Published:Updated:

200 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் வீராங்கனை! - மிதாலி ராஜ் புதிய சாதனை

200 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் வீராங்கனை! - மிதாலி ராஜ் புதிய சாதனை
200 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் வீராங்கனை! - மிதாலி ராஜ் புதிய சாதனை

சர்வதேச அளவில் 200 போட்டிகளில் பங்குபெற்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் படைத்தார். 

நியூஸிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் இந்தச் சாதனையைப் படைத்தார். 1999-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான மிதாலி ராஜ், 7 சதங்கள் உட்பட 6,622 ரன்களுடன் மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். இந்திய மகளிர் அணி இதுவரை 263 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், அதில் 200 போட்டிகளில் மிதாலி ராஜ் விளையாடி இருக்கிறார். இதுதவிர 10 டெஸ்ட் மற்றும் 85 டி20 போட்டிகளில் அவர் பங்கேற்றிருக்கிறார். நியூஸிலாந்து போட்டிக்கு முன்பாகக் கேக் வெட்டி இந்தச் சாதனையை இந்திய மகளிர் அணியினர் கொண்டாடினர்.

நியூஸிலாந்துக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 28 பந்துகளை எதிர்கொண்ட மிதாலி, 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி, 44 ஓவர்களில் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தீப்தி ஷர்மா 52 ரன்கள் எடுத்தார். 150 ரன்கள் இலக்குடன் விளையாடிய நியூஸிலாந்து அணி, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 29.2 ஓவர்களில் இலக்கை எட்டியது. சூஸி பேட்ஸ் 57 ரன்களும் கேப்டன் சேட்டர்த்வெய்ட் 66 ரன்களும் எடுத்தனர். மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை இந்திய மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.