Published:Updated:

“நாங்க பேச மாட்டோம்... எங்க டீம்தான் பேசணும்!” - ஐ.பி.எல் சூப்பர் ஃபேன்ஸ்

“நாங்க பேச மாட்டோம்... எங்க டீம்தான் பேசணும்!” - ஐ.பி.எல் சூப்பர் ஃபேன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
“நாங்க பேச மாட்டோம்... எங்க டீம்தான் பேசணும்!” - ஐ.பி.எல் சூப்பர் ஃபேன்ஸ்

“நாங்க பேச மாட்டோம்... எங்க டீம்தான் பேசணும்!” - ஐ.பி.எல் சூப்பர் ஃபேன்ஸ்

“நாங்க பேச மாட்டோம்... எங்க டீம்தான் பேசணும்!” - ஐ.பி.எல் சூப்பர் ஃபேன்ஸ்

“நாங்க பேச மாட்டோம்... எங்க டீம்தான் பேசணும்!” - ஐ.பி.எல் சூப்பர் ஃபேன்ஸ்

Published:Updated:
“நாங்க பேச மாட்டோம்... எங்க டீம்தான் பேசணும்!” - ஐ.பி.எல் சூப்பர் ஃபேன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
“நாங்க பேச மாட்டோம்... எங்க டீம்தான் பேசணும்!” - ஐ.பி.எல் சூப்பர் ஃபேன்ஸ்

பிஎல் சீசன் ஆரம்பமாகிவிட்டது. ஃபேஸ்புக் ப்ரொஃபைல் படம் மாற்றுவது, தினம் சில பல ஸ்டேட்ஸ்களை தட்டிவிட்டு எதிரணி ரசிகர்களைக் கலாய்ப்பது, வம்பிழுப்பது, மீம்ஸ் வீடியோ போடுவது என இந்த சம்மர் ஜாலியாக கடந்துவிடும்.  ஃபேஸ்புக்கிலேயே பயங்கர மோதல்கள் இருக்குமே, 8 அணிகளின் தீவிர ரசிகர்கள் நேரில் சந்தித்து கொண்டால்?  ரிஸ்க் எடுக்கலைனா எப்படி.. எடுத்தோம்!  சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என ஆறு அணிகளுக்கு ரசிகர்களை தேர்ந்தெடுத்துவிட்டோம். கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு மட்டும் லென்ஸ் போட்டு தேடியும் ரசிகர்கள் கிடைக்கவில்லை. ஆமாம், ரசிகர்கள்தான் கிடைக்கவில்லை. ஆனால், அந்த அணிகளின் வெறியர்களே நம்மிடம் சரண்டர் ஆனார்கள். ‘‘நாங்க பேச மாட்டோம்..களத்துல எங்க டீம் பேசும்..” என சுமூகமாக ஆரம்பித்துவிட்டு, போகப்போகக் கோதாவில் இறங்கினார்கள் சூப்பர் ஃபேன்ஸ். 

“நாங்க பேச மாட்டோம்... எங்க டீம்தான் பேசணும்!” - ஐ.பி.எல் சூப்பர் ஃபேன்ஸ்

‘‘இந்த ஐ.பி.எல் தொடரில் உங்க அணி எப்படி?” என்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ரசிகர் அஷ்வினிடம் மைக்கை நீட்ட, ‘‘போன வருஷம் ஃபைனல்ஸ் வர போயிருக்கோம். அதே துடிப்போட இந்த தொடரிலும் சூப்பரா விளையாடிட்டு இருக்காங்க ஹைதராபாத். பேட்டிங், பெளலிங்னு ரெண்டுமே ஸ்டிராங்கா இருக்கு. எந்த டீமையும் குறைச்சு எடை போட மாட்டாங்க, ஒவ்வொரு மேட்சையும் ஜெயிக்கணும்னு கடைசி வர போராடுவாங்க. அதுமட்டுமில்ல, வார்னர் திரும்ப வந்திருக்காரு. அடிப்பட்ட புலி அடிக்க காத்திருக்கு” என பஞ்ச்சோடு ஆரம்பித்தார்

“நான் கடைசியில பேசுறன்...ப்ளீஸ்” என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரசிகர் அதீஷ் தயங்க அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸுக்காக பேசினார் மகேஷ்வரன். “ஹைதரபாத்துக்கு வார்னர். ராஜஸ்தானுக்கு ஸ்மித். எங்க டீம் பவரே நம்பிக்கைதான். போன வருஷம் கம் பேக் கொடுத்த சென்னை சாம்பியனாச்சு. இந்த வருஷம் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துல ராஜஸ்தான் அணி இறங்கி விளையாடபோகுது” என்று மைக்கை பாஸ் செய்தார்.

பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் ரசிகர்  ராஜா ‘‘ஈ சாலா கப் நம்தே” என்று தொடங்கியவுடன் கூட்டத்தில் ஒரே சலசலப்பு. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“நாங்க பேச மாட்டோம்... எங்க டீம்தான் பேசணும்!” - ஐ.பி.எல் சூப்பர் ஃபேன்ஸ்

“இவர்தாங்க. இவருக்கும் இவங்க டீமுக்கும் இதான் வேலை. இதையேதான் பல வருஷமா சொல்லிட்டு இருக்காங்க..” என்று டெல்லி ஃபேன் ஜாமி குறுக்கிட, “இதுக்கெல்லாம் தலைவன் கோலி பதில் சொல்வார். அவர் இருக்க ஃபார்ம்ல மொத்த அணியும் பட்டையைக் கிளப்பப்போகுது.  ஏபிடி, மொயின் அலி, சஹால்னு எங்க டீம் பலமாதான் இருக்கு. நான் ரொம்ப பேச விரும்பல, ஆனா திரும்பவும் சொல்றன் ஈ சாலா கப் நமதே” என்று சமாளித்து பேச்சை முடித்தார்.

“உங்களுக்கு நாங்க பரவால்லையே” என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அருண் குமாரின் மைண்ட் வாய்ஸ் வெளியில் கேட்க, தொடர்ந்து பேசினார். ‘‘தமிழனுக்கு தமிழன் சப்போர்ட் பண்ணணும்ல” என்றவுடன், “ஆஹா.. நீங்க யாருன்னு தெரிஞ்சு போச்சு” என  ஜாமி உஷாரானார். 

“தோனி படையில இருந்து வெளில வந்திருக்கார் அஷ்வின். அப்பா 10 அடி பாஞ்சா, புள்ள 20 அடி பாயாதா என்ன? பஞ்சாப் வேற லெவலுக்கு போகப் போகுது...” என சொல்லி முடிப்பதற்குள்,

“அதான் பார்த்தோமே.. ரூல்ஸ்.. கடமை... அதேதான...” என்று யாரோ முனுமுனுத்தனர்.

“அதேதான்... ஆளப்போறான் தமிழன்  உலகம் எல்லாமே... ஐபிஎல் கப்பை அஷ்வின் ஜெயிக்கப்போறானே” என்று பாட்டாகவே பாடினார். 

“நாங்க பேச மாட்டோம்... எங்க டீம்தான் பேசணும்!” - ஐ.பி.எல் சூப்பர் ஃபேன்ஸ்

‘‘கொஞ்சம் பெருசா பேசப் போறேன். மாடுலேஷன கேட்ச் பண்ணிடுங்க..” என ரகளையாக தொடங்கினார் ஜாமி. ‘‘ஒரு கப் இருந்து, அந்த கப்புக்கு 8 அணிங்க போட்டிப்போட்டு, அதுல ஒரு அணிக்கு லெஜெண்ட்ஸ் கங்குலி, பான்டிங்னு கோச்சிங் கொடுக்க, யங்ஸ்டர்ஸ் பட்டையக்கிளப்ப, போன வருஷம் லாஸ்ட், இந்த வருஷம் டாப்-னு கலக்கல் செஞ்சு கப்ப தூக்கினா.....அதுதான் டெல்லி கேபிடல்ஸ்..ஆஹா...” என ஜாமி முடிப்பதற்குள், மற்ற ரசிகர்கள், “ஓஹோ...ஒஹோஹோ...” என கோரஸாகக் கலாய்த்தனர்.

அதகளத்தை கவனித்து கொண்டிருந்த மும்பை இந்தியன்ஸ் ரசிகர் ராகவேந்திரன்,  “ஒரு வீட்டுல விசேஷம்னா குழந்தைங்க எல்லாம் கூட்டமா விளையாடிட்டு இருப்பாங்க. அப்படித்தான்  இந்த ஆறு அணிகளும். ஐபிஎல்னு வந்துடாட்டேலே மும்பை, சென்னைதான். சாம்பி யன்ஸ் ஆஃப் தி சாம்பியன்ஸ். டீம் பத்தி சொல்லத் தேவையில்ல, ரோஹித் அண்டு கோ ஸ்ட்ராங்கா இருக்கோம். புயலடிச்சு பொழச்சவன் இருப்பான், பல்தான்ஸ் அடிச்சு பொழச்சவன் இல்ல” என அதிரடி கிளப்பினார்.

“வீட்டு விசேஷம்னா குழந்தைங்க விளையாடிட்டுதான் இருப்பாங்க. பெரிசுங்கதான் மீட்டிங் போட்டு பேசிட்டு இருப்பாங்க. பேச்சு மட்டுந்தான். களத்துல மோதுவோம் வாங்கய்யா” என ஜாமி பதில் கவுன்ட்டர் கொடுக்க, மைக் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கவினுக்கு பாஸானது. 

“நாங்க பேச மாட்டோம்... எங்க டீம்தான் பேசணும்!” - ஐ.பி.எல் சூப்பர் ஃபேன்ஸ்

“எந்த டீமுக்கும் இல்லாத ஒரு லெகஸி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு இருக்கு”

“ஆமா பெட்டிங்..பெட்டிங்...” என எதிர்க்குரல் பலமாக கேட்க,

“பெட்டிங்கில அணி வீரர்களுக்கு சம்பந்தமில்ல. ரெண்டு வருஷம் தடை. ஆனா, சிஎஸ்கே தவிர வேற எந்த அணியாலும் இவ்ளோ ஸ்ட்ராங்கா ‘நாங்க திரும்ப வந்துட்டோம்னு’ சொல்ல முடியாது.  சொன்னத செஞ்சாங்க. இந்த முறையும் செய்வாங்க. சென்னை, ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா அணிகள்தான் இந்த முறை ப்ளே ஆஃப் போவாங்கன்றது என்னோட கணிப்பு” என இரண்டு வரியில் முடித்துவிட்டார்.

கடைசியாகப் பேசுவதாக சொல்லியிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஃபேன் அதீஷிடம் மைக் பாஸானது. “கொஞ்சம் பதட்டம். அதான் கடைசில பேசுறன்னு சொன்னேன்...”என்று தொடர்ந்தார். “அதென்ன ஐபிஎல்னா மும்பை, சென்னைனு மட்டுமே பேசிட்டு இருக்கீங்க. ஃபைனல்ஸ் போன ரெண்டு முறையும் நாங்க கப் அடிச்சிருக்கோம். பஞ்சாப் டீமுக்கு பேசினவர் என்னமோ தோனி படையில இருந்து வந்ததால, அஷ்வின் தோனியாகவே மாறிட்டது போல பேசினாரு. பேருக்குதான் தமிழ்நாடு டீம். அதுல தமிழ்நாடு வீரர்கள் எத்தனைப் பேரு இருப்பாங்க. இப்படி நிறைய சொல்லிட்டே போலாம். கொல்கத்தாவை பொறுத்தவரை கேப்டன் தினேஷ் கார்த்திக், ரஸல், கிறிஸ் லின், ஷுபம் கில் இப்படி நல்ல டீம் செட் ஆகியிருக்கு. இந்த வருஷம் கண்டிப்பா கலக்குவாங்க” என்றார்.

“இதுக்குத்தான் நீ கடைசில பேசுனியா....” என மற்ற ரசிகர்கள் கடுகடுத்தனர்.

ஐ.பி.எல் அணிகளின் ரசிகர்கள் மாதிரி பேசச் சொன்னால், அந்தந்த அணிகளின் கேப்டன்களாகவே (அப்படி நினைத்துக்கொண்டு) தங்களை மாற்றிக்கொண்டு பேசிய சூப்பர் ஃபேன்ஸ், கடைசியாக “இன்னும் ரெண்டு மாசம்தான் இந்த ஜாலியெல்லாம். ஜூன் மாசத்துல இருந்து, ஒரே அணி, ஒரே ரசிகர் கூட்டம். வேர்ல்டு கப் காய்ச்சல் தொடங்கிடும். இனி சண்டையெல்லாம் இண்டர்நேஷனல் லெவல்ல மட்டுந்தான். கமான் இந்தியா. லாலேலாலலே லாலா...” என சுமுகமாக முடித்துக் கொண்டனர்.

கார்த்திகா படங்கள்: ப. பிரியங்கா