Published:Updated:

IPL அதகளம் ஆரம்பம்!

IPL அதகளம் ஆரம்பம்!
பிரீமியம் ஸ்டோரி
News
IPL அதகளம் ஆரம்பம்!

IPL அதகளம் ஆரம்பம்!

IPL அதகளம் ஆரம்பம்!

ம்மர் வந்தாலே இந்தியாவில் கிரிக்கெட் சீசன் தொடங்கிவிடும். இந்த ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தல் இருப்பதால், இன்னும் முன்னதாக மார்ச் மாதத்திலேயே களைகட்ட தொடங்கிவிட்டது, ஐ.பி.எல் திருவிழா. முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ளது நடப்பு சாம்பியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ். அந்த வெற்றியுடன் இந்த ஆண்டின் சில சுவாரஸ்யமான ஐ.பி.எல் ரவுண்ட்-அப்...

● 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 20 ஓவர் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின், 12-வது சீசன் இது.

● கடந்த ஆண்டு வரை, ‘டெல்லி டேர்டெவில்ஸ்’ என்ற பெயரில் விளையாடி,   ‘டெல்லி கேபிடல்ஸ்’ என்று பெயர் மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது டெல்லி.

● நீல நிற ஜெர்ஸியிலிருந்து மாறியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூர், ‘பிங்க் சிட்டி’ என்று அழைக்கப்படுவதால், அந்த அணியும் பிங்க் ஜெர்ஸியில் களமிறங்குகிறது.

● தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர், வருண் சக்கரவத்தி பெரிதும் கவனிக்கப்பட்டார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 8.4 கோடி ரூபாய்க்கு வருணை ஏலத்தில் எடுத்து அதிரடி காட்டியது.

● 16-வயது ப்ரயாஸ் ரே பர்மன், ஐபிஎல் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் வீரர். 1.5 கோடி ரூபாய்க்கு, ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தேர்வுசெய்துள்ளது.

IPL அதகளம் ஆரம்பம்!

● நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை 3 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. பாகிஸ்தான் பிரீமியர் லீக்கில் கலக்கிய ஷேர்ன் வாட்சன், ஃபார்மில் இருப்பது சென்னைக்குப் பலம். அனுபவ வீரர்களுடன் தோனி தலைமையிலான சென்னை அணி, இந்த ஆண்டும் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

● இதுவரை ஒருமுறைகூட பெங்களூரு அணி கோப்பை வெல்லாதது பெரும் ஏமாற்றம்.  கோலி தலைமையிலான பெங்களூரு அணி, இந்த முறையாவது கோப்பை வெல்லுமா என எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.

 ● மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை அணி, ரோஹித் ஷர்மா தலைமையில் களமிறங்குகிறது. பயிற்சியாளராக இருந்த லசித் மலிங்கா மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளது, மும்பை அணியின் பந்துவீச்சை மேலும் பலப்படுத்தியுள்ளது.

● தமிழகத்தின் அஸ்வின் கேப்டன்ஷிப்பில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸும் பங்கேற்கின்றன.

● மார்ச் 23-ம் தேதி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது தொடர்.  வழக்கமான பிரமாண்டமான தொடக்க விழா, இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அந்தத் தொகையை புல்வாமா தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு அளிக்கிறது பி.சி.சி.ஐ.

IPL அதகளம் ஆரம்பம்!

● 2018 ஐபிஎல் தொடரின்போது, காவேரி பிரச்னை காரணமாக, சென்னையில் நடக்க இருந்த லீக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. சென்னை - கொல்கத்தா அணிகள் இடையேயான ஒரே ஒரு போட்டி மட்டும் நடைபெற்றது. ஓராண்டுக்குப் பிறகு, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியை ரசிகர்கள் கொண்டாடினர்.

● சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு மோதிய முதல் லீக் போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் விளையாடிய சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா, 5000 ரன்களை கடந்து, ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

IPL அதகளம் ஆரம்பம்!

● 2018-ம் ஆண்டு, தென்னாப்ரிக்கா தொடரின்போது பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. தற்போது தடைக்காலம் நீங்கியுள்ள நிலையில், ஹைதராபாத் அணிக்காக வார்னரும், ராஜஸ்தான் அணிக்காக ஸ்மித்தும் விளையாடுகின்றனர்.

● சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய இரண்டாவது போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றிபெற்றது. ஹைதராபாத் அணிக்காக விளையாடிவரும் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் கேப்டனாக களமிறங்கிய முதல் போட்டி இது.

● மூன்றாவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி, 213 ரன்களை மும்பை அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. 2019 ஐபிஎல் தொடரின் முதல் 200 பிளஸ் ரன்கள் எடுத்து, டெல்லி அணி மிரட்டியது.

IPL அதகளம் ஆரம்பம்!

● டெல்லி அணியின் 21 வயது இளம் வீரரான ரிஷப் பன்ட், 7 சிக்சஸ்ர்கள், 7 பவுண்டரிகள் விளாசினார். 27 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ரன் மழை பொழிந்தார்.

● இந்தப் போட்டியில், மும்பை தோல்வியைத் தழுவியிருந்தாலும், முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் ‘கம் பேக்’ ஆட்டம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. “நான் கிரிக்கெட் விளையாடுவதை மிகவும் விரும்புகிறேன். சச்சின் உடனான உரையாடல்கள் எனக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது. எனது ஆட்டத்துக்கும் அது பெரிதும் உதவுகிறது. தவறுகளிலிருந்து பாடம் கற்று வெற்றிப்பாதைக்குத் திரும்புவோம்” என்றார் யுவராஜ் சிங்.

அடுத்தடுத்து நடக்க இருக்கும் போட்டிகளில், திருவிழா உற்சாகம் மேலும் களைகட்டும்  என்பதில் சந்தேகமில்லை.

-கார்த்திகா ராஜேந்திரன்

படங்கள்: தி.குமரகுருபரன்