Published:Updated:

டைம் அவுட்

டைம் அவுட்
பிரீமியம் ஸ்டோரி
News
டைம் அவுட்

டைம் அவுட்

தொடர்ந்து இரண்டு கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்று டென்னிஸின் புதிய சென்சேஷனாக உருவெடுத்திருக்கிறார் நவோமி ஒசாகா. கடந்த ஆண்டு, அமெரிக்க ஓப்பனோடு நிறைவு செய்தவர், இந்த வருடத்தை ஆஸ்திரேலிய ஓப்பன் வெற்றியோடு அசத்தலாகத் தொடங்கியிருக்கிறார்.இப்போது டென்னிஸ் ரேங்கிங்கிலும் நம்பர் 1 இடத்தைப் பிடித்துவிட்டார். செரீனா வில்லியம்ஸுக்குப் பிறகு, தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய எந்த வீராங்கனையையும் டென்னிஸ் உலகம் பார்க்கவில்லை. எல்லோருமே ஓரிரு கிராண்ட் ஸ்லாம் வெற்றிகளோடு கிளம்பிவிடுவார்கள். ஆனால், அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவார் இந்த 21 வயது ஜப்பான் லேடி. #இனி ஒஸாகா புயல்!

டைம் அவுட்
டைம் அவுட்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நெய்மருக்கு மீண்டும் அடி. ஃபிரெஞ்ச் கப் தொடரில் ஸ்ட்ராஸ்பர்க் அணிக்கு எதிரான போட்டியின்போது, பி.எஸ்.ஜி கிளப்பின்  வீரர் நெய்மரின் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனையில் அவர், பத்து வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால், அவர் சாம்பியன்ஸ் லீக் தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிரான காலிறுதிக்கு முந்தைய சுற்றின் இரு போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார். இது பி.எஸ்.ஜி-க்கு பின்னடைவாக அமையும்.   #நெய்மரை காலிப்பண்ணிட்டாங்களே!

டைம் அவுட்

ந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மின்டன் பட்டத்தை முதல் முறையாக வென்று அசத்தியிருக்கிறார் சாய்னா நேவால். இறுதிப் போட்டியில் உலக சாம்பியன் கரோலினா மரின் காயத்தால் வெளியேற, சாம்பியன் பட்டம் வென்றார் சாய்னா. தொடர்ந்து காயத்தாலும், ஃபார்ம் அவுட்டாலும் அவதிப்பட்டுவரும் சாய்னா, மீண்டும் ஃபார்முக்கு திரும்ப இந்த வெற்றி மிகப்பெரிய பூஸ்ட். #மீண்டுவா சாய்னா!

டைம் அவுட்

சென்னையைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் செம ஹேப்பி. காமன்வெல்த் போட்டியில் தங்கம், ஏசியன் கேம்ஸில் வெண்கலம், அர்ஜுனா விருது என கடந்த ஆண்டு பட்டையைக் கிளப்பினார். இந்த சீசனையும் ஒரு சாதனையோடு தொடங்கியுள்ளார். கத்தார் ஓப்பனில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியதை அடுத்து, சர்வதேச தரவரிசையில் 28-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் சத்யன். இதன்மூலம், ரேங்கிங்கில் முப்பது இடத்துக்குள் வந்த முதல் இந்தியர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். சத்யன் இதே ஃபார்மில் நீடித்தால், ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு டேபிள் டென்னிஸில் இருந்து ஒரு பதக்கம் நிச்சயம். #வாழ்த்துகள் சத்யன்!

டைம் அவுட்

ன்னுடைய ஆருடத்தால் கால்பந்து உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார் முன்னாள் பார்சிலோனா கேப்டன் ஜாவி. ஆசிய கோப்பை கால்பந்துப் போட்டியில் ஜப்பான், கத்தார் அணிகள் ஃபைனலில் மோதும் என்று சொல்லியிருந்தார் அவர். ஆஸ்திரேலியா, தென் கொரியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பலமான அணிகள் இருந்தும், அவர் அந்த இரண்டு அணிகளைத்தான் தேர்வு செய்தார். அவர் சொன்னதுபோலவே ஜப்பான், கத்தார் அணிகள் ஃபைனலுக்குள் நுழைய  ‘பால் தி ஆக்டோபஸ்’ போல் ‘ஜாவி தி சூத்சேயர்’ என்று அவரை இப்போது கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் பார்கா வெறியர்கள். # ஜோவி ஜோசியங்கள்!