Published:Updated:

SHOOT THE கேள்வி

SHOOT THE கேள்வி
பிரீமியம் ஸ்டோரி
SHOOT THE கேள்வி

SHOOT THE கேள்வி

SHOOT THE கேள்வி

SHOOT THE கேள்வி

Published:Updated:
SHOOT THE கேள்வி
பிரீமியம் ஸ்டோரி
SHOOT THE கேள்வி
SHOOT THE கேள்வி

@abishek_007

அஷ்வின் மன்கட் முறையில் அவுட் செய்தது சரியா தவறா?


எந்தக் காரணம் கொண்டும் அதைத் தவறு என்று சொல்ல முடியாது. கிரிக்கெட்டின் ரூல் புக்கில் இருக்கும் ஒரு விஷயத்தைச் செய்வது எப்படித் தவறாகும்? ஸ்பிரிட் ஆஃப் தி கேம் என்ற விஷயத்தைப் பிடித்துக்கொண்டு எல்லோரும் அதைப் பெரிய விஷயமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன் பல முறை இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது. கபில் தேவ் கூட ஒரு தென்னாப்பிரிக்க வீரரை மன்கட் முறையில் அவுட்டாக்கியுள்ளார். போக, பேட்ஸ்மேன்கள், அட்வான்டேஜ் எடுத்துக்கொள்வதால்தானே அந்த விதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அதன்பிறகும்கூட பேட்ஸ்மேன்கள் கிரீஸுக்கு வெளியே நின்றுகொண்டுதான் இருக்கிறார்கள். அதை யாரும் கேட்பதில்லை. பிறகு அதை எப்படித் தடுப்பது. எத்தனையோ ரன் அவுட்களில் ஒரு இன்ச் வித்தியாசத்தில் பல பேட்ஸ்மேன்கள் தப்பிக்கின்றனர். அவர்களில் எத்தனை பேர் பந்துவீசும் முன் இன்ச் கிரீசுக்கு வெளியே இருந்திருப்பார்கள்? அப்படியெனில் அதுவும்தானே கிரிக்கெட்டின் ஸ்பிரிட்டைக் கெடுக்கும்!

SHOOT THE கேள்வி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

@Tharun

இங்கிலாந்து வீரர் ரஹீம் ஸ்டெர்லிங் மீதான இனவெறி சர்ச்சை, ஐரோப்பிய கால்பந்து உலகில் பெரிதாக பேசப்படுகிறதே?!


கால்பந்து மட்டுமல்ல எல்லா விளையாட்டிலும் இனவெறி தொடர்கிறது. இனவெறி துளியும் கூடாது என்பதற்காகவே இரு அணி கேப்டன்களும் `No Racism’ பேட்ஜ் அணிந்து விளையாடுகிறார்கள். ஆனால், ரசிகர்கள் தங்களுக்குப் பிடிக்காத வீரர்களை இனரீதியாக  கிண்டல் செய்வது தொடர்கிறது. பத்திரிகைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு இங்கிலாந்து பத்திரிகை தன்னைப் பற்றி இனரீதியாக கேலி செய்ததாக, பெல்ஜியத்தைச் சேர்ந்த மான்செஸ்டர் யுனைடெட் ஸ்ட்ரைக்கர் லுகாகு தெரிவித்திருந்தார். இப்போது அடுத்த சர்ச்சை வெடித்திருக்கிறது. சமீபத்தில், இங்கிலாந்து - மான்டெனிக்ரோ அணிகளுக்கு இடையிலான 2020 யூரோ கோப்பைக்கான தகுதிச்சுற்றுப் போட்டியின்போது, மான்டெனிக்ரோ ரசிகர்கள் இங்கிலாந்து வீரர் ரஹிம் ஸ்டெர்லிங்குக்கு எதிராக இனரீதியாக கோஷங்கள் எழுப்பினர். அந்த ரசிகர்கள் மீது அதிருப்தி தெரிவித்த ஸ்டெர்லிங், `சம்பந்தப்பட்ட ரசிகர்களின் சீசன் டிக்கெட்டை ரத்து செய்து, அவர்களை ஸ்டேடியத்துக்கு வரவிடாமல் தடுத்தால் மட்டும் போதாது. ஒட்டுமொத்த ஸ்டேடியத்துக்கும் தடை விதிக்க வேண்டும்’ என்றார். இந்தப் பிரச்னை குறித்து ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பில் இங்கிலாந்து கால்பந்து சங்கம் முறையிட்டுள்ளது. இனவெறிக்கு எதிராக துணிச்சலாகp பேட்டி கொடுத்த ஸ்டெர்லிங்கை, பலரும் பாராட்டியுள்ளனர். பிரிவினையைத் தூண்டும், வீரர்களை அவமதிக்கும் ரசிகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பும்.

SHOOT THE கேள்வி

@Veeraraghavan

சாம்பியன்ஸ் லீக் கால்பந்துத் தொடரை இந்த முறை எந்த அணி வெல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது?


சாம்பியன்ஸ் லீக் கால்பந்துத் தொடர் இப்போது காலிறுதி கட்டத்தை எட்டிவிட்டது. பார்சிலோனா, யுவன்டஸ், மான்செஸ்டர் யுனைடட், மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல், டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர், போர்டோ, அயாக்ஸ் அணிகள் இன்னும் இந்தத் தொடரில் நீடிக்கின்றன. அவற்றுள் அயாக்ஸ்(vs யுவன்டஸ்), போர்டோ (vs போர்டோ), மான்செஸ்டர் யுனைடட் (vs பார்சிலோனா) ஆகிய அணிகள் அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பு மிகக் குறைவு. மான்செஸ்டர் சிட்டி, ஸ்பர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி கடினமாக இருக்கும். ஆனாலும், சிட்டி அரையிறுதிக்குச் செல்லவே வாய்ப்பு அதிகம். யுவன்டஸ், பார்சிலோனா அணிகளை ஒப்பிட்டால், இங்கிலாந்து அணிகள் கொஞ்சம் பலவீனமானவைதான். அவர்களின் தடுப்பாட்டம் நிச்சயம் பெரிய போட்டிகளில் காலை வாரும். யுவன்டஸ், பார்சிலோனா அணிகளுக்கே கோப்பை வெல்வதற்கான வாய்ப்பு அதிகம். யுவன்டஸ் இன்னும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை. ஒரு போட்டியில் சிறப்பாக ஆடும் வீரர்கள், அடுத்தப் போட்டியில் சொதப்புகிறார்கள். அதை வைத்துப் பார்க்கையில், பார்சிலோனாவுக்கே வாய்ப்பு அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. தொடர்ந்து 3 முறை கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்ற கோப்பையை, இந்த முறை மெஸ்ஸி வெல்லக்கூடும்.

SHOOT THE கேள்வி

@Natraj

ஒவ்வொரு முறையும் ஐபிஎல் டிக்கெட் வாங்குறதுக்குள்ளே பெரும்பாடா இருக்கே?!


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள மொத்த இருக்கைகள் 50,000. இதில், விதிமுறைகளை மீறி புனரமைப்பு செய்யப்பட்டதால் ஐ,ஜே,கே என்ற மூன்று ஸ்டேண்டுகளை பயன்படுத்த நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. அந்த மூன்று ஸ்டேண்ட்களில் 12,000 இருக்கைகள் உள்ளன. எனவே, மீதமுள்ள இருக்கைகளில்தான் டிக்கெட் விற்பனை நடைபெறும்.

SHOOT THE கேள்விஅதிலும், ஒவ்வொரு போட்டி நடக்கும்போதும் டி.என்.சி.ஏ சார்பில் கிளப் உறுப்பினர்கள், போலீஸ் உள்ளிட்ட அரசு துறைகள், ஸ்பான்சர்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காம்ப்ளிமென்ட்ரி டிக்கெட்டுகள் கொடுக்க வேண்டியது இருக்கும்.  மீதமுள்ள டிக்கெட்டுகள்தான் ஆல்லைன் மூலமாகவும் நேரடியாகவும் விற்கப்படுகின்றன.

1,350 ரூபாய் டிக்கெட்டுகள் ஸ்டேடியத்தில் விற்கப்படும். எல்லோராலும் அதை வரிசையில் நின்று வாங்க முடியாது. அதனால்தான், ஆன் லைனில் புக்கிங் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விடுகின்றன. தவிர, சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக ஐ.பி.எல் போட்டிகள் நடக்காததும், ஐ.பி.எல் அணிகளில் சி.எஸ்.கே-வுக்குத்தான் ரசிகர் வட்டம் அதிகம் என்பதும் மற்ற காரணங்கள்.