுண்ட் எங்க இருந்தா என்ன, புனே மைதானத்துலையும் நீ தான் இன்சார்ஜ்’னு சொல்லி என்னையும் கூட்டிட்டுப்போனாங்க. இதைவிட வேற என்ன வேணும். புனே போய் தொடரையும் ஜெயிச்சிட்டோமே!’’

``கிரிக்கெட்டை பொறுத்தவரை ‘டிரெஸ்ஸிங் ரூம்’ கதைகள் ஏராளம் இருக்கும். அப்படி சுவாரஸ்யமான கதைகள் ஏதாவது?’’

சிஎஸ்கே வின் ‘அண்ணா’

“களத்துல சிங்கமா இருக்குற வீரர்கள் எல்லாம் மற்ற நேரத்துல ரொம்ப ஜாலி. போட்டி முடிஞ்சப்பறம் வெற்றியோ தோல்வியோ யாரும் யார்கிட்டையும் கடுகடுத்தது இல்லை. `அடுத்து என்ன?’ என்பதைப் பத்திதான் பேசிட்டு இருப்பாங்க. பிராவோ சார், சாம் பில்லிங்ஸ் இவங்க இருந்தாலே இடம் ரொம்ப கலகலப்பா இருக்கும். போட்டோகிராபி மேல பில்லிங்ஸ் சாருக்கு ரொம்ப விருப்பம். பறக்கும் கேமராவை வச்சிக்கிட்டு எப்பவுமே எதையாவது படம்பிடிச்சிட்டு இருப்பாரு. வம்பு பன்றது, ஜாலியா பேசுறதுனு எல்லாமே இயல்பா இருக்கும். ஆனா, பயிற்சி நேரத்துல தோனி சார் ரொம்பவே ஸ்ட்ரிக்ட். இந்த வருஷம் திரும்ப சென்னை வந்திருக்காங்க.  டிரெஸ்ஸிங் ரூம் வந்தவுடனே, `ஹாய் அண்ணா. வி ஆர் பேக்'னு ரெய்னா சார் சந்தோஷப்பட்டாரு. இந்த முறை 7 போட்டிகள்லயும் விளையாடி வெற்றியோடு போகணும்னு பயிற்சி எடுத்துட்டு இருக்காங்க. எங்க இருந்தாலும், சேப்பாக்கம் எப்போதுமே சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ஸ்பெஷல்தான்.`

``தோனி, ரெய்னா என மொத்த சிஎஸ்கே அணியும் உங்களை ‘அண்ணா’னு கூப்பிடுவாங்களாமே?’’


``தோனி சாருக்கு கொஞ்சம் தமிழ் பேச வரும். நாம சொல்றத புரிஞ்சுப்பாரு. தோனி, ரெய்னா சார்ல இருந்து தம்பி சாம் பில்லிங்ஸ் வரைக்கும் எல்லாரும் `அண்ணா’னுதான் கூப்பிடுவாங்க. என்ன உதவி தேவைப்பட்டாலும் கேட்பாங்க. அதனால ‘ஆல் இன் ஆல் அண்ணா’னு இப்படியும் செல்லமா கூப்பிடுவாங்க.  ஐ.பி.எல் சீசனுக்காக ஒவ்வொரு முறை சேப்பாக்கம் வரும்போதும், தோனி சார் என்னோட குடும்பத்தை பத்தி கேட்க மறந்ததில்லை. நானும் இந்த அணிக்காக வேலை செஞ்சுட்டு இருக்கன்றதே மறந்துட்டு, ரசிகனா மாறிட்டேன்.’’

கார்த்திகா, படங்கள்: தே. அசோக்குமார்