Published:Updated:

சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரியை பயன்படுத்த இன்று மட்டும் அனுமதி

சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரியை பயன்படுத்த இன்று மட்டும் அனுமதி
சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரியை பயன்படுத்த இன்று மட்டும் அனுமதி
சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரியை பயன்படுத்த இன்று மட்டும் அனுமதி

புதுடெல்லி: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளை இன்று மட்டும் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் மேம்பாட்டு பணிகள் மற்றும் கட்டுமான பணிகள் நடைபெறுகிறது. அங்கு ரசிகர்கள் அமர்ந்து போட்டிகளை காணும் ஐ. ஜே., கே ஆகிய 3 கேலரிகள் முன் அனுமதியின்றி கட்டப்பட்டதாக கூறி அவற்றுக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்து உள்ளது.

சென்னையில் இன்று ஐ.பி.எல். போட்டி நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம்  உச்ச நீதிமன்றத்தில் 3 கேலரிகளில் வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி மனு தாக்கல் செய்தது.

அதில், ஏற்கனவே 7 போட்டிகள் எந்தவித இடையூறும் இன்றி நடத்தப்பட்டு விட்டது. மேலும் இன்று நடைபெறும் போட்டிகளுக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு விட்டன. எனவே இந்த 3 கேலரிகளில் வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

##~~##
இந்த மனு நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், தீபக் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது, சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட 3 கேலரிகளை பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று மாநகராட்சி சார்பில் ஆஜராக வழக்கிறஞர் வாதிட்டார்.
தகுந்த அனுமதியின்றி போட்டிகளை நடத்த மாட்டோம் என்று கிரிக்கெட் சங்கம் சார்பில் உத்தரவாதம்  அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இன்று ஒருநாள் மட்டும் மூன்று கேலரிகளை பயன்படுத்த அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.