Published:Updated:

``விளையாட்டை மதிக்க வேண்டும்!” -ஹர்திக் பாண்ட்யா குறித்துப் பேசிய கேப்டன் கோலி

``விளையாட்டை மதிக்க வேண்டும்!” -ஹர்திக் பாண்ட்யா குறித்துப் பேசிய கேப்டன் கோலி
``விளையாட்டை மதிக்க வேண்டும்!” -ஹர்திக் பாண்ட்யா குறித்துப் பேசிய கேப்டன் கோலி

இந்திய அணிக்குத் திரும்பிய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா குறித்துப் பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி, அணியின் சமநிலைக்கு ஹர்திக் உதவுவார் என்றார்.

Photo: Twitter/BCCI

இந்திய அணி தற்போது, நியூஸிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. 5 போட்டிகள்கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி முதல் 3 போட்டிகளிலே வெற்றிபெற்று கைபற்றிவிட்டது. இன்னும் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், நேற்றைய 3 -வது ஒருநாள் போட்டிக்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் கேப்டன் கோலி, பாண்ட்யா அணிக்குத் திரும்பியது குறித்துப் பேசினார்.

Photo: Twitter/BCCI 

தனியார் தொலைக்காட்சி சேனல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாண்ட்யா  மற்றும் ராகுல் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிறு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் அணியில் இடம்பிடித்தார் ஹர்திக். தமிழகத்தின் விஜய் ஷங்கருக்குப் பதிலாக அணியில் இடம்பிடித்த அவர், இரண்டு விக்கெட் எடுத்ததுடன்  அற்புதமான கேட்ச் ஒன்றைப் பிடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். 

Photo: Twitter/BCCI

இந்நிலையில், பாண்ட்யா அணிக்குத் திரும்பியது குறித்துப் பேசிய கோலி,  ``அவர் அணிக்குத் திரும்பியது நல்ல விஷயம். பந்துவீச்சு, பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்துப் பிரிவிலும் சிறப்பாகச் செயல்படக்கூடியவர். அணியின் சமநிலைக்கு அவர் உதவுவார். இந்தப் போட்டியில், அவர் சிறப்பாகச் செயல்பட்டார். பந்துகளைத் தொடர்ந்து சரியான இடத்தில் அவர் வீசினார். இதற்காக அவர் உழைத்திருக்கிறார். இந்தப் போட்டியில் அவரது பந்துவீச்சை கவனித்தால் அது தெரியும். நீங்கள் விளையாட்டை மதிக்கிறீர்கள் என்றால், அதை நீங்கள் திரும்பப் பெறுவீர்கள். வரும் காலத்தில்,  ஹர்திக் நல்ல கிரிக்கெட்டராக இருப்பார் என நம்புகிறேன்” என்றார்.