Published:Updated:

ஐ.பி.எல்: ராஜஸ்தானை வென்றது மும்பை இந்தியன்ஸ்

ஐ.பி.எல்: ராஜஸ்தானை வென்றது மும்பை இந்தியன்ஸ்
ஐ.பி.எல்: ராஜஸ்தானை வென்றது மும்பை இந்தியன்ஸ்
ஐ.பி.எல்: ராஜஸ்தானை வென்றது மும்பை இந்தியன்ஸ்

மும்பை: மும்பையில் நேற்றிரவு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 66வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.  சச்சின் பங்கேற்காத இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசியது.

மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிளைன் மேக்ஸ்வெல்லும், ஆதித்ய தாரேவும் களம் இறங்கினர். 23 ரன் எடுத்திருந்த மேக்ஸ்வெல், ஷேன் வாட்சனின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இதைத் தொடர்ந்து தினேஷ் கார்த்திக் களம் புகுந்தார்.

அணியின் ரன்ரேட் விகிதம் 8 ரன்களுக்கு மேலாக சென்று கொண்டிருந்த வேளையில் தினேஷ் கார்த்திக் 21 ரன்களும், ஆதித்ய தாரே 59 ரன்களும், கேப்டன் ரோகித் ஷர்மா 14 ரன்களும், பொல்லார்ட் 17 ரன்களும், ஹர்பஜன்சிங் 15 ரன்களும் எடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 167 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி, மும்பை பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. கேப்டன் டிராவிட் (4), ரஹானே (4), சாம்சன் (4) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஷேன் வாட்சன் 19 ரன்களில் ஆட்டம் இழந்தார். 10 ஓவர் முடிந்திருந்த போது ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 60 ரன்களுடன் திணறியது.

##~~##
ஆனால் பின் வரிசையில் வந்த வீரர்கள் யாரும் சரியாக விளையாடவில்லை. இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
15 போட்டிகளில் விளையாடி உள்ள மும்பை அணி 11 வெற்றியும், 4 தோல்வி அடைந்தாலும் நம்பர் ஒன் இடத்தை தக்கவைத்துக் கொண்டது. அதே நேரத்தில் ராஜஸ்தான் அணி 10 வெற்றியும், 5 தோல்வியும் அடைந்து அடுத்த சுற்றுக்கு சென்றது.