Published:Updated:

ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம்: சென்னையில் 6 பேர் சிக்கினர்

ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம்: சென்னையில் 6 பேர் சிக்கினர்
ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம்: சென்னையில் 6 பேர் சிக்கினர்
ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம்: சென்னையில் 6 பேர் சிக்கினர்

சென்னை: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட இடைத்தரகர்கள் 6 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரொக்கப்பணம், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கித் சவான், அஜித் சந்திலா உள்பட 10 பேரை டெல்லி போலீஸ் நேற்று கைது செய்தது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பந்துவீசும் போது அதிக ரன்களை விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை படி அவர்கள் இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டதாக டெல்லி போலீசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர்.

இந்த நிலையில், சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் இன்று கைது செய்துள்ளனர். டெல்லி போலீஸ் கொடுத்த தகவலின் பேரில் கடந்த ஒரு வாரமாக சி.பி.சி.ஐ.டி போலீசார் சென்னையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

##~~##
புரசைவாக்கம், ராஜா அண்ணாமலை புரம் உள்ளிட்ட இடங்களில் சி.பி.சி.ஐ.டி போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது இடைத்தரகர்கள் 6 பேர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 15 லட்ச ரூபாய் ரொக்கப் பணம், லேப் டாப், ஏராளமான செல்போன்கள் பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஹரிஸ் பஜாஜ், தீபக் பஜாஜ், நர்பத், சுனில் பஜன்லால், பிரவீண்குமார் ஆகியோர்  வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் வேதாச்சலம்  தமிழகத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, யார் யாரிடம் இவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டார்கள், செல்போனில் யாரிடம் தொடர்பு கொண்டார்கள், சூதாட்ட கும்பலுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.