Published:Updated:

ஐ.பி.எல்: டெல்லியை வீழ்த்தியது பஞ்சாப்

ஐ.பி.எல்: டெல்லியை வீழ்த்தியது பஞ்சாப்
ஐ.பி.எல்: டெல்லியை வீழ்த்தியது பஞ்சாப்
ஐ.பி.எல்: டெல்லியை வீழ்த்தியது பஞ்சாப்

தரம்சாலா: தரம்சாலாவில் நேற்றிரவு நடந்த ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

தரம்சாலாவில் நடந்த 67வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே பீல்டிங்கை முதலில் தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கில்கிறிஸ்ட், ஷான் மார்ஷ் ஆகியோர் களம் இறங்கினர்.

கில்கிறிஸ்ட் அதிரடியாக ஆட மறுமுனையில் ஷான் மார்ஷ் நிதானம் காட்டினார். அணியின் ஸ்கோர் 7.3 ஓவர்களில் 60 ரன்னாக இருந்த போது கில்கிறிஸ்ட் இர்பான் பதான் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். கில்கிறிஸ்ட் 26 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 42 ரன் எடுத்தார்.

பின்னர் வந்த அசார் மக்மூத் (9) ஆஷிஷ் நெக்ரா பந்தில் வீழ்ந்தார். அடுத்து வந்த டேவிட் மில்லர் அதிரடியாக விளையாடினார். அணியின் எண்ணிக்கை 120 ரன்னாக இருந்த போது ஷான் மார்ஷ் (45) மோர்னே மோர்கல் பந்தில் ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து களம் இறங்கிய தமிழக வீரர் ஆர்.சதீஷ் 22 ரன்னில் வெளியேறினார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்தது. டேவிட் மில்லர் 24 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 44 ரன்னும், பியுஷ் சாவ்லா ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

##~~##
இதைத் தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் சந்த் 7 ரன்னிலும், இர்பான் பதான் ஒரு ரன்னிலும், வார்னர் டக் அவுட் ஆகி வெளியேறினர். மறுமுனைவில் கேப்டன் ஜெயவர்த்தனே போராடி வந்தார். சேவாக்- ஜெயவர்த்தனே ஜோடி ஓரளவு ரன் குவித்தது. சேவாக் 30 ரன்னில் வெளியேற, 39 ரன் எடுத்திருந்தபோது ஜெயவர்த்தனே ஆட்டம் இழந்தார்.
இதையடுத்து களம் புகுந்த ரோக்ரீர் அதிரடியாக விளையாடினார். 29 பந்தில் 49 ரன் எடுத்த ரோக்கீர் 49 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதில் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் அடங்கும். பின்னர் வந்த வீரர்கள் சோபிக்கவில்லை. இதனால் டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் மட்டுமே எடுத்தது.  இதனால் 7 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இந்த இரு அணிகளும் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.