Published:Updated:

ஐ.பி.எல்: பெங்களூருக்கு கொல்கத்தா பதிலடி

ஐ.பி.எல்: பெங்களூருக்கு கொல்கத்தா பதிலடி
ஐ.பி.எல்: பெங்களூருக்கு கொல்கத்தா பதிலடி
ஐ.பி.எல்: பெங்களூருக்கு கொல்கத்தா பதிலடி

ராஞ்சி: ராஞ்சியில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூர் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி பதிலடி கொடுத்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த 60வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சும், பெங்களூர் ராயல் சேலஞ்சும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் கம்பீர் முதலில் பெங்களூரை பேட் செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

பெங்களூர் அணியின் இன்னிங்சை புஜாராவும், கிறிஸ் கெய்லும் தொடங்கினர். புஜாரா 5 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி 17 ரன்னில் காலிசின் பந்தில் போல்டு ஆனார். 13வது ஓவர் வரை களத்தில் நின்றும் தாக்கத்தை ஏற்படுத்தாத கெய்ல் 33 ரன்னில் நடையை கட்டினார்.

பின்னர் வந்த டி வில்லியர்ஸ் 28 ரன்னில் வீழ்ந்தார். முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தொடக்கம் முதல் இறுதி வரை ஆட்டம் உப்புசப்பின்றி மந்தமாகவே நகர்ந்தது. 20 ஓவர் முடிவில் பெங்களூர் அணியால் 9 விக்கெட்டுக்கு 115 ரன்களே எடுக்க முடிந்தது. சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் களம் இறங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. 2வது பந்திலேயே பிஸ்லா டக் அவுட் ஆனார். கேப்டன் கவுதம் கம்பீரும் 14 ரன்னில் வெளியேறினார். இதைத் தொடர்ந்து காலிஸ் களம் இறங்கிய பொறுப்பாக விளையாடினார். 41 ரன்கள் எடுத்திருந்தபோது காலிஸ் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மனோஜ் திவாரி 24 ரன்கள் சேகரித்தார்.

##~~##
கடைசி ஓவரில் கொல்கத்தாவின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட போது, ரையான் டென் டஸ்சாட் பவுண்டரியுடன் வெற்றிக்கான ரன்னை அடித்து முடித்து வைத்தார். கொல்கத்தா அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஏற்கனவே பெங்களூரில் நடந்த ஆட்டத்தில் அந்த அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்த தோல்விக்கும் கொல்கத்தா பழிதீர்த்துக் கொண்டது. ஆல்-ரவுண்டராக ஜொலித்த கொல்கத்தா வீரர் காலிஸ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
14வது ஆட்டத்தில் விளையாடிய கொல்கத்தா அணிக்கு இது 6வது வெற்றியாகும். அதே சமயம் 14வது ஆட்டத்தில் விளையாடி 6வது தோல்வியை சந்தித்தது பெங்களூர் அணி.