Published:Updated:

SHOOT THE கேள்வி

SHOOT THE கேள்வி
பிரீமியம் ஸ்டோரி
News
SHOOT THE கேள்வி

SHOOT THE கேள்வி

SHOOT THE கேள்வி

beingvasan

ஐ.பி.எல் அணிகளிலும் சரி, இந்திய அணியிலும் சரி தமிழ்நாட்டில் இருந்து சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லையே... ஏன்?

SHOOT THE கேள்வி

ஒட்டுமொத்தமாகவே கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் கேமாக மாறி ரொம்பநாளாகி விட்டது. அதுவும், ஐ.பி.எல் போட்டிகளில் சொல்லவே வேண்டாம். தவிர, மற்றவர்களை விட வேகப்பந்து வீச்சாளர்கள்தான் அடிக்கடி காயத்தில் அவதிப்படுவர். (உதாரணம்: ஜாகிர்கான், முகமது ஷமி). ஒருமுறை காயத்தில் சிக்கினால், அதிலிருந்து மீண்டு, இந்திய அணியில் இடம்பிடிப்பது சாதாரண விஷயமில்லை. அதனால், யாரும் தெரிந்தே ரிஸ்க் எடுக்கத் தயாராக இல்லை. மேலும், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உடல்வாகு, ஃபிட்னெஸ் ரொம்பவே முக்கியம். இப்போதெல்லாம் வீரர்கள் படு ஸ்மார்ட். எதிர்காலத்தில் இந்திய அணியில் யாருக்கான தேவை இருக்கிறது என்பதை கால்குலேட் செய்து, பயிற்சி எடுக்கிறார்கள். அந்த லிஸ்ட்டில் ஃபாஸ்ட் பெளலர்ஸ் பாக்ஸை டிக் செய்யும் வீரர்கள் சொற்பம்.

SHOOT THE கேள்வி

@kannan

ப்ரோ வாலிபால் லீக் முதல் சீசனுக்கு வரவேற்பு எப்படி?


ஐ.பி.எல், ஐ.எஸ்.எல் வரிசையில் வாலிபாலுக்கு தனியாக ஒரு லீக் ஆரம்பித்திருப்பது நல்ல விஷயம். ஆறு அணிகள் பங்கேற்ற முதல் சீசனில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது. கொச்சி மற்றும் சென்னை என இரண்டு நகரங்களிலும் இந்தத் தொடருக்கு நல்ல ஆதரவு இருந்தது. அரையிறுதி, இறுதிப்போட்டிகள் நடந்தபோது சென்னை நேரு ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது. இதற்கு முன், நேஷனல்ஸ் போன்ற பிற தொடர்களுக்கு இவ்வளவு வரவேற்பு இருந்ததில்லை. அடுத்த ஆண்டு இரண்டு நகரங்களில் மட்டுமல்லாது மற்ற நகரங்களிலும் நடத்த வேண்டும் என்பது பலரின் கோரிக்கை.

SHOOT THE கேள்வி

VekaKarthik

ரியல் மாட்ரிட் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு எவ்வளவு ஊதியம் வழங்கப்பட்டது? அவர் ஏன் யுவன்டஸ் அணிக்கு ஒப்பந்தமானார்?


ரியல் மாட்ரிட் அணியில் கடைசியாக கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒப்பந்தம் கையெழுத்திட்டது 2016-ம் ஆண்டில். அதன்படி, அவரது வார ஊதியம் சுமார் இரண்டரைக் கோடி ரூபாய். அவர் ரியல் மாட்ரிட் அணியிலேயே இருந்திருந்தால் வாரம் 5 கோடி ரூபாய் வரை ஊதியம் பெற்றிருப்பார். ஆனால், இப்போது சுமார் மூன்றரைக்கோடி வார ஊதியத்துக்கு யுவன்டஸ் அணியோடு ஒப்பந்தம் செய்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக ரியல் மாட்ரிட் தலைவர் ஃபியோரென்டினா பெரெஸ் தனக்கு போதிய ஆதரவு அளிக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்திருந்தார் ரொனால்டோ. ஆனால், புதிய சவாலை எதிர்பார்த்துத்தான் இத்தாலி வந்திருப்பதாகத் தெரிவித்தார். அது உண்மைதான்.

எப்போதுமே மெஸ்ஸி, ரொனால்டோ இருவரில் யார் டாப் என்ற பனிப்போர் நிலவிக்கொண்டுதான் இருக்கிறது. இருவரும் சம அளவில் தனிநபர் விருதுகள் வென்றிருக்கிறார்கள். சாம்பியன்ஸ் லீக், லா லிகா, பாலன் டி ஓர் என எல்லா விருதுகளையும் வென்றுவிட்டனர். ஆனால், இன்னும் ‘ரொனால்டோதான் டாப்’ என்று சொல்வதற்கான அந்த ஒரு ஸ்பெஷல் காரணம் இல்லை. மெஸ்ஸிக்கும் கூட இல்லைதான்! ஆனால், அதைத் தேடித்தான் இப்போது இத்தாலி சென்றிருக்கிறார் ரொனால்டோ.

‘மெஸ்ஸி பார்சிலோனாவைத் தாண்டி எங்கும் விளையாடியதில்லை’ என்ற பேச்சு எப்போதும் பரவலாகப் பேசப்படுவதுதான். ஆனால், ரொனால்டோ அப்படியில்லை. பிரீமியர் லீகிலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். மான்செஸ்டர் யுனைடட் அணிக்காக சாம்பியன்ஸ் லீக் வென்றிருக்கிறார். அங்கு இருக்கும்போது பாலன் டி ஓர் வென்றிருக்கிறார். ரியல் மாட்ரிட் அணியிலும் அந்தச் சாதனையைச் செய்திருக்கிறார். இப்போது இத்தாலியில் யுவன்டஸ் அணிக்காகவும் அந்த சாதனைகளைச் செய்துவிட்டால், நிச்சயம் கால்பந்து உலகில் யாரும் செய்திடாத, யாராலும் எளிதில் செய்ய முடியாத மகத்தான சாதனையைப் படைத்துவிடுவார்.

ஒரு வீரர் எல்லா வகையான லீகுகளிலும் கலக்கியிருக்கிறார் என்பதே மிகப்பெரிய விஷயம். ஆனால், அந்த ஒவ்வொரு இடத்திலும் சக்கரவர்த்தியாகவே வலம் வருவது என்பது சாதாரணமானது அல்ல. அந்த அசாதாரண சாதனையை நோக்கியதுதான் ரொனால்டோவின் இந்த இத்தாலி படையெடுப்பு!

SHOOT THE கேள்வி
SHOOT THE கேள்வி
SHOOT THE கேள்வி

JpJenitan 

இந்திய கிரிக்கெட் அணியின்  தேர்வுக்குழு,  அஷ்வின், ரெய்னா போன்ற அனுபவமுள்ள, திறமையுள்ள மிகச்சிறந்த வீரர்களை புறக்கணிப்பது ஏன்? 


அஷ்வின், ரெய்னா இருவரும் திறமைசாளிகள் என்பதில் எந்தவித சந்தேகமும்  இல்லை. ஆனால், அவர்களின் தற்போதைய ஃபார்ம் என்ன என்பதுதானே, அணியில் அவர்களுக்கான இடத்தைப் பெற்றுக்கொடுக்கும். டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் தொடர்ந்து ஆடிக்கொண்டுதான் இருக்கிறார். ஆனால், ஒருநாள், டி20 போட்டிகளில் குல்தீப் யாதவ், சஹால் ஆகியோரின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருக்கிறது. உள்ளூர் போட்டிகளைத் தொடர்ந்து கவனித்தீர்கள் என்றால், அஷ்வினின் தற்போதைய ஃபார்ம் தெளிவாகப் புரியும். தற்போது நடந்துவரும் சையது முஸ்தாக் அலி டி20 கோப்பையில், 4 போட்டிகளில் 4 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியிருக்கிறார். அதில் 3 விக்கெட்டுகள் பீஹார் அணிக்கெதிராக எடுக்கப்பட்டவை. அதுவும் 8 என்ற எகானமியோடு. எதிரணியின் ரன்ரேட் 6.5-கும் குறைவாக இருந்த போட்டிகளிகூட ஓவருக்கு 8 ரன்களுக்கும் மேல் ரன்களைக் கொடுக்கிறார் அஷ்வின். வேரியேஷன் காட்டுகிறேன் என்று, தன் பெர்ஃபெக்ஷனை முற்றிலுமாக இழந்துவிட்டார். அதுதான், இந்திய ஒருநாள், டி20 அணிகளுக்கான  கதவை  அவருக்கு  அடைத்திருக்கிறது. ரெய்னாவின் நிலை இன்னும் மோசம். முதல் 6 சையது முஸ்தாக் அலி போட்டிகளில் மொத்தமாக  80 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். 4 முறை ஒற்றை இலக்கத்தில் வெளியேறியுள்ளார். ஐ.பி.எல் வந்தால் நிச்சயம் நன்றாக விளையாடுவார்தான். ஆனால், மற்ற நேரங்களிலும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தவேண்டுமே! தேர்வாளர்களுக்கு சமீபத்திய ஃபார்ம்தானே முக்கியம். இந்த டி20 தொடரில், 6 போட்டிகளில் 80 ரன் அடித்த சுரேஷ் ரெய்னாவை தேர்வு செய்வீர்களா, இல்லை 5 போட்டிகளில் 2 சதம் உள்பட 314 ரன்கள் குவித்திருக்கும் ஷ்ரேயாஸ் ஐயரை தேர்வு செய்வீர்களா? நீங்களே சொல்லுங்கள்..!