Published:Updated:

அன்பு வணக்கம்!

அன்பு வணக்கம்!
பிரீமியம் ஸ்டோரி
அன்பு வணக்கம்!

அன்பு வணக்கம்!

அன்பு வணக்கம்!

அன்பு வணக்கம்!

Published:Updated:
அன்பு வணக்கம்!
பிரீமியம் ஸ்டோரி
அன்பு வணக்கம்!

2019 உலகக்கோப்பைக்கு முழுமையாய் இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றன. ஆனால்

அன்பு வணக்கம்!

உலகக்கோப்பையில் நடக்க இருக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை வைத்து இப்போதே அரசியல் ஆட்டம் ஆரம்பித்துவிட்டது. புல்வாமா தீவிரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியை இந்தியா புறக்கணிக்கவேண்டும் என்கிற குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன. ‘’புறக்கணிக்க வேண்டும் என்பதைவிட பாகிஸ்தானை தோற்கடிக்கவேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன்’’ என்று சொன்ன சச்சின் டெண்டுல்கர்கூட எதிர்ப்பு வலுக்க, இந்திய அரசு என்ன முடிவெடுத்தாலும் அதை ஆதரிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

‘‘இந்திய அரசு என்ன சொல்கிறதோ அதன்படி நடந்துகொள்வோம்’’ என்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. ஆனால், விளையாட்டில் ஏன் அரசியலைக் கலக்க வேண்டும் என்கிற கேள்விக்கான பதில் யாரிடமும் இல்லை. விளையாட்டு மனிதர்களை, மனங்களை ஒருங்கிணைக்கும் என்று சொல்லுவார்கள். அந்த விளையாட்டை வைத்துப் பிரிவினை ஏன்?

1996 தொடங்கி கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்து இல்லை என்பதுதானே நமக்கான பெருமை. 1996-ல் பெங்களூருவில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்தபோது நாடே போரில் வெற்றிபெற்றதுபோல் கொண்டாடியது. 1999 கார்கில் போர் நடந்துகொண்டிருந்த நேரத்திலும் இங்கிலாந்து உலகக்கோப்பையில் பாகிஸ்தானை தோற்கடித்தது இந்தியா. எல்லையில் ராணுவ வீரர்கள் பெற்ற வெற்றிக்கு இணையாக அந்த வெற்றியை நாம் எல்லோரும் கொண்டாடினோம்.

2003 உலகக்கோப்பையில் வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ், ஷோயப் அக்தர் என வேகப்பந்து ஜாம்பவான்கள் வீசிய பந்துகளை சச்சின் டெண்டுல்கர் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விரட்டியபோது ஒவ்வொரு இந்திய ரசிகனின் உடலும் சிலிர்த்தது. 2011 உலகக்கோப்பையிலும் இந்திய வெற்றி தொடர்ந்தது. மொஹாலியில் நடந்த ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் 85 ரன்கள் குவிக்க பாகிஸ்தானை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது தோனி தலைமையிலான இந்திய அணி.

2015 உலகக்கோப்பையை பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்துடன்தான் தொடங்கியது இந்தியா. விராட் கோலி சதம் அடிக்க இந்தியா 300 ரன்கள் குவிக்க, சேஸ் செய்ய முடியாமல் தோற்றுப்போனது பாகிஸ்தான். 2019-ல் மீண்டும் ஒருமுறை உலகக்கோப்பையில் பாகிஸ்தானை வெல்லக்கூடிய தருணம் நிகழவிருக்கிறது. அதை ஏன் தடுப்பானேன்.

சச்சின் டெண்டுல்கர் சொன்னதுபோல பாகிஸ்தானை களத்தில் வீழ்த்துவோம்!

அன்புடன்

ஆசிரியர்