Published:Updated:

பேட்களின் போரில், தெறிக்கட்டும் சிக்ஸர்கள்!

பேட்களின் போரில், தெறிக்கட்டும் சிக்ஸர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
பேட்களின் போரில், தெறிக்கட்டும் சிக்ஸர்கள்!

பேட்களின் போரில், தெறிக்கட்டும் சிக்ஸர்கள்!

பேட்களின் போரில், தெறிக்கட்டும் சிக்ஸர்கள்!

பேட்களின் போரில், தெறிக்கட்டும் சிக்ஸர்கள்!

Published:Updated:
பேட்களின் போரில், தெறிக்கட்டும் சிக்ஸர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
பேட்களின் போரில், தெறிக்கட்டும் சிக்ஸர்கள்!

சென்னையின் வீதிகள் மஞ்சள் வண்ணம் பூசத் தயாராகிவிட்டன. விசில்களின் ஓசை விண்ணைப்

பேட்களின் போரில், தெறிக்கட்டும் சிக்ஸர்கள்!

பிளக்கப்போகிறது. நாற்பதாயிரம் ரசிகர்கள் ‘சியெஸ்கே... சியெஸ்கே’ என்று ஒருசேரக் கூச்சலிட, சேப்பாக்கத்தின் ஒலியை உலகெங்கும் எடுத்துச் செல்லப்போகின்றன மெரீனாவின் அலைகள். ஆம், இந்த முறை சிங்கத்தின் குகையிலிருந்தே தொடங்குகிறது ஐ.பி.எல் கோப்பைக்கான வேட்டை. 2019 ஐ.பி.எல்-லின் ஹைலைட்ஸ் மட்டும் இங்கே!

நாடாளுமன்றத் தேர்தல், கிரிக்கெட் உலகக்கோப்பை என இருபெரும் சிக்கல்களைச் சமாளித்து ஒருவழியாக மார்ச் 23-ம் தேதி தொடங்கப்போகிறது இந்தியன் பிரீமியர் லீகின் 12-வது சீஸன். சில அணிகள் கடந்த ஆண்டைப்போல் அப்படியே இருக்கின்றன. ஓரிரு அணிகள் மொத்தமாக மாறியிருக்கின்றன. ஒரு அணி தன் அடையாளத்தையே மாற்றிக் களமிறங்குகிறது. ஃபின்ச், மேக்ஸ்வெல், ஸ்டார்க் போன்ற வீரர்களை இழந்திருக்கும் ஐ.பி.எல், சாம் கரண், ஆஷ்டன் டர்னர், ஹிட்மேயர் என இளைஞர்களை வரவேற்றுப் புதுப்பொலி வடைந்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பேட்களின் போரில், தெறிக்கட்டும் சிக்ஸர்கள்!

*   பிங்க் சிட்டி ஜெய்ப்பூரை மேலும் வண்ணமயமாக்க, இந்த முறை பிங்க் ஜெர்சியோடு களமிறங்குகிறது ராஜஸ்தான் ராயல்ஸ். டெல்லி டேர்டெவில்ஸ் இப்போது டெல்லி கேபிடல்ஸ் ஆகிவிட்டது. கடந்த ஆண்டு பயிற்சியாளராக இருந்த மலிங்கா, இப்போது மீண்டும் மும்பை அணிக்காக யார்க்கர்களால் மிரட்டத் தயாராகிவிட்டார். ட்ரீம் 11, ஐ.பி.எல் தொடரின் அதிகாரபூர்வ ஸ்பான்சராகியிருக்கிறது.

*   உலகக்கோப்பை நெருங்குவதால் சில இந்திய பேட்ஸ்மேன்கள் ஓரிரு போட்டிகளில் ஓய்வெடுக்க வாய்ப்பிருக்கிறது. அதனால், பெரும்பாலும் வெளிநாட்டு வீரர்களே அதிக ரன்கள் அடித்து ஆரஞ்சு கேப் வாங்குவார்கள் என எதிர்பார்க்கலாம். வார்னர், ஸ்மித் இருவரின் வருகையும் உலக கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையை மொத்தமாக ஐ.பி.எல் பக்கமாகத் திருப்பியிருக்கிறது. ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு இருவரும் தங்களை எப்படி நிரூபிக்கப்போகிறார்கள் என்பதைப் பார்க்க அனைவரும் ஆவலாக இருக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் உலகக்கோப்பை வாய்ப்பும் இவர்களைச் சார்ந்திருப்பதால், இந்தத் தொடரின் பெரிய அட்ராக்ஷன் இவர்கள்தான். ஸ்மித் ஓரளவு சிறப்பாக ஆடுவார் என்றாலும், 600, 700 ரன்களெல்லாம் அடிக்கப்போவதில்லை. ஆனால், வார்னர் தன் மூன்றாவது ஆரஞ்சு கேப்பைக் குறிவைப்பது உறுதி.

பேட்களின் போரில், தெறிக்கட்டும் சிக்ஸர்கள்!

*   வழக்கம்போல் கெய்ல், டி வில்லியர்ஸ் இருவரிடமும் எதிர்பார்க்க நிறைய இருக்கிறது. ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு காம்பஸ் போல் சுழலும் டி வில்லியர்ஸின் பேட்டிங்கைப் பார்க்கப்போகிறோம். ஈ சாலா கப் பெங்களூருக்குச் செல்ல அவரின் பங்களிப்பு மிக அவசியம். கிறிஸ் கெய்ல் உலகக் கோப்பைக்குப் பின் ஓய்வை அறிவிப்பதாகச் சொல்லியிருக்கிறார். அதனால், தன் கடைசித் தொடரில் முத்திரை பதிக்க விரும்புவார்.

*   பும்ரா, புவி, ஷமி யாரும் 14 லீக் போட்டிகளிலும் விளையாடப்போவதில்லை. அதனால் லீடிங் விக்கெட் டேக்கராக இவர்கள் இருக்க  வாய்ப்புகள் குறைவுதான். விக்கெட் வேட்டை நடத்தக்கூடிய பெளலர்களில் டாப்பில் இருக்கிறார் சென்னையின் லுங்கி எங்கிடி. கடந்த ஓராண்டில் தென்னாப்பிரிக்காவின் முக்கிய பௌலராக வளர்ந்திருக்கிறார் எங்கிடி. பௌன்ஸ், யார்க்கர், ஸ்லோ பால், லேட் ஸ்விங் என அனைத்திலும் மிரட்டக்கூடியவர். சூப்பர் கிங்ஸின் மிகப்பெரிய அஸ்திரம் இவர்தான்.

*   ஜேசன் பெரண்டார்ப் இந்த சீஸனின் எதிர்பாராத ஸ்டாராக உருவெடுக்கலாம். ஈரமான ஆடுகளத்திலும் பந்தைத் தோள்பட்டை உயரத்துக்கு எழுப்பக்கூடியவர். டி-20 போட்டி களுக்கான ரெடிமேட் பௌலர். இவரது உயரமே பேட்ஸ்மேன்களின் ஒரு காலை பெவிலியனில் நிறுத்திவிடும். மலிங்காவின் துணையோடு மும்பை இந்தியன்ஸுக்காக விக்கெட்டுகளை அள்ளப்போகிறார் பெரண்டார்ப்.

பேட்களின் போரில், தெறிக்கட்டும் சிக்ஸர்கள்!

*   ஐ.பி.எல் ஏலத்தின்போது மொத்த கிரிக்கெட் உலகையும் ஆச்சர்யப்படுத்தினார் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி. அவரது மந்திரச் சுழலுக்காக 8.4 கோடி செலவழித்தது கிங்ஸ் லெவன். அதற்கான மொத்த பலனையும் தரக் காத்திருக்கிறார் இந்த மிஸ்ட்ரி ஸ்பின்னர். ஆப் ஸ்பின், லெக் ஸ்பின், கூக்ளி, தூஸ்ரா, கேரம் பால், டாப் ஸ்பின், டிரிப்டர் என அனைத்து வேரியேஷன்களையும் காட்டி மிரட்டப்போகிறார். இவரைப்போலவே இன்னொரு மிரட்டலுக்குக் காத்திருப்பவர் ரஷீத் கான். ஹைதராபாத் சன்ரைஸர்ஸ் அணிக்கு ரஷித் கான்தான் பெரும்பலம்!

உலகக் கோப்பையில் யார்?

*   உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பன்ட், கே.எல். ராகுல் என மூவரும் பேக் அப் கீப்பர் இடத்துக்குக் கடும் போட்டியிடுகிறார்ககள். அதனால் மூவருமே தங்கள் திறமையை இந்த ஐ.பி.எல்-ல் காட்ட முழு பலத்தோடு விளையாடுவார்கள்.

*   ஹர்திக் பாண்டியாவுக்கு பேக் அப் யார் என்பதில் ஜடேஜா, விஜய் சங்கருக்கு இடையே பெரும்போட்டி நடக்கிறது. ஆனால், இருவரும் ஒவ்வொரு விஷயத்தில் பின்தங்குகிறார்கள். ஏழாவது வீரராகக் களமிறங்க, ஜடேஜா தன் பேட்டிங்கை நிரூபிக்கவேண்டும். ஐந்தாவது பௌலராக விளையாட, விஜய் சங்கர் பந்துவீச்சில் பெரிய மாற்றங்கள் செய்தாக வேண்டும். இருவரில் யாருக்கு வாய்ப்பு என்பதை, இந்த ஐ.பி.எல் தொடரின் முதல் இரு வாரங்கள்தான் தீர்மானிக்கும்.

பேட்களின் போரில், தெறிக்கட்டும் சிக்ஸர்கள்!

சூப்பர் கிங்ஸ் எப்படி இருக்கு?

*   கடந்த ஆண்டைப்போல் அப்படியே இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். சொல்லிக்கொள்ளும்படியான மாற்றமாக முன்னாள் வீரர் மோஹித் ஷர்மா மீண்டும் அணிக்குத் திரும்பியிருக்கிறார். மற்றபடி தோனி, பிராவோ, வாட்ஸன், இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங் என சீனியர் சிட்டிசன்ஸ் டீம்தான்!

*   சென்னையின் பேக் அப் வீரர்கள் அசுர பலத்தில் இருக்கிறார்கள். முரளி விஜய், சையது முஸ்தாக் அலி டி-20 தொடரில் சதமடித்து அசத்தியிருக்கிறார். சாம் பில்லிங்ஸ், வெஸ்ட் இண்டீஸ் அணியு டனான தொடரில் அசத்தினார். டேவிட் வில்லி, எங்கிடி, சான்ட்னர் என எல்லோருமே செம பார்மில் இருப்பது சென்னை அணியைக் கடந்த ஆண்டைவிட பலப்படுத்தி யிருக்கிறது. ஜடேஜா, ஜாதவ், ராயுடு என இவர்கள் மூவருமே இந்திய அணிக்குத் தொடர்ந்து ஆடிக்கொண்டிருப்பதால், அவர்களது அனுபவமும் அணிக்கு பலம் சேர்க்கும்.

பேட்களின் போரில், தெறிக்கட்டும் சிக்ஸர்கள்!

  கடந்த ஆண்டைவிட இந்த முறை சென்னை அணிக்கு நிறைய ஆப்ஷன்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பொசிஷனுக்கும் இரண்டு டாப் வீரர்கள் இருக்கிறார்கள். எந்த வீரர் காயமடைந்தாலும், எந்த வெளிநாட்டு வீரர் வெளியேறினாலும் சென்னை அணியை அது கொஞ்சம்கூட பாதிக்கப்போவதில்லை. இதுவரை, ஐ.பி.எல் கோப்பையைத் தக்கவைத்துள்ள ஒரே அணி சூப்பர் கிங்ஸ்தான். மீண்டும் ஒருமுறை அந்தச் சாதனையைப் படைக்கக் காத்திருக்கின்றன சூப்பர் சிங்கங்கள்!

- மு.பிரதீப்கிருஷ்ணா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism