Published:Updated:

11 விக்கெட், 49 ரன்கள்... சர்வாதே மேஜிக்... விதர்பா மீண்டும் சாம்பியன்! #RanjiTrophy

11 விக்கெட், 49 ரன்கள்... சர்வாதே மேஜிக்... விதர்பா மீண்டும் சாம்பியன்! #RanjiTrophy

விதர்பா விரித்த வலையில் புஜாரா விழவில்லை. டஃப் கொடுத்தார். தடுப்பாட்டத்தில் மிகவும் கவனமாக இருந்தார். இருப்பினும் சர்வாதே விடாப்பிடியாக ஸ்ட்ரெய்ட் லைனிலேயே பந்துவீசி புஜாராவை இரண்டு முறை க்ரீசில் இருந்து வெளிவர வைத்தார்.

11 விக்கெட், 49 ரன்கள்... சர்வாதே மேஜிக்... விதர்பா மீண்டும் சாம்பியன்! #RanjiTrophy

விதர்பா விரித்த வலையில் புஜாரா விழவில்லை. டஃப் கொடுத்தார். தடுப்பாட்டத்தில் மிகவும் கவனமாக இருந்தார். இருப்பினும் சர்வாதே விடாப்பிடியாக ஸ்ட்ரெய்ட் லைனிலேயே பந்துவீசி புஜாராவை இரண்டு முறை க்ரீசில் இருந்து வெளிவர வைத்தார்.

Published:Updated:
11 விக்கெட், 49 ரன்கள்... சர்வாதே மேஜிக்... விதர்பா மீண்டும் சாம்பியன்! #RanjiTrophy

சௌராஷ்ட்ரா அணியின் பேட்ஸ்மென் விஷ்வராஜ் ஜடேஜா ஸ்ட்ரைக்கர் எண்டில் பேட்டைச் சுழற்றிக்கொண்டிருக்கிறார். எதிர்த்திசையில் விதர்பா அணியின் ஆஸ்தான ஸ்பின்னர் ஆதித்யா சர்வாதே பந்துவீசுகிறார். ஃபுல் லென்த்தில் பிட்சான பந்து பேட்ஸ்மேன் கண் இமைப்பதற்குள் அவரது காலை பதம்பார்த்தது. அம்பயரும் உடனடியாக அவுட் கொடுக்க, முதல் முறையாக விரக்தியின் உச்சத்தில் பிட்சை காலால் உதைத்துவிட்டுப் போனார் பேட்ஸ்மென் விஷ்வராஜ். பெவிலியன் திரும்பிய அவரோடு, சௌராஷ்டிராவின் வெற்றி வாய்ப்பும் சேர்ந்தே வெளியேறியது. அடுத்து 9 ஓவர்களில் விதர்பா சாம்பியன். அதுவும்  தொடர்ந்து இரண்டாவது முறையாக!

2018 நவம்பர் மாதம் தொடங்கிய ரஞ்சிக் கோப்பை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. சௌராஷ்ட்ரா - விதர்பா அணிகளுக்கிடையிலான  இறுதிப்போட்டி நாக்பூரில் நடந்தது. டாஸ் வென்ற விதர்பா பேட்டிங்கை தேர்வு செய்தது. பலமான பேட்டிங் அப் லைன் அப் கொண்டிருந்த விதர்பா, சௌராஷ்ட்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. ரன்மெஷின்களான ஃபயாஸ் ஃபசலும், வாசிம் ஜாஃபரும் இம்முறை சோபிக்கவில்லை. 100 ரன்களைக் கடப்பதற்குள்ளாகவே இருவரும் அவுட்டாக அணியின் ரன் விகிதம் கணிசமாகக் குறைந்தது. 

முதல்நாளின் தேநீர் இடைவேளைக்கு முன்புவரை எந்தவொரு பார்ட்னர்ஷிப்பையும் நிலைக்க விடாமல் செய்வதையே வேலையாக வைத்திருந்தனர் சௌராஷ்ட்ரா பவுலர்கள். முக்கியமாக உனத்கட், சக்கரியா, மக்வானா போன்ற பவுலர்கள் அணியின் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டரைக் தகர்த்துவிட அக்ஷய் வாக்தர் (45 ரன்கள்) மற்றும் அக்ஷய் கர்னேவர் (73 ரன்கள்) நிதானித்து ஆடினர். மொத்தத்தில் 312 ரன்கள் என்ற சுமாரான ஸ்கோருக்கு ஆல் அவுட்டானது விதர்பா அணி. ரஞ்சியைப் பொறுத்தவரை, நாக் அவுட் போட்டிகள் டிராவில் முடிந்தால், எந்த அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதோ, அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அதனால் நாக் அவுட் போட்டிகளின் முதல் இன்னிங்ஸில் மிகப்பெரிய ஸ்கோர் எடுத்தே ஆகவேண்டும். நடப்பு சாம்பியன் அதைச் செய்யத் தவறியது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல் இன்னிங்ஸை தொடங்கிய சௌராஷ்ட்ரா அணிக்கு விதர்பா வழங்கியது பேரதிர்ச்சி! டாப் ஆர்டர் பேட்ஸ்மென்களான தேசாய், விஷ்வராஜ் ஜடேஜா சொற்ப ரன்களுக்கு அவுட்டாக சௌராஷ்ட்ரா அணியின் நம்பிக்கை நட்சத்திரமான புஜாரா களமிறங்கினார். ஆனால், விதர்பா அணி புஜாராவுக்குக் கொடுத்தது வேறு வகையான ட்ரீட்மென்ட். புஜாரா களத்துக்கு வந்த அடுத்த நிமிடத்தில் பந்துவீச சர்வாதே அழைக்கப்பட்டார். ஃபார்வர்டு ஷார்ட் லெக், ஸ்லிப், சில்லி பாயின்ட் என, பந்து அவுட்சைடு எட்ஜ் ஆனாலும், இன்சைடு எட்ஜ் ஆனாலும் கேட்ச்சுக்கு வழிவகுக்கும் வகையில் நெருக்கமான பொசிஷன்களில் ஃபீல்டர்கள் நிறுத்திவைக்கப்பட்டனர். 

விதர்பா விரித்த வலையில் புஜாரா விழவில்லை. டஃப் கொடுத்தார். தடுப்பாட்டத்தில் மிகவும் கவனமாக இருந்தார். இருப்பினும் சர்வாதே விடாப்பிடியாக ஸ்ட்ரெய்ட் லைனிலேயே பந்துவீசி புஜாராவை இரண்டு முறை க்ரீசில் இருந்து வெளிவர வைத்தார். பின்பு சுதாரித்துக் கொண்ட புஜாரா, அந்த ஓவரை மெயிடன் ஆக்கினார். அடுத்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். மீண்டும் சர்வாதே பந்துவீச வந்தார். அதே லென்த்திலேயே திரும்பவும் அட்டாக் செய்ய புஜாராவால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. குட் லென்த்தில் பிட்சான பந்தை புஜாரா இறங்கி வந்து அடிக்க முயற்சிக்க, அது அவுட்சைடு எட்ஜ்ஜாகி ஜாஃபரின் கைகளுக்குள் தஞ்சம் புகுந்தது. சௌராஷ்ட்ரா அணி பெரிதும் நம்பி இருந்த புஜாரா ஒரு ரன்னில் அவுட். அணியின் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. 

அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் எல்லாம் சீரான இடைவேளையில் குறைந்த ரன்களில் அவுட்டாகினர். ஒரு பக்கம் தனி ஆளாகப் போராடிய ஸ்னெல் பட்டேல் 102 ரன்கள் எடுத்தார். கடைசிக்கட்டத்தில் பௌலர்கள் மக்வானா, தர்மேந்திர சிங் ஜடேஜா ஆகியோர் விதர்பா பௌலர்களைச் சோதித்தனர். மீண்டும் சர்வாதே தன் மாயச்சுழலால் விக்கெட் வேட்டை நடத்த, 307 ரன்களுக்கு தன் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை முடித்துக்கொண்டது சௌராஷ்ட்ரா அணி. விதர்பா தரப்பில் ஆதித்யா சர்வாதே மற்றும் அக்ஷய் வாக்ரேவின் சுழல் ஜாலம் அந்த அணியினருக்குப் பெரிதும் உதவியது. இவர்களின் சுழல் யுக்திக்குப் பதிலடியாக விதர்பாவிற்கு தர்மேந்திரசிங் ஜடேஜாவின் பந்துவீச்சு அமைந்தது. 

முதல் இன்னிங்ஸை விட விதர்பாவின் பேட்டிங் இரண்டாவது இன்னிங்ஸில் படுமோசமாக அமைந்தது. சொல்லிக் கொள்ளும் அளவுக்கு யாரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. பௌலிங்கில் அசத்திய சர்வாதேதான் பேட்டிங்கிலும் கைகொடுத்தார். அவர் அடித்த 49 ரன்கள் மட்டுமே விதர்பா அணியை ஓரளவு முன்னேற்றியது. நான்காம் நாளில் 200 ரன்களில் ஆட்டத்தை முடித்துக்கொண்ட விதர்பா அணி. சௌராஷ்ட்ரா அணிக்கு இலக்காக 206 ரன்களை நிர்ணயித்தது. 

காலிறுதியில் 372 ரன்களை அசால்ட்டாக சேஸ் செய்த சௌராஷ்ட்ரா அணிக்குப் பெரிய இலக்காக இது இல்லாவிடினும் சேஸ் செய்ய சற்றே சிரமப்பட்டது. ஆதித்யா சர்வாதேவின் பந்துவீச்சு இம்முறையும் புஜாராவை விட்டு வைக்கவில்லை. முதல் ஒன்பது ஓவருக்குள் 22 ரன்களில் அணியின் மூன்று ஆஸ்தான பேட்ஸ்மேன்களான ஸ்னெல் பட்டேல், ஹார்விக் தேசாய், புஜாரா அனைவரையும் வெளியேற்றினார் அந்த இடது கை ஸ்பின்னர். கடந்த இன்னிங்ஸை விட இந்த இன்னிங்ஸில் புஜாராவை வீழ்த்த அவர் எடுத்துக்கொண்ட நேரம் குறைவு. அணியின் விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிய, ஒற்றை ஆளாகப் போராடினார் விஷ்வராஜ் ஜடேஜா. இறுதியில் அவரையும் பெவிலியனுக்கு அனுப்பி வைக்க, விதர்பாவின் வெற்றி உறுதியானது. 78 ரன்கள் வித்தியாசத்தில் சௌராஷ்ட்ராவை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது விதர்பா. 

இந்த வெற்றி நிச்சயம் பேட்ஸ்மென்களால் அல்ல, முழுக்கமுழுக்க பவுலர்களின் முயற்சியாலும், அசாத்திய பந்துவீச்சாலும் கிடைத்த வெற்றி. காலிறுதி, அரையிறுதியின் போது சௌராஷ்ட்ரா அணியிடம் இருந்த கூலான ஆட்டம் இந்தப் போட்டியில் நிறையவே மிஸ்ஸிங். பேட்டிங்கில் வலுவான விதர்பா அணி இந்தமுறை பேட்டிங்கில் கோட்டை விட்டாலும் பவுலிங்கால் அதைச் சரி செய்துகொண்டது. ஆதித்யா சர்வாதேவின் பந்துவீச்சுதான் விதர்பாவின் வெற்றிக்கான காரணம். இறுதிப்போட்டியில் எடுத்த 11 விக்கெட்டுகள்தான் அவரின் சிறந்த பந்துவீச்சு. இந்தத் தொடரில் அவர் 55 விக்கெட்டுகள் மற்றும் 354 ரன்கள் எடுத்துள்ளார்.

``கடந்த ஆண்டு கிடைத்த வெற்றி ஒரு குருட்டு அதிர்ஷ்டம் என்று கூறியவர்களுக்கு இந்த வெற்றியின் மூலம் பதிலடி கொடுக்கிறோம்", என்றார் விதர்பா கேப்டன் ஃபயஸ் ஃபசல். மிகச் சிறப்பான பதிலடி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism