Published:Updated:

`தோனியை அவுட்டாக்காமல் போட்டியை வெல்ல முடியாது!’ - நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் நீஷம் #NZvIND

`தோனியை அவுட்டாக்காமல் போட்டியை வெல்ல முடியாது!’ - நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் நீஷம் #NZvIND
`தோனியை அவுட்டாக்காமல் போட்டியை வெல்ல முடியாது!’ - நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் நீஷம் #NZvIND

`தோனியை அவுட்டாக்காமல் வெற்றிபெற முடியாது என்பது எங்களுக்குத் தெரியும்’ என நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் ஜிம்மி நீசம் கருத்துத் தெரிவித்திருக்கிறார். 

`தோனியை அவுட்டாக்காமல் போட்டியை வெல்ல முடியாது!’ - நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் நீஷம் #NZvIND

Photo Credit: Twitter/BasinReserve

நியூஸிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் போட்டி, வெலிங்டன் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. முதல் 3 போட்டிகளைத் தொடர்ச்சியாக வென்று, இந்திய அணி தொடரையும் கைப்பற்றியிருக்கும் நிலையில், 4-வது போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை நியூஸிலாந்து பதிவுசெய்தது. இதனால், நாளையை போட்டியில் வென்று, டி20 தொடரை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள  நியூஸிலாந்து வீரர்கள் முயற்சிசெய்வார்கள்.

அதேபோல, இந்திய அணி தரப்பில் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், காயம் காரணமாக 3 மற்றும் 4-வது போட்டியில் பங்கேற்காத தோனி, நாளைய போட்டியில் களமிறங்குகிறார். அந்தப் போட்டியில் வென்று, தொடரை 4-1 என்ற கணக்கில் நிறைவுசெய்யும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது. 

`தோனியை அவுட்டாக்காமல் போட்டியை வெல்ல முடியாது!’ - நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் நீஷம் #NZvIND

Photo Credit: Twitter/BLACKCAPS

இந்தப் போட்டிகுறித்துப் பேசிய நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியைப் பாராட்டியிருக்கிறார். தோனி குறித்துப் பேசிய அவர், ``தோனி ஒரு சிறந்த வீரர். அவரது சாதனைகள் அவரைப் பற்றி பேசும். 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை அணியில் அவர் இடம்பெற வேண்டுமா இல்லையா என்பதுகுறித்து சில மாற்றுக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இந்திய ஊடகங்களில் அதுகுறித்து சில கருத்துகள் கூறப்பட்டுவருகின்றன. ஆனால், நான் ஏற்கெனவே கூறியபடி அவரது சாதனைகள் அவரைப் பற்றி பேசும். 

மிடில் ஓவர்களில் அவர் மிகவும் அமைதியாகக் களத்தில் காணப்படுவார். ஆனால், நீங்கள் அவருக்கு பந்துவீசும்போது, அவரை அவுட்டாக்காமல் வெற்றிபெற முடியாது என்பதை நீங்கள் உணர்வீர்கள். நாளைய போட்டியில், நாங்கள் அதைச் செய்வோம் என்று நம்புகிறேன்’’ என்றார்.

`தோனியை அவுட்டாக்காமல் போட்டியை வெல்ல முடியாது!’ - நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் நீஷம் #NZvIND

Photo Credit: Twitter/BasinReserve

நியூஸிலாந்து அணியின் கேம் பிளான் குறித்துப் பேசிய அவர், `` பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுக்காமல், ஹாமில்டன் போட்டியைப் போல பேட்ஸ்மேன்களும் சிறப்பாகப் பங்களிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். இந்திய அணியின் டாப் ஆர்டரைப் பார்த்தால் ஒரு விஷயம் உங்களுக்குத் தெரியவரும். புள்ளிவிவரங்களைப் பார்த்தால், கடந்த 2 ஆண்டுகளில் அவர்களில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், மற்ற நாடுகளின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களைவிட 20 சதவிகிதத்துக்கும் மேலான சராசரியை வைத்திருக்கிறார்கள் என்பது தெரியும். அவர்கள் (இந்திய அணி), வலிமையான டாப் ஆர்டரைக் கொண்டிருக்கிறார்கள்’’ என்றார்.