Published:Updated:

"பேருக்குத் தமிழ் டீம் இல்ல... டீமே தமிழ்நாடுதான்.." - ஸ்போர்ட்ஸ் விகடன் பிப்ரவரி! #SportsVikatan

"பேருக்குத் தமிழ் டீம் இல்ல... டீமே தமிழ்நாடுதான்.." - ஸ்போர்ட்ஸ் விகடன் பிப்ரவரி! #SportsVikatan
"பேருக்குத் தமிழ் டீம் இல்ல... டீமே தமிழ்நாடுதான்.." - ஸ்போர்ட்ஸ் விகடன் பிப்ரவரி! #SportsVikatan

சென்னை சிட்டி எஃப்.சி - யாரும் எதிர்பாராத வகையில் ஐ-லீக் தொடரின் புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் அமர்ந்திருக்கிறது. முந்தைய இரண்டு சீஸன்களிலும் சேர்த்தே 8 வெற்றிகள் மட்டும் பெற்றிருந்த அந்த அணி, இப்போது சாம்பியன் பட்டத்தை நோக்கி நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த ஓர் அணி வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறது என்பதைத்தாண்டி, தமிழக வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஓர் அணி சாம்பியன் ஆகப்போகிறது என்பதுதான் இதில் கவனிக்கவேண்டிய விஷயம். 

ஸ்போர்ட்ஸ் விகடன் பிப்ரவரி மாத இதழை டவுன்லோடு செய்ய : http://bit.ly/2MObbdm

இரண்டு முறை ஐ.எஸ்.எல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னையின் எஃப்.சி அணிக்காக விளையாடியுள்ள தமிழக வீரர்கள் இருவர் மட்டுமே. அதிலும், ஒருவர் அணியிலிருந்து போன பின்னர்தான் இன்னொருவர் விளையாடினார். கால்பந்து மட்டுமல்ல, மற்ற விளையாட்டுகளிலும் சென்னை அணிகளின் நிலை இப்படித்தான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பத்ரிநாத், அஷ்வினுக்குப் பிறகு இப்போதெல்லாம் ஒரு தமிழக வீரருக்குக்கூட பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பதில்லை. பெயருக்கு ஒருவர் ஸ்குவாடில் இருக்கிறார். தமிழ்த் தலைவாஸ், சென்னை ஸ்மேஷர்ஸ்... எல்லா அணிகளும் இப்படித்தான். பெயரில் மட்டும்தான் சென்னையும் தமிழும்..! 

"பேருக்குத் தமிழ் டீம் இல்ல... டீமே தமிழ்நாடுதான்.." - ஸ்போர்ட்ஸ் விகடன் பிப்ரவரி! #SportsVikatan

ஸ்போர்ட்ஸ் விகடன் பிப்ரவரி மாத இதழை டவுன்லோடு செய்ய : http://bit.ly/2MObbdm

சென்னை சிட்டி எஃப்.சி இதற்கெல்லாம் விதிவிலக்கு. ஒவ்வோர் ஆட்டத்தின் பிளேயிங் லெவனிலும் குறைந்தபட்சம் 4 தமிழக வீரர்களாவது களமிறங்குகிறார்கள். அவர்களுக்குக் காயம் ஏற்பட்டால், அந்த இடத்தை நிரப்ப இன்னொரு தமிழக வீரர் தயாராக இருக்கிறார். மற்ற தமிழக அணிகளைப்போல் ஒன்று, இரண்டு என இல்லாமல் மொத்தம் 17 தமிழக வீரர்களை உள்ளடக்கியுள்ளது அந்த அணி. விளைவு - இப்போது தமிழகத்தின் ஒவ்வோர் ஊரிலிருந்தும் ஒரு ஐ-லீக் சாம்பியன் உருவாகப்போகிறார். சென்னை சிட்டி அணியின் தமிழக வீரர்களை நேரில் சந்தித்து, அவர்களுடன் நடத்திய உரையாடல்தான், இந்த ஸ்போர்ட்ஸ் விகடன் இதழின் கவர் ஸ்டோரி. 

இத்தனை நாளாகச் சர்வதேச வீரர், வீராங்கனைகள் மட்டுமே நாம் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தோம். அவர்களை மட்டுமே கொண்டாடிக்கொண்டிருந்தோம். நம் வீட்டில் இருக்கும் குழந்தைகள், அந்த இடத்தை அடையும் என்று நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டோம். ஆனால், இப்போது அதெல்லாம் நடந்திருக்கிறது. `கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டிகளில், பள்ளிகளிலும் வீதிகளிலும் விளையாட்டுக் கனவோடு சுற்றித் திரிந்த சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. அதைப் பற்றிய கட்டுரையும் இந்த இதழில் ஸ்பெஷல். 

தமிழ் கமென்ட்ரியை நாம் ஒருகட்டத்தில் வெறுக்க, அதை ரசிக்கும்படி மாற்றியவர் முத்து. தன் கிரிக்கெட் ஆர்வத்தை, தன் குரலின் வாயிலாக வெளிப்படுத்தி, தனக்கென ஒரு ரசிகர் படையை உருவாக்கியுள்ளார். அதேபோல், இன்னொரு கிரிக்கெட் ஆர்வலர் - கிறிஸ்டினா பியர்ஸ். இவரது ஆயுதம் குரல் அல்ல, தூரிகை. கிரிக்கெட்டும், கிரிக்கெட் நிமித்தமுமாக வாழ்ந்து, கிரிக்கெட் ஓவியங்களை வரைந்து தள்ளியிருக்கிறார். இந்த இருவருடனுமான நேர்காணல், இந்த இதழை கலர்ஃபுல் ஆக்கியிருக்கிறது. 

மோட்டோர் ஸ்போர்ட்ஸ் ரசிகர்களுக்கும் இந்த இதழில் விருந்து இருக்கிறது. அடுத்த ஃபார்முலா 1 சீசனில், என்னென்ன டெக்னிக்கல் மாற்றங்கள் நடக்கப்போகின்றன என்கிற கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. ஆஸ்திரேலிய ஓப்பனில் நடாலை மிரட்டிய ஜோகோவிச்சின் அதிரடி ஆட்டம், இங்கிலாந்தை ஓடவிட்ட ஹோல்டரின் அதிரடி, இந்தியாவுக்கு அடுத்து இலங்கையை அலறவைத்துக்கொண்டிருக்கும் ஜை ரிச்சர்ட்ஸனின் பௌலிங் பற்றிய கட்டுரைகளும் இந்த இதழில் உண்டு. 

ஸ்போர்ட்ஸ் விகடன் பிப்ரவரி மாத இதழை டவுன்லோடு செய்ய : http://bit.ly/2MObbdm