Published:Updated:

டைம் அவுட்

டைம் அவுட்
பிரீமியம் ஸ்டோரி
News
டைம் அவுட்

டைம் அவுட்

2-0 என இந்தியாவைத் தோற்கடித்து டி20 கோப்பையை வென்றிருக்கிறது ஆஸ்திரேலியா. இரண்டு போட்டிகளிலுமே சேஸிங்கில் இந்தியாவை சிதறடித்தார் மேக்ஸ்வெல். முதல் டி20 போட்டியில் அரை சதம் அடிக்க, இரண்டாவது டி20 போட்டியில் சதம் அடித்தார் மேக்ஸ்வெல். டி20 போட்டியில் மேக்ஸ்வெல் அடித்திருக்கும் மூன்றாவது சென்சுரி இது. இந்த சென்சுரியில் 9 சென்சுரிகள் சிதறின. மேக்ஸ்வெல் மேக்ஸிமம்ஸ்!

டைம் அவுட்
டைம் அவுட்

கிறிஸ் கெய்ல் அதிரடிகள் ஆரம்பம்.. இந்த உலகக்கோப்பையோடு ஓய்வை அறிவித்திருக்கும் கிறிஸ் கெய்ல் இங்கிலாந்துக்கு எதிரானத் தொடரில் சிக்ஸர்களாக விளாசித்தள்ளுகிறார். சிக்ஸர் சாதனையில் ஷாகீத் அஃப்ரியின் 476 சிக்ஸர்கள் என்கிற சாதனையை இங்கிலாந்து தொடரில் ஜஸ்ட் லைக் தட் கடந்துபோனார் கெய்ல். இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 418 ரன்கள் குவிக்க, வெஸ்ட் இண்டீஸ் சேஸிங்கைத் தொடங்கியது. 97 பந்துகளில் 162 ரன்கள் அடித்து இங்கிலாந்துக்கு கிலி கிளப்பினார் கெய்ல். இதில் 14 சிக்ஸர்கள் பறந்தது. கெய்ல் தாக்கிப்பிடித்து நின்றிருந்தால் வெஸ்ட் இண்டீஸ் 418 ரன்களையே சேஸ் செய்திருக்கும். ஜஸ்ட் மிஸ்!

டைம் அவுட்

ங்கப்பதக்கம், உலகசாதனையோடு 2020 ஒலிம்பிக் போட்டியில் நேரடியாகக் கலந்துகொள்ளும் தகுதியும் பெற்று அசத்தியிருக்கிறார் இந்தியாவின் செளரப் சவுத்ரி. உலக துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 10மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் 245 புள்ளிகள் பெற்று உலகசாதனைப்படைத்து தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார் இந்த 16 வயது சுட்டிப்பையன். இவர் ஏற்கெனவே ஜூனியர் பிரிவில் இதே சாதனையை நிகழ்த்தியவர். பல உலக சாதனைகளை நிகழ்த்திக்கொண்டிருக்கும் செளரப் உத்திரபிரதேசத்தின் கலீனா என்னும் குக்கிராமத்தில் பிறந்தவர். வாழ்த்துகள் தம்பி!

டைம் அவுட்
டைம் அவுட்

லங்கையா இது என இலங்கை கிரிக்கெட் ரசிகர்களே ஆச்சர்யப்பட்டு பரவசமாகிறார்கள். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-0 என அதன் சொந்த மண்ணிலேயே வாரிச் சுருட்டியது இலங்கை. முதல் டெஸ்ட்டில் குஸால் பெரேரா கடைசி விக்கெட்டுக்குப் பார்ட்னர்ஷிப் போட்டு 153 ரன்கள் குவித்து இலங்கையை ஆச்சர்ய வெற்றிபெறவைத்தார். இந்த வெற்றி யாரும் எதிர்பாராத விதமாக இரண்டாவது டெஸ்ட்டிலும் தொடர்ந்ததுதான் ஆச்சர்யம். இரண்டாவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் 128 ரன்களுக்கு தென் ஆப்ரிக்கா சுருண்டுபோக இலங்கை எளிதான வெற்றியைப் பெற்றது.
சர்ப்ரைஸ் சிங்கம்ஸ்!

டைம் அவுட்

மெரிக்கன் ஓப்பன், ஆஸ்திரேலியன் ஓப்பன் எனத் தொடர்ந்து கிராண்ட்ஸ்லாம்களை வென்றுவந்த நம்பர் ஒன் வீராங்கனை நவோமி ஒஸாகாவைத் தோற்கடித்து வைரலாகியிருக்கிறார்  பிரான்ஸின் கிறிஸ்டினா மடோனோவிக். 6-3, 6-3  என நேர்செட்களில் துபாய் ஓப்பனில் தோல்வியடைந்தார் ஒஸாகா. துபாய் ஓப்பன் போட்டிகளுக்கு சில நாள்களுக்கு முன்னர்தான் பயிற்சியாளர் சாஷா பாஜினைவிட்டுப்பிரிந்தார் ஒஸாகா. பயிற்சியாளரை விட்டுப் பிரிந்த நேரம்தான் ஒஸாகாவுக்கு கெட்ட நேரமாகிப்போனது என சிலர் புலம்ப, ஒஸாகா ‘‘இதெல்லாம் வீண் கற்பனை’’ என்று சொல்லியிருக்கிறார். மீண்டு வா பொண்ணே!

டைம் அவுட்
டைம் அவுட்

2018-19 சீசனுக்கான கரோபோவா கோப்பையை வென்று, தங்கள் வரலாற்றில் முதல் முறையாக, ஒரு கோப்பையைத் தக்கவைத்துள்ளது மான்செஸ்டர் சிட்டி. செல்சீ அணியுடனான இறுதிப் போட்டியில் 4-3 என டை பிரேக்கரில் வெற்றி பெற்றிருந்தாலும், மீடியாவை ஈர்த்தது செல்சீதான். கூடுதல் நேரம் முடிய 1 நிமிடம் இருக்கும்போது, பெனால்ட்டி ஸ்பெஷலிட்டான கோல்கீப்பர் கேபயாரோவைக் களமிறக்க முடிவு செய்தார் செல்சீ மேனேஜர் சர்ரி. ஆனால், களத்தில் இருந்த இளம் கீப்பர் கெபா, வெளியே வர முடியாது என்று மறுத்து, களத்திலேயே நிற்க, பெரும் சர்ச்சையானது. கூடுதல் நேரம் முடிந்து, பெனால்ட்டி செல்லும் சிட்டி அணியை கார்டியோலா ஊக்கப்படுத்திக்கொண்டிருக்க, உச்சகட்ட கடுப்பில் இருந்த சர்ரி, கோபத்தில் தனியாக சுற்றித்திரிந்தார். பயிற்சியாளரை மதிக்காத கோல்கீப்பரின் நடத்தை, பயிற்சியாளரின் கோபம் என களம் கொடூரமாக இருந்தது. சர்ச்சைகள் சகஜமப்பா!

டைம் அவுட்
டைம் அவுட்
டைம் அவுட்

என்.பி.ஏ பட்டம், ஒலிம்பிக் பதக்கம், ஆஸ்கர் விருது வரிசையில், இப்போது புக்கர் பரிசைக் குறிவைத்திருக்கிறார் கோபே பிரயன்ட். 'டியர் பேஸ்கட்பால்' என்ற தன் அனிமேஷன் குறும்படத்துக்காக, கடந்த ஆண்டு ஆஸ்கர் விருது வென்ற இந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர், இந்த மாதம் தன் முதல் புத்தகத்தை வெளியிடவிருக்கிறார். ‘The Wizenard Series: Training Camp' என்ற அந்தப் புத்தகத்தை பிரபல எழுத்தாளர் வெஸ்லி கிங் கோபேவோடு இணைந்து எழுதியுள்ளார். பல்வேறு இன மக்களும், அவர்களின் வாழ்க்கையும் இந்த ஃபேன்டஸி - விளையாட்டு புத்தகத்தின் மூலம் குழந்தைகளுக்குத் தெரியவரும் என்று சொல்கிறார் பிரயன்ட்!