Published:Updated:

ஐ.பி.எல். போட்டிகளை நிறுத்த வேண்டும்; சையத் கிர்மானி ஆவேசம்

ஐ.பி.எல். போட்டிகளை நிறுத்த வேண்டும்; சையத் கிர்மானி ஆவேசம்
ஐ.பி.எல். போட்டிகளை நிறுத்த வேண்டும்; சையத் கிர்மானி ஆவேசம்
ஐ.பி.எல். போட்டிகளை நிறுத்த வேண்டும்; சையத் கிர்மானி ஆவேசம்

பெங்களூர்: கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல். போட்டிகளை உடனே நிறுத்த வேண்டும் என்று முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி கூறியுள்ளார்ர்.

ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபடும் வீரர்களை நிரந்தரமாக கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து தடை செய்ய வேண்டும். உடனே ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை கிரிக்கெட் வாரியம் நிறுத்த வேண்டும். என்று முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஐ.பி.எல். போட்டிகளில் ‘ஸ்பாட் பிக்ஸிங்’ செய்ததாக ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்கள் சிக்கி கைதாகியிருப்பது குறித்து கிர்மானி கருத்து தெரிவிக்கும் போது, ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபடும் வீரர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும். கூடவே அவர்களுக்கு 12 முதல் 15 வருட கால சிறைத் தண்டனையும் விதிக்க வேண்டும். ஐ.பி.எல்.லையும் உடனே இழுத்து மூட வேண்டும்.

##~~##
பெரும் அளவு பணம் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவதால் இந்த நிலை ஏற்படுகிறது. கடந்த வருடம் கூட ஐ.பி.எல். போட்டிகளில் சில வீரர்கள் ‘ஸ்பாட் பிக்ஸிங்’ செய்ததாக சிக்கினர். எனவே இந்த விவகாரம் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஐ.பி.எல்.லால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்பதை விட சீரழிவுக்கே வித்திடுகிறது என்பதே உண்மை என்றார்.