Published:Updated:

அதிரடி காட்டிய `கிவி’ பேட்ஸ்மேன்கள்! - தொடரில் முதலாவது வெற்றியை ருசித்தது நியூஸிலாந்து

அதிரடி காட்டிய `கிவி’ பேட்ஸ்மேன்கள்! - தொடரில் முதலாவது வெற்றியை ருசித்தது நியூஸிலாந்து
அதிரடி காட்டிய `கிவி’ பேட்ஸ்மேன்கள்! - தொடரில் முதலாவது வெற்றியை ருசித்தது நியூஸிலாந்து

இந்திய அணிக்கு எதிரான 4 -வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி அபார வெற்றிபெற்றுள்ளது. 

அதிரடி காட்டிய `கிவி’ பேட்ஸ்மேன்கள்! - தொடரில் முதலாவது வெற்றியை ருசித்தது நியூஸிலாந்து

ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்ற 4 -வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து, பந்துவீச முடிவுசெய்தது. இந்திய அணி டிரெண்ட் போல்ட்டின் அபார பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. இறுதியில், இந்திய அணி 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

அதிரடி காட்டிய `கிவி’ பேட்ஸ்மேன்கள்! - தொடரில் முதலாவது வெற்றியை ருசித்தது நியூஸிலாந்து

அதன் பின்னர், 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி, முதல் பந்திலிருந்தே அதிரடியில் இறங்கியது. கப்தில் 14 ரன்னிலும், வில்லியம்சன் 11 ரன்னிலும், புவனேஷ்வர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இறுதியில், நியூஸிலாந்து அணி 14.4 ஓவர்களில் 93 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. தொடக்க ஆட்டக்காரர் நிகோல்ஸ் 30 ரன்னுடனும், டெய்லர் 37 ரன்னுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதிரடி காட்டிய `கிவி’ பேட்ஸ்மேன்கள்! - தொடரில் முதலாவது வெற்றியை ருசித்தது நியூஸிலாந்து

இதன்மூலம், 4 போட்டிகளின் முடிவில் நியூஸிலாந்து முதலாவது வெற்றியைப் பெற்றுள்ளது. தற்போது 3-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. 212 பந்துகள் மீதம் இருக்கும்போதே நியூஸிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. அந்த வகையில், இந்திய அணிக்கு இது மோசமான தோல்வியாகப் பார்க்கப்படுகிறது.  2010 -ம் ஆண்டு, இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 209 பந்துகள் மீதம் இருக்கும்போது, இந்திய அணி தோல்வியடைந்திருந்ததே மோசமான தோல்வியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் போட்டிக்கான ஆட்டநாயகன் விருதை டிரெண்ட் போல்ட் வென்றார். 5 -வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி, வரும் பிப் 3 -ம் தேதி நடைபெற உள்ளது.