
டக்வொர்த் லூயிஸ்
டக்வொர்த் : பேபி சிட்டிங்னு கலாய்ச்சோம். க்யாரே செட்டிங்கான்னு செஞ்சு விட்ருச்சு ஆஸ்திரேலியா!
லூயிஸ் : ஆமாம். ஆர்.சி.பி கேப்டனுக்கு இதே வேலையா போச்சு! ஈ சாலா கப் நமதேவாம். ஹிஹி...
டக்வொர்த் : ஆர்.சி.பியா! நான் இந்தியா மேட்ச் பத்தி பேசிட்ருக்கேன் ப்ரோ.
லூயிஸ் : நான் ஆர்.சி.பி கேப்டன் கோலியைப் பத்திதான் பேசிட்டு இருக்கேன்.
டக்வொர்த் : அப்போ அவர் இந்தியா கேப்டன் இல்லைய்யா?

லூயிஸ் : அதெல்லாம் போன மாசமே ஓவர். இனி நீங்க வேற, நாங்க வேற!
டக்வொர்த் : சரி, நீங்க யாரு!
லூயிஸ் : கிரிக்கெட் மேரி ஜான்! மும்பை இந்தியன்ஸ் ப்ரோ!
டக்வொர்த் : ஓ அப்படியா, இந்த முறையும் பெரிய விசிலு அடிச்சு விடுறோம் பொறுங்க...
லூயிஸ் : யு ஆர் ஆண்ட்டி மும்பை இந்தியன்!
- ப.சூரியராஜ், ஓவியம்: கார்த்திகேயன் மேடி