Published:Updated:

`உலகக் கோப்பையை வெல்ல இந்த அணிகளுக்குத்தான் அதிக வாய்ப்பு!’ - டூ ப்ளசிஸ் கணிப்பு

`உலகக் கோப்பையை வெல்ல இந்த அணிகளுக்குத்தான் அதிக வாய்ப்பு!’ - டூ ப்ளசிஸ் கணிப்பு
`உலகக் கோப்பையை வெல்ல இந்த அணிகளுக்குத்தான் அதிக வாய்ப்பு!’ - டூ ப்ளசிஸ் கணிப்பு

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் குறித்து தென்னாப்பிரிக்கா கேப்டன் டூ ப்ளசிஸ் பேசியுள்ளார். 

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் மே மாத இறுதியில் இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதன் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியைத் தென்னாப்பிரிக்கா எதிர்கொள்கிறது. உலகக்கோப்பை போட்டிகளில் எப்போதும் ராசியில்லாத அணியாகவே தென்னாப்பிரிக்கா இருந்து வருகிறது. இந்த முறையும் அந்த அணி டூப்ளசிஸ் தலைமையில் பலமாகவே இருக்கிறது. ஆனால் உலகக்கோப்பை என்று வந்துவிட்டால் எந்த அணியையும் கணிக்க முடியாது. இதற்கிடையே, டூ ப்ளசிஸிடம் தென்னாப்பிரிக்கா இந்த முறை கோப்பையைக் கைப்பற்றுமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. 

அதற்குப் பதிலளித்த அவர், ``உலகக் கோப்பை என்று வந்தவுடன் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஒருவித நெருக்கடி ஏற்பட்டு விடுகிறது. அதனால் இந்த முறை எந்தவித நெருக்கடி, மனஅழுத்தம் இல்லாமலே செல்லப்போகிறோம். வெற்றி என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் விளையாடினால் அழுத்தம் குறையும். நன்றாக விளையாட முடியும். எங்கள் அணியில் நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். அவர்கள் வாய்ப்பை நினைத்து உற்சாகத்தில் இருக்கிறார்கள். கடந்த காலங்களில் இருந்த எங்களின் செயல்பாடுகளின் தவறுகளை உணர்ந்துள்ளேன். எதிர்பார்ப்புகள் நமது தோள்களில் அதிக பாரம் ஏற்றிவிடும். அதனால் அழுத்தம் இல்லாமல் உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்க வேண்டும். அப்போதும்தான் சிறப்பான திறமையை வெளிப்படுத்த முடியும்.

கடந்த காலங்களில் நிறைய போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளோம். இதனால் நாங்கள் வலுவான அணி என்று பேப்பர்களில் வருகிறது. பேப்பர்களில் மட்டும் பலமாக இருப்பது போதாது. ஏனெனில் கிரிக்கெட் பேப்பர்களில் விளையாடும் விளையாட்டு அல்ல. மற்ற அணிகளைப் பார்க்கும் போது நாங்கள் இப்போது வலுவான அணி ஒன்றும் கிடையாது. எங்கள் அணி வீரர்கள் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு நான் கூறும் அட்வைஸ், உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்பதற்காக சூப்பர் மேனாக மாற வேண்டாம். அங்குச் சென்ற நம் சிறப்பைக் கொடுத்தாலே போதும்" என்று பேசினார். 

அப்போது அவரின் எந்த அணி உலக்கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என்று கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ``இந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் கோப்பை வெல்லவே அதிக வாய்ப்புள்ளது" என்று கூறியுள்ளார்.