Published:Updated:

`ஷமி வேகம்; டெய்லர் நிதானம்’ - தொடரை வெல்ல இந்திய அணிக்கு 244 ரன்கள் இலக்கு!

`ஷமி வேகம்; டெய்லர் நிதானம்’ - தொடரை வெல்ல இந்திய அணிக்கு 244 ரன்கள் இலக்கு!
`ஷமி வேகம்; டெய்லர் நிதானம்’ - தொடரை வெல்ல இந்திய அணிக்கு 244 ரன்கள் இலக்கு!

நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 244 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

`ஷமி வேகம்; டெய்லர் நிதானம்’ - தொடரை வெல்ல இந்திய அணிக்கு 244 ரன்கள் இலக்கு!

நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளை வென்றுள்ள இந்திய அணி இன்று மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. மவுன்ட் மவுங்காநூயில் தொடங்கியுள்ள இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். காயம் காரணமாக தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்குப் பதிலாகத் தினேஷ் கார்த்திக்கும் விஜய் சங்கருக்குப் பதிலாக ஹர்டிக் பாண்டியாவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த இரண்டு மாற்றங்களுடன் இந்தியா முதலில் பந்துவீசியது. நியூஸிலாந்து அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக கப்திலும் முன்ரோவும் களமிறங்கினர். 

`ஷமி வேகம்; டெய்லர் நிதானம்’ - தொடரை வெல்ல இந்திய அணிக்கு 244 ரன்கள் இலக்கு!

இந்த ஜோடியை முதல் 10 ரன்களிலே ஷமி பிரித்தார். முதல் விக்கெட்டாக முன்ரோ வெளியேற கப்திலை புவனேஷ்வர் குமார் வெளியேற்றினார். கேப்டன் கேன் வில்லியசம்சனும் நிலைத்து நின்று ஆட தவறினார். ராஸ் டெய்லர் - நாதம் இணை அணியைச் சரிவில் இருந்து மீட்டது. இருவரும், இந்திய பந்துவீச்சை சமாளித்து நிதானமாக ஆடி அரை சதம் கடந்தனர். நாதம் 51 ரன்கள் எடுத்திருந்த சஹால் பந்துவீச்சில் ராயுடுவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன்பின் வந்த மற்ற வீரர்கள் அனைவரும் சொதப்பினர். இறுதியில் நன்றாக ஆடிக்கொண்டிருந்த டெய்லரும் 93 ரன்களில் வெளியேறி சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். 

`ஷமி வேகம்; டெய்லர் நிதானம்’ - தொடரை வெல்ல இந்திய அணிக்கு 244 ரன்கள் இலக்கு!

நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடினாலும், இந்திய பந்துவீச்சில் ரன்கள் சேர்ப்பதில் மெத்தனம் காட்டினர். இறுதியில் 49 ஓவர்களில் நியூஸிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 243 ரன்கள் சேர்த்தது. இந்தியா சார்பில் ஷமி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் 244 ரன்கள் எடுத்தால் தொடரை கைப்பற்றலாம் என இந்திய அணி விளையாடவுள்ளது. முன்னதாக சர்ச்சைகளுக்குப் பிறகு, அணிக்குத் திரும்பியுள்ள ஹர்திக் பாண்டியா சிறப்பாகச் செயல்பட்டார். இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியவர், வில்லியம்சனை சிறப்பாக கேட்ச் பிடித்து வெளியேற்றித் திருப்பு முனையாக அமைந்தார்.