Published:Updated:

ஐ.பி.எல்: பொல்லார்ட் அதிரடியில் வீழ்ந்தது சன் ரைசர்ஸ்; மும்பை நம்பர் ஒன்

ஐ.பி.எல்: பொல்லார்ட் அதிரடியில் வீழ்ந்தது சன் ரைசர்ஸ்; மும்பை நம்பர் ஒன்
ஐ.பி.எல்: பொல்லார்ட் அதிரடியில் வீழ்ந்தது சன் ரைசர்ஸ்; மும்பை நம்பர் ஒன்
ஐ.பி.எல்: பொல்லார்ட் அதிரடியில் வீழ்ந்தது சன் ரைசர்ஸ்; மும்பை நம்பர் ஒன்

மும்பை: மும்பையில் நேற்றிரவு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 62வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் பொல்லார்ட்டின் அதிரடி சிக்சர்களால் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி வீழ்ந்தது. புள்ளிப் பட்டியலில் மும்பை அணி நம்பர் ஒன் இடத்தை பிடித்தது.

டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பட்டேல் மற்றும் தவான் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். பட்டேல் 14 பந்தில் 26 ரன் எடுத்த நிலையில், மலிங்கா பந்தில் ஆட்டம் இழந்தார்.

பின்னர் வந்த விஹாரி, தவானுடன் ஜோடி சேர்ந்து விளையாடினார். இந்த ஜோடி சேர்ந்து 73 ரன்கள் குவித்தது. தவான் 59 ரன்னில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஒயிட், அதிரடியாக விளையாடி 23 பந்தில் 43 ரன்கள் குவித்தார். இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது.

179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக சச்சின் - ஸ்மித் களமிறங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஸ்மித் 21 ரன் எடுத்தபோது, சர்மா வீசிய பந்தில் கிளின் போல்ட் ஆனார். பின்னர்  தினேஷ் கார்த்திக் விளையாடினார். 31 பந்தில் 38 ரன் எடுத்திருந்த சச்சின் காயம் காரணமாக வெளியேறினார். நன்றாக விளையாடி வந்த தினேஷ் கார்த்திக் 30 ரன் எடுத்தபோது ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த ராய்டுயும் 2 ரன்னில் வெளியேற, மும்பை 13.2 ஓவருக்கு 99 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

##~~##
4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பொல்லார்ட் - சர்மா ஹைதராபாத் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். பொல்லார்ட் 20 பந்துகளில் 50 ரன்களை அடித்து அசத்தினார். இறுதியில் 6 பந்துகளில் 7 ரன் எடுக்க வேண்டிய நிலையில், பொல்லார்ட் 2 சிக்சர்களை அடித்து மும்பை அணியை வெற்றி பெறச்செய்தார். சிறப்பாக விளையாடிய பொல்லார்ட், 27 பந்தில் 66 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததோடு ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இதில்  2 பவுண்டரி, 8 சிக்சர் அடங்கும்.
14 போட்டிகளில் விளையாடி உள்ள மும்பை இந்தியன்ஸ் 10 வெற்றிகளுடன், 20 புள்ளிகள் பெற்று முதல் இடத்தைப் அடைந்தது. சென்னை சூப்பர் கிங்சை பின்னுக்கு தள்ளப்பட்டது.