Published:Updated:

ஸ்ரீசாந்த் கைதுக்கு ஹர்பஜன் சிங், தோனிதான் காரணம்: தந்தை குற்றச்சாட்டு

ஸ்ரீசாந்த் கைதுக்கு ஹர்பஜன் சிங், தோனிதான் காரணம்: தந்தை குற்றச்சாட்டு
ஸ்ரீசாந்த் கைதுக்கு ஹர்பஜன் சிங், தோனிதான் காரணம்: தந்தை குற்றச்சாட்டு
ஸ்ரீசாந்த் கைதுக்கு ஹர்பஜன் சிங், தோனிதான் காரணம்: தந்தை குற்றச்சாட்டு

புதுடெல்லி: கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கைதுக்கு மகேந்திர சிங் தோனி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர்தான் காரணம் என ஸ்ரீசாந்தின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.

இருவரும் சதி செய்து ஸ்ரீசாந்தை சிக்க வைத்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ள அவர்,  ஸ்ரீசாந்த் கைதுக்கு தோனியையும், ஹர்பஜன் சிங்கையும்தான் குற்றம் சாட்ட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

ஸ்ரீசாந்த் இனி அணியில் ஒருபோதும் இடம்பெற முடியாது என தோனி மிரட்டல் விடுத்திருந்தார்.அதேபோன்று சமீபத்தில் ஹர்பஜன் சிங்கிற்கு எதிராக தனது ட்விட்டர் தளத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இவைகளால்தான் ஸ்ரீசாந்த் சதி செய்து சிக்கவைக்கப்பட்டுள்ளார் என தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சஸ்பெண்ட்

இந்நிலையில், சூதாட்ட புகாரில் சிக்கியுள்ள கிரிக்கெட் வீரர்கள்  ஸ்ரீசாந்த், சவான் மற்றும் சந்திலா ஆகியோர் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

துரதிருஷ்டவசமானது: விளையாட்டுத் துறை அமைச்சகம்

##~~##
இதனிடையே கிரிக்கெட் சூதாட்டத்திற்காக ஸ்ரீசாந்த் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளடு துரதிருஷ்டவசமானது என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஐ.பி.எல். தலைவர் சுக்லாவிடம் பேசிய அவர், இதுபோன்ற நீதி நெறிக்கு புறம்பான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி, நாட்டின் விளையாட்டை தூய்மையாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.