Published:Updated:

ஆளப்போறான் தமிழன் மொமன்ட்ஸ்!

ஆளப்போறான் தமிழன் மொமன்ட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
ஆளப்போறான் தமிழன் மொமன்ட்ஸ்!

ஆளப்போறான் தமிழன் மொமன்ட்ஸ்!

ஆளப்போறான் தமிழன் மொமன்ட்ஸ்!

ஆளப்போறான் தமிழன் மொமன்ட்ஸ்!

Published:Updated:
ஆளப்போறான் தமிழன் மொமன்ட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
ஆளப்போறான் தமிழன் மொமன்ட்ஸ்!
ஆளப்போறான் தமிழன் மொமன்ட்ஸ்!

ஐபிஎல் வந்தாலே எல்லோரும் சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றித்தான் பேசுகிறார்கள். சென்னைப் பையன்களைப் பற்றி யோசிப்பவர்கள் ரொம்ப குறைவு. ஐபிஎல் தொடரின் தொடக்க காலகட்டத்தில் அனிருதா, பத்ரிநாத், டி.கே, முரளி விஜய், அஷ்வின், பாலாஜி, அபினவ் முகுந்த் என சில தமிழக வீரர்கள் தொடர்ந்து விளையாடி வந்தனர். ஆனால், இப்போது அந்த எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஒருசில வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டாலும், விளையாடும் வாய்ப்பு குறைவாகவே கிடைக்கிறது. இந்த சீசனில், எந்தெந்த தமிழக வீரர்கள் எந்தெந்த அணிகளில் இருக்கிறார்கள். அவர்களிடம் என்ன எதிர்பார்க்கலாம். பார்ப்போம்... 

ஆளப்போறான் தமிழன் மொமன்ட்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விஜய் சங்கர் (சன் ரைசர்ஸ்)

இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை உலக கோப்பை ரேஸில் இல்லாத இவர், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடர்களின் அபார செயல்பாட்டால் இப்போது அந்த ரேஸில் முன்னிலையில் இருக்கிறார். நான்காவது டவுன் இடத்திற்கு விஜய் சங்கர் சரியாக வருவார் என பலர் இப்போது ஆருடம் சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர். ஆனால் அதை உறுதி செய்ய ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவது முக்கியம். ஏற்கெனவே சன்ரைசர்ஸ் அணியில் பல நல்ல பெளலர்கள் உள்ளதால் இவருக்கு நான்கு ஓவர்கள் வீசும் வாய்ப்பு கிடைக்காது. அதனால்,பேட்டிங்கில் 20, 30 ரன்கள் எடுத்துவிட்டு பெவிலியன் திரும்பாமல் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடி பெரிய ஸ்கோர் அடித்து தன்னை முழுவதுமாக நிரூபிக்க வேண்டும். அப்போது தான் தேர்வு குழுவின் முழு நம்பிக்கையையும் பெற முடியும்.

ஆளப்போறான் தமிழன் மொமன்ட்ஸ்!

அஷ்வின் (கிங்ஸ் 11)

ரிஸ்ட் ஸ்பின்னர்களிடம் லிமிடெட் ஓவர் போட்டிகளில் தன்னுடைய இடத்தை பறிக்கொடுத்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. நடந்து முடிந்த சையது முஸ்தாக் அலி தொடரிலும் பெரிதாக சோபிக்கவில்லை. தொய்வாகவே காணப்பட்டார் அஷ்வின்.  கடந்த சீசனில் கிங்ஸ் 11 அணியின் கேப்டனாக பொறுப்பேற்று அதிலும் சொதப்பினார். இந்த சீசனில் சுழல் மாயாஜாலம் நிகழ்த்தி லிமிட்டெட் ஓவர்களிலும் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். கேப்டன்சி, பெளலிங் இரண்டிலும் வித்யாசமாக எதுவும் முயற்சிக்காமல் ‘கீப் இட் சிம்பிளாக’ இருப்பது தான் அவருக்கும் நல்லது.  அணிக்கும் நல்லது. அது பஞ்சாப் அணிக்கு முதல் ஐபிஎல் கோப்பையை பெற்றுத் தருவது மட்டுமல்லாமல் இவருக்கு மீண்டும் அந்த நீல வண்ண ஜெர்சியையும் பெற்றுத் தரும். இரண்டுமே அஷ்வின் கையில்தான் உள்ளது.

ஆளப்போறான் தமிழன் மொமன்ட்ஸ்!

முரளி விஜய் (சூப்பர் கிங்ஸ்)

நடந்து முடிந்த சையது முஸ்தாக் அலி டி20 தொடரில் சதம் அடித்து அசத்தியுள்ளார் முரளி விஜய். ராயுடு – வாட்சன் ஜோடி கடந்த சீசனில் செம பெர்ஃபார்மன்ஸ் செய்து அசத்தியதால் ஓப்பனிங் ஸ்லாட் அவர்கள் இரண்டு பேருக்கும்தான். இருந்தும் உலக்கோப்பையை கருதில் கொண்டு சில போட்டிகளில் ராயுடுவுக்கு ஓய்வளிக்கும் பட்சத்தில் முரளி விஜய்க்கு வாய்ப்பு கிடைக்கலாம். அப்படி கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயண்படுத்தி பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும். அப்போதுதான், பெர்ஃபார்மகள் நிறைந்த சிஎஸ்கே பிளேயிங் லெவனில் தொடர்ச்சியான வாய்ப்புகள் பெறமுடியும். அதற்கு முரளி விஜய் திரும்பவும் பழைய ஃபார்முக்கு வரவேண்டும். தான் ஒரு டெஸ்ட் பேட்ஸ்மேன் என்பதை மறந்துவிட்டு டி20 கிரிக்கெட் ஆடவேண்டும். அதிரடி ஆட்டம் ஆடினால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும்!

ஆளப்போறான் தமிழன் மொமன்ட்ஸ்!

தினேஷ் கார்த்திக் (நைட் ரைடர்ஸ்)

உலக கோப்பையில் தோனிக்கு பேக்கப் விக்கெட் கீப்பர் ரேஸில் இருக்கிறார் தினேஷ் கார்த்திக். கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்கு கேப்டன் பதவி ஏற்று ப்ளே ஆஃப் சுற்று வரை அழைத்துப் போய் அசத்தினார். உலக கோப்பையில் தேர்வு செய்யப்பட்டால் இவரது ‘ரோல்’ ஆட்டத்தை ஃபினிஷ் செய்வதற்காகத்தான் இருக்கும். கடந்த சீசனிலும் பெரும்பாலான போட்டிகளில் 17-வது ஓவரில் தான் களமிறங்கினார். இந்த சீசனிலும் உலக கோப்பையை மறந்து நம்பர் 5 அல்லது நம்பர் 6 இடத்தில் களமிறங்கி அணிக்காக ஃபினிஷ் செய்வது தான் அணிக்கும் அவருக்கும் சரியானதாக இருக்கும். அதைத் தான் செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.

ஆளப்போறான் தமிழன் மொமன்ட்ஸ்!
ஆளப்போறான் தமிழன் மொமன்ட்ஸ்!

முருகன் அஷ்வின் (கிங்ஸ் 11)

லெக் ஸ்பின்னரான முருகன் அஷ்வினை 2016 சையது முஸ்தாக் அலி தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் புனே அணி ஏலத்தில் வாங்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர் எந்த போட்டியிலும் முத்திரை பதிக்கவில்லை. 2016-ல் 4.5 கோடி கொடுத்து வாங்கப்பட்ட இவர் 2019 ஏலத்தில் அடிப்படை விலையான 20 லட்சத்துக்காக மட்டுமே கிங்ஸ் லெவன் வாங்கியது. அணியில் ரவிச்சந்திரன் அஷ்வின், முஜீப், வருண் சக்கரவர்த்தி என ஏகப்பட்ட ஸ்பீன்னர்கள் இருந்தாலும் முருகன் அஷ்வினுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த முறை திறமையை நிரூபித்தால் மட்டுமே அடுத்த ஐபிஎல்-ல் இவரைப் பார்க்க முடியும்.

ஆளப்போறான் தமிழன் மொமன்ட்ஸ்!

வாஷிங்டன் சுந்தர் (ராயல் சேலஞ்சர்ஸ்)

ஸ்பின்னிங் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர், கடந்த சீசனில் சில வாய்ப்புகள் பெற்றாலும், பெளலிங்கில் பெரிதாக சோபிக்காத்தால் சில மேட்ச்களில் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டார். பேட்டிங்கில் கீழ் வரிசையில் வந்து அடித்து ஆடி முக்கிய ரன்களை அடித்திருந்தார். கடந்த சீசனில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 173! ஆனால் பேட்டிங் ஆடுவதற்கு இவருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு சையது முஸ்தாக் அலி தொடரில் ஓப்பனராக சிறப்பாக செயல்பட்ட அவர், பவர் ப்ளே ஒவர்களிலும் எகனாமிக்கலாக (5.86) பந்து வீசி நல்ல ஃபார்மில் உள்ளார். பெங்களூர் அணி அவரை எந்த சமயத்தில்  எப்படி பயன்படுத்துகிறது என்பதை பொறுத்தே அவரது ஆட்டம் இருக்கும்.

ஆளப்போறான் தமிழன் மொமன்ட்ஸ்!

வருண் சக்கரவர்த்தி (கிங்ஸ் 11)

தமிழநாட்டு வீரர்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வீரர் இவர் தான். காரணம் ஐபிஎல் ஏலத்தில் இவர் வாங்கப்பட்ட விலையான 8.4 கோடி ரூபாய். இந்த ‘மிஸ்ட்ரி ஸ்பின்னர்’ ஏற்கனவே காயங்களால் பல ஆண்டுகள் ஓய்விலிருந்து இப்போது தான் நல்ல வாய்ப்பு பெற்றிருக்கிறார். நடந்து முடிந்த டிஎன்பிஎல், விஜய் ஹசாரே என அனைத்து தொடர்களிலும் இவர் சுழல் மாயாஜாலம் நிகழ்த்தினார். ஆஃப் பிரேக், கேரம் பால், தூஸ்ரா என வேரியஷன்களால் பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட வைப்பார் என எதிர்பார்க்கலாம். இவரின் மீதான எதிர்பார்ப்பு பிரஷரைக் கொடுத்தாலும், இந்த விலைக்குத் தகுதியானவர் தான் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் வருண் சக்ரவர்த்தி.

ஆளப்போறான் தமிழன் மொமன்ட்ஸ்!

டி நடராஜன் (சன்ரைசர்ஸ்)

இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவரை 2017-ல் பஞ்சாப் அணி 3 கோடி கொடுத்து வாங்கியது. ஒரு வருடம் காயத்தால் விளையாடாமல் இருந்த இவரை கடந்த சீசன் சன்ரைசர்ஸ் அணி வாங்கியது. ஆனால் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.  இந்த வருடம் டிஎன்பிஎல் தொடரில் 8 மேட்ச் விளையாடி 12 விக்கெட்டுகள் கைப்பற்றி சிறப்பாக செயல்பட்டார். எகானமியும் 5.02 என சிறப்பாகவே வைத்திருந்தார்.  சன்ரைசர்ஸ் அணியின் மிகப்பெரிய பலமே பெளலிங் அட்டாக் தான். ஏற்கனவே புவனேஷ்வர் குமார், சித்தார்த் கெளல், சந்தீப் ஷர்மா, பசில் தம்பி, கலீல் அஹமத் என எக்கச்சக்க  பெளலிங் ஆப்ஷன் இருப்பதால் கடந்த சீசனைப் போல் இந்த முறையும் நடராஜனுக்கு  ப்ளேயிங் லெவனில் விளையாட வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் தான்.

ஆளப்போறான் தமிழன் மொமன்ட்ஸ்!

ஜெகதீசன்.என் (சூப்பர் கிங்ஸ்)

சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள மற்றுமொரு சென்னை வீரர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். 2018 டிஎன்பிஎல் தொடரில் 9 போட்டிகளில் 396 ரன்கள் எடுத்துள்ளார். ஓப்பனிங் பேட்ஸ்மேனான இவரை கடந்த ஆண்டு சென்னை அணி வாங்கியது. விக்கெட் கீப்பராக தோனி இருப்பதால் ஒரு முழுநேர பேட்ஸ்மேனாக தான் அணியில் இவரின் ரோல் இருக்கும். ஆனால் ஸ்டார் ப்ளேயர்களே பெஞ்சில் உட்காரும் சென்னை அணியில் இவரைப் போல் ஒரு இளம் வீரருக்கு வாய்ப்பு கிடைப்பது அரிதினும் அரிது. அவரின் ஐபில் அறிமுகம் இந்த சீசனிலும் நடைபெறாது என்பதே கசக்கும் உண்மை.

கி.ர.ராம் கார்த்திகேயன்